இந்தியத் தலைமை நீதிபதிகள் - இந்திய அரசாங்கம்
இந்தியாவின் மிக உயர்ந்த நீதிபதிப் பதவி இந்தியத் தலைமை நீதிபதி ஆகும். இது இந்திய உச்ச நீதிமன்றத்தின் உயர்ந்த நீதிபரிபாலணம் கொண்ட பதவியும் ஆகும்.
தலைமை நீதிபதி பணி உச்ச நீதிமன்றத்தை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டும் அல்லாமல் அதன் அமர்வுகளில் பங்கேற்று நீதிபரிபாலணத்தை நிலைநிறுத்தும் கடமையையும் உள்ளடக்கியதாகும்.
இந்திய அரசியலமைப்பு விதி 124 ல் குறிப்பிட்டுள்ளபடி எல்லா நீதிபதிகளும் நியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படியே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் நியமனம் செய்யப்படுகின்றார். அதைத்தவிர தனியான விதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்திற்கென எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அதனால் நீதிபதிகள் நியமனங்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட (பல மூத்த நீதிபதிகளினிடையே) இந்திய அரசின் சார்பில் முன்மொழியப்பட்டு குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகின்றனர்.
இந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் பின்வருமாறு:
1 | பெயர் : ஹரிலால்.ஜே. கனியா மாநிலம் : பம்பாய் (தற்பொழுது மகாராஷ்டிரம்) பதவி ஏற்றது : 15 ஆகஸ்டு 1947 பதவி் முடிவு : 16 நவம்பர் 1951 |
|
2 | பெயர் : எம். பதஞ்சலி சாஸ்திரி மாநிலம் : மாதராஸ் (தற்பொழுது தமிழ்நாடு) பதவி ஏற்றது : 16 நவம்பர் 1951 பதவி் முடிவு : 3 ஜனவரி 1954 |
|
3 | பெயர் : மேர் சந்த் மகாஜன் மாநிலம் : லாகூர் / காஷ்மீர் பதவி ஏற்றது : 3 ஜனவரி 1954 பதவி் முடிவு : 22 டிசம்பர் 1954 |
|
4 | பெயர் : பிஜன் குமார் முகர்ஜி மாநிலம் : மேற்கு வங்காளம் பதவி ஏற்றது : 22 டிசம்பர் 1954 பதவி் முடிவு : 31 ஜனவரி 1956 |
|
5 | பெயர் : சுதி ரஞ்சன் தாஸ் மாநிலம் : மேற்கு வங்காளம் பதவி ஏற்றது : 31 ஜனவரி 1956 பதவி் முடிவு : 30 செப்ட்ம்பர் 1959 |
|
6 | பெயர் : புவனேஷ்வர் பிரசாத் சின்கா மாநிலம் : பீகார் பதவி ஏற்றது : 30 செப்டம்பர் 1959 பதவி் முடிவு : 31 ஜனவரி 1964 |
|
7 | பெயர் : பி. பி. கஜேந்திரகத்கர் மாநிலம் : பம்பாய் (தற்பொழுது மகாராஷ்டிரம்) பதவி ஏற்றது : 31 ஜனவரி 1964 பதவி் முடிவு : 15 மார்ச் 1966 |
|
8 | பெயர் : அமல் குமார் சர்க்கார் மாநிலம் : மேற்கு வங்காளம் பதவி ஏற்றது : 16 மார்ச் 1966 பதவி் முடிவு : 29 ஜூன் 1966 |
|
9 | பெயர் : கோகா சுப்பா ராவ் மாநிலம் : மாதராஸ் (தற்பொழுது தமிழ்நாடு) பதவி ஏற்றது : 30 ஜூன் 1966 பதவி் முடிவு : 11 ஏப்ரல் 1967 |
|
10 | பெயர் : கைலாஷ் நாத் வாங்கோ மாநிலம் : உத்திரப் பிரதேசம் பதவி ஏற்றது : 12 ஏப்ரல் 1967 பதவி் முடிவு : 24 பெப்ரவரி 1968 |
|
11 | பெயர் : முகம்மது இதயத்துல்லா மாநிலம் : (தற்பொழுது) சட்டீஸகர் பதவி ஏற்றது : 25 பெப்ரவரி 1968 பதவி் முடிவு : 16 டிசம்பர் 1970 |
|
12 | பெயர் : ஜெயந்திலால் சோட்டலால் ஷா மாநிலம் : (தற்பொழுது) குஜராத் பதவி ஏற்றது : 17 டிசம்பர் 1970 பதவி் முடிவு : 21 ஜனவரி 1971 |
|
13 | பெயர் : சர்வ மித்திர சிக்ரி மாநிலம் : பஞ்சாப் பதவி ஏற்றது : 22 ஜனவரி 1971 பதவி் முடிவு : 25 ஏப்ரல் 1973 |
|
14 | பெயர் : அஜித் நாத் ராய் மாநிலம் : மேற்கு வங்காளம் பதவி ஏற்றது : 25 ஏப்ரல் 1973 பதவி் முடிவு : 28 ஜனவரி 1977 |
|
15 | பெயர் : மிர்சா அமிதுல்லா பேகம் மாநிலம் : உத்தரப் பிரதேசம் பதவி ஏற்றது : 29 ஜனவரி 1977 பதவி் முடிவு : 21 பெப்ரவரி 1978 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Chief Justices of India - இந்தியத் தலைமை நீதிபதிகள் - Government of India - இந்திய அரசாங்கம்