சிங்கப்பூரில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
செய்திப் பரவல் தொடர்புச் சாதனங்கள்
பத்திரிக்கைகள், செய்தித்தாள்கள்:
சிங்கப்பூரில் தமிழ் வரலாறு வண்ணை நகர் சதாவி பண்டிதரால் 1887இல் ஏற்படத் தொடங்கியது. 1887இல் சிங்கைநேசன் எனும் தமிழ்ச் செய்தித்தாள் வெளிவரத் தொடங்கியது. ஆயினும் 1876இல் சிங்கை வர்த்தமானி எனும் பெயரில் ஒரு பத்திரிக்கை வெளிவந்திருப்பதாகக் குறிப்புக் கிடைக்கிறது. சுதேசமித்திரன், தேசபக்தன், தினமணி, தமிழ்நாடு முதலிய தமிழ்நாட்டுப் பத்திரிக்கைகள் அங்குப் பிரபலமாயின. விடுதலை இதழால் சுயமரியாதை இயக்கம் பரவியது. அப்பத்திரிக்கைகளைப் பின்பற்றி தமிழ் முரசு, žர்திருத்தம், முன்னேற்றம், தமிழன், ஜோதி என்பன சமூக žர்திருத்தத்தை விழையும் ஏடுகளாகச் சிங்கப்பூரில் மலர்ந்தன. வேல், திரையொளி, இந்தியன் மூவி நியூஸ், கொள்கை முழக்கம், முரசொலி ஆகிய இதழ்களும் சிங்கப்பூரிலிருந்து வெளியாகின்றன. தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தமிழ் முரசு ஆற்றியுள்ள பணி சிறப்பானது. கோ.சாரங்கபாணியார் இந்த ஏட்டை 1936இல் தோற்றுவித்தார். தமிழ் முரசு இதன் ஆசிரியர் ஜயராம் சாரங்கபாணி. சிங்கப்பூரின் ஆங்கிலத் தேசிய நாளிதழ் வாரந்தோறும் தமிழிலும், ஆங்கிலத்திலும் இலக்கியப் பண்பாட்டுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. தமிழர் பேரவை என்ற ஏட்டை தமிழிலும் ஆங்கிலத்திலும் 1980 முதல் வெளியிட்டு வருகிறது. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை 1980 முதல் தமிழ்ச்சுடர் ஏடு நடத்துகிறது.
வானொலி, தொலைக்காட்சி:
சிங்கப்பூர் வானொலியில் žனம், ஆங்கிலம், மலேசிய மொழி ஒலிபரப்புக்குச் சமமாக அதிக அளவில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. நாள்தோறும் காலை 6 முதல் 9 மணி வரை இடைவிடாமல் தமிழ் ஒலிபரப்பு நடைபெறுகிறது. ஏ.எம் எனப்படும் மத்திய, சிற்றலை வரிசைகளிலும் எஃப் எம் எனப்படும் ஒலி அலைச்žர் வரிசையிலும் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. உலகில் முதன் முறையாக சிங்கப்பூரில்தான் இருவழி ஒலிபரப்பில் (எஃப் எம் ஸ்டீரியோ) தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன. புத்தகவளம்-இலக்கியச்சோலை என்ற பகுதியில் தமிழ் நூல்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஐம்பெருங்காப்பியங்களை நாடகமாக்கி ஒலிபரப்பியது சிங்கப்பூர் வானொலியின் சிறப்பானப் பணியாகும்.
தொலைக் காட்சியிலும் தமிழ்மொழி நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன. சேனல்-8 மூலம் தமிழ் மொழி, மாண்டரின் மொழி நிகழ்ச்சிகள் ஒளியேறுகின்றன. வாரம் ஒரு முறை தமிழ்த் திரைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன. தொலைக்காட்சியில் இராமாயண நாட்டிய நாடகம் புதன்கிழமை தோறும் நடந்தது
தவிர சிங்கப்பூரில் உள்ள 49 சினிமா திரை அரங்குகளிலும் தமிழ்ப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன.
வங்கிகள்:
ஆனால் சிங்கப்பூரில் 5 இந்திய வங்கிகள் இருக்கின்றன.
1. பாங்க் ஆஃப் இந்தியா
2. இந்தியன் வங்கி
3. இந்தியன் ஓவர்žஸ் வங்கி
4. யுனைடெட் கமர்சியல் வங்கி(இந்தியா)
5. பாரத ஸ்டேட் வங்கி
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிங்கப்பூரில் தமிழர் - Tamils in Singapore - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழ், தமிழர், சிங்கப்பூரில், நிகழ்ச்சிகள், நாடுகள், வாழும், வங்கி, இந்தியா, மொழி, சிங்கப்பூர், முரசு, இந்தியன், தகவல்கள், தமிழ்நாட்டுத், காண்பிக்கப்படுகின்றன, | , வருகிறது, வெளியிட்டு, வங்கிகள், பேரவை, எனப்படும், எஃப், ஒலிபரப்பப்படுகின்றன, ஆங்கிலத்திலும், தொடங்கியது, persons, living, tamil, singapore, tamils, countries, tamilnadu, எனும், ஏட்டை, 1887இல், பத்திரிக்கைகள், information, தமிழிலும்