சிரிக்கலாம் வாங்க 12 - சிரிக்கலாம் வாங்க
என்ன டாக்டர், அந்த பேஷண்டுக்கு ஆஸ்பத்திரில குடுத்த உடைமுழுக்க ஏதேதோ கம்பெனி விளம்பரமா இருக்கு?
அந்தக் கம்பெனிகள் எல்லாம் சேர்ந்துதான் அவரோட அறுவை சிகிச்சைக்கு ஸ்பான்சர் பண்றாங்க.
சரியாப் போச்சு.
-***-
அவ்வளவு பெரிய வண்டியில அடிபட்டும் எப்படிங்க கத்தாம அமைதியா இருந்தீங்க?
அது நடமாடும் நூலக வண்டிங்க. கத்தினா அவராதம் விதிப்பாங்களோன்னு பயந்துட்டேன்.
-***-
"திருடப் போகும்போது ஏன் பொம்பளை மாதிரி வேஷம் போட்டுக்கிறே?"
"மாட்டிக்கிட்டா பெண் கைதிகள் இருக்கிற சிறையில் அடைப்பாங்களே!"
-***-
சாம்பார கோல்ட் ஆக்கணும்ன என்ன பண்ணனும் ?
22 கேரட்டே உள்ள போடணும் ..
-***-
டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! வந்துவிடு!
கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 12 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, ", பெண், என்ன, சிரிப்புகள், kadi, நகைச்சுவை