சிங்கப்பூரில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
சிங்கப்பூர் தமிழ்
சிங்கப்பூர்த் தமிழை எழுத்துத்தமிழ், பேச்சுத் தமிழ் என்று இருவகைப்படுத்தலாம். பேச்சுத்தமிழை யாழ்ப்பாணத் தமிழ், இந்தியத் தமிழ் என இருவகைப்படுத்தலாம். இந்தியத் தமிழையும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பேசுவோர் தமிழ் என்றும் மலையாளம் தெலுங்கு ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்டு பேசுவோர் தமிழ் என்றும் வகைப்படுத்தலாம். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பேசுவோர் தமிழிலும் இல்லங்களில் ஆங்கிலம் பேசுவோர் தமிழ் என்றும் இல்லங்களில் தமிழ் பேசுவோர் தமிழ் என்றும் வகைப்படுத்தலாம். பேச்சுத் தமிழில் உள்ள கூறுகள் சிலவற்றை மலாய், ஆங்கிலம், žனம் ஆகிய பிறமொழிச் செல்வாக்கு, பொதுக்கூறுகள் என்றும் தலைப்பில் விரிவாக விளக்கலாம்.
"உயர்நிலைப் பள்ளிகளுக்கான தமிழ்" என்னும் பாடநூல்கள், பயிற்சி நூல்கள், ஆசிரியர் கையேடுகள், துணைக்கருவிகள் என்பன சிங்கப்பூர் பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. கல்வியமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு ஏற்பத் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடநூல்கள் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒலி நாடாக்கள்
1. மாணவர்களின் கேட்டல் திறனை வளர்த்தல்.
2. மாணவர்கள் இசையுடன் கூடிய செய்யுட்களின் ஓசை நயத்தை அறிந்து பாடி மகிழ ஊக்கமூட்டுதல்
3. கேட்டல்-கருத்தறிதல் திறனை வளர்ப்பதற்காக உரையாடல், கதை, கட்டுரை, சிற்றுரை, நாடகம், பாடல் ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளன.
ஒளியூடுருவிப் படங்களும் வண்ணப்பட வில்லைகளும்
1. ஒளியூடுருவிப் படங்களும் வண்ணப்பட வில்லைகளும் பாடங்களில் இடம் பெறுகின்ற தகவல்கள், நிகழ்ச்சிகள் முதலியவற்றை விளக்குவதற்கும் கதை மாந்தர்களின் உருவங்கள் மாணவர்கள் மனத்திற் பதிவதற்கும் உதவியாய் விளங்குகின்றன.
2. செவிவழி கேட்ட செய்தியைக் கண் வழி பார்த்துப் பாடத்தை மேலும் தெளிவாகக் கற்க இவை உதவுகின்றன.
3. உயர்நிலை 1,2,3 ஆகிய வகுப்புகளுக்கு ஒளியூடுருவிப் படங்களும் வண்ணப்பட வில்லைகளும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.
4. உயர்நிலை வகுப்பு நான்குக்கு ஒலியுடன்கூடிய வண்ணப்பட வில்லைகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் அரசியலில் தமிழர்களின் பங்கு
சிங்கப்பூர் அரசின் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தால் நான்கு ஆண்டிற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றார். பொதுவாக இவர் பிரதமரின் (முதலமைச்சர்) ஆலோசனைப்படி நடப்பார். குடியரசுத் தலைவர் முதல் அமைச்சரை நியமனம் செய்கிறார். முதல் அமைச்சர் நாடாளுமன்றத்திற்குப் பதிலளிக்க கடமைப்பட்டவர்.
தமிழர்களுக்கு என்று ஓர் பெரிய அரசியல் கட்சி கிடையாது. 7.8.1962இல் தோன்றிய சிங்கப்பூர் இந்தியர் காங்கிரஸ் ஓர் பெரிய கட்சி இல்லை. žனர்களின் ஆதிக்கம் மேலோங்கியதால் 1948ஆம் ஆண்டிற்குப் பின் சிங்கப்பூர் தேசிய காங்கிரசின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. பொதுவாக இக்கட்சியில் வடஇந்திய வணிகர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. தமிழ், மலையாளி தொழிலாளர்களுடன் இவர்களுக்கு நெருங்கிய உறவு கிடையாது. ஆகையால் 1948ஆம் ஆண்டிலிருந்து தமிழர்கள் சிங்கப்பூரில் உள்ள வேறு பல கட்சிகளிலும் உறுப்பினர்களாகத் தொடங்கினர். மிக முக்கியக் கட்சியான செயற்படுமுறை கட்சியிலும் சேர்ந்தனர். பாரிஸான் சோஸ’யலிச கட்சிகள் அமைப்பதற்குத் தமிழ் தீவிரவாதிகளும் முக்கிய பங்கேற்றனர். சிங்கப்பூர் அரசில் அமைச்சர்களாக பணிபுரிந்த சில தமிழர்கள் தேவன்நாயர் (1981ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார்), தனபாலன்(வெளிநாட்டுறவு அமைச்சர்), ஜெயகுமார் (உள்துறை அமைச்சர்), இரண்டாவது துணைப் பிரதமர் ராஜரத்தினம், நாடாளுமன்ற உறுப்பினர் ஜபார். 1972இல் அமைக்கப்பட்ட சிங்கப்பூர் ஜஸ்டிஸ் கட்சியின் செகரட்டரி ஜெனரலாக முத்துச்சாமி ராமசாமி எனும் தமிழர் இருக்கின்றார். 1961இல் அமைக்கப்பட்ட தொழிலாளர் கட்சியின் செகரட்டரி ஜெனரலாக ஜெயரத்னம் என்பார் இருக்கின்றார்.இன, சமய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களையும் சட்டங்களையும் பரிžலனை செய்யத் தலைமை நீதிபதி தலைமையின் கீழ் உள்ள 21 உறுப்பினர்கள் அடங்கியக் குடியரசுத் தலைவர் மன்றம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இன, சமய வேறுபாடுகள் செய்யப்படுகின்றதோ, சிங்கப்பூர் குடிமகன் அடிப்படை உரிமைகளை மீறி இருக்கின்றனவா என இம்மன்றம் பரிžலனை செய்கின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிங்கப்பூரில் தமிழர் - Tamils in Singapore - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழ், சிங்கப்பூர், தமிழர், சிங்கப்பூரில், பேசுவோர், என்றும், தகவல்கள், வண்ணப்பட, குடியரசுத், நாடுகள், வாழும், அமைச்சர், தாய்மொழியாகக், கொண்டு, படங்களும், ஒளியூடுருவிப், உள்ள, தலைவர், வில்லைகளும், தமிழ்நாட்டுத், தயாரித்து, பெரிய, உயர்நிலை, பொதுவாக, வழங்கப்பட்டுள்ளன, ஆதிக்கம், ஜெனரலாக, செகரட்டரி, இருக்கின்றார், பரிžலனை, | , கட்சியின், அமைக்கப்பட்ட, கிடையாது, 1948ஆம், முக்கியத்துவம், தமிழர்கள், கட்சி, உயர்நிலைப், tamilnadu, information, தமிழை, பேச்சுத், countries, living, tamils, singapore, tamil, persons, இருவகைப்படுத்தலாம், இந்தியத், பாடநூல்கள், தயாரிக்கப்பட்டுள்ளன, கேட்டல், திறனை, ஆகிய, ஆங்கிலம், தமிழைத், வகைப்படுத்தலாம், இல்லங்களில், மாணவர்கள்