சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் - இந்திய குடியரசுத் தலைவர்கள்
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். சிறந்த தத்துவஞானி இவர் 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் துணைத் தலைவராகவும், 1962 முதல் 1967 வரை இந்திய குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் தமிழ்நாட்டிலுள்ள திருத்தணியில் ஒரு ஏழை தெலுங்கு நியோகி (ஆந்திராவில் உள்ள ஒரு பிராமணப் பிரிவு) குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் சர்வபள்ளி வீராசாமி, தாயார் பெயர் சீதம்மா. அவரது தந்தை ஒரு உள்ளூர் நிலக்கிழாரிடம் துணை நிலை வருவாய் அதிகாரியாக சேவை செய்து வந்தார். இவர், தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார்.
படிப்பு
இராதாகிருஷ்ணன் முதன்மை கல்வியை திருத்தனியில் உள்ள முதன்மை வாரிய உயர்நிலை பள்ளியில் படித்தார். பின்னர் 1896 ஆம் ஆண்டு திருப்பதியில் உள்ள ஹெர்மன்ஸ்பர்க் எவஞ்ஜெலிகல் லூத்தரன் மிஷன் பள்ளியில் சேர்ந்தார். இவருக்கு படிப்பு முடியும் வரை கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. பின்பு வேலூரில் உள்ள வோர்ஹீஆ கல்லூரியில் சேர்ந்தார் ஆனால், 17 வது வயதில் சென்னை கிரிஸ்துவர் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். சென்னை பல்கலைக்கழகத்தில் தத்துவப் பாடத்தில் 1906 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார்.
மண வாழ்க்கை
இராதாகிருஷ்ணனின் பெரியோர்கள் தூரத்து உறவினரான சிவகாமு என்பவரை இவருடைய 16-ம் அகவையில் மணமுடித்து வைத்தனர். இருவருக்கும் ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் பிறந்தனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்று தொடர்பான துறையில் முக்கியமானவர்களில் ஒருவர். சிவகாமு அம்மையார் 1956-ம் ஆண்டு இறந்தபோது இராதாகிருஷ்ணனுடைய 56 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவு பெற்றது.
கல்விப் பணி
1909 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தத்துவ துறையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், 1918 இல், அவர் மைசூர் பல்கலைக்கழகம், தத்துவ பேராசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அவர், மகாராஜா கல்லூரியில் பணியாற்றினார். அச்சமயம் பல தத்துவ நூல்களை எழுதினார்.
பின்னர் 1921 ஆம் ஆண்டில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மன மற்றும் ஒழுக்க அறிவியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1931 முதல் 1936 வரை ஆந்திரா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றினார். இவர் ஆற்றிய கல்விப் பணிக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
அரசியல் பணி
ராதாகிருஷ்ணன், தனது அரசியல் பணியை வெற்றிகரமான கல்வி பணியை முடித்த பிறகு அவரது வாழ்வின் பிற்பகுதியில் தொடங்கினார், 1946 முதல் 1952 வரை இந்தியாவின் சார்பில் யுனெஸ்கோ-வில் உறுப்பினர் ஆனார். மேலும் 1949 முதல் 1952 வரை சோவியத் யூனியனின் இந்திய தூதுவராக இருந்தார். பின்னர் இந்தியாவின் அரசியல் நிர்ணய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராதாகிருஷ்ணன், 1952 இல் இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு 1962 இல் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் - Sarvepalli Radhakrishnan - Presidents of India, இந்திய குடியரசுத் தலைவர்கள், Government of India, இந்திய அரசாங்கம், [kyx]