மொரீசியஸில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
1950 முதல் இன்று வரையான இலக்கியங்கள் :
இக்காலக்கட்டத்தில் The Peacock (1961), L.Eclaireur 1963, Tamil Voice (1964) ஆகிய இதழ்கள் வெளிவந்தன. 'ஒளி' 'சக்திவேல்' என்ற இரு வார இதழ்களிலும் பெரும்பாலான செய்திகள் மும்மொழிகளில் (பிரஞ்சு, ஆங்கிலம், தமிழ்) வெளிவருகின்றன. 1970-ஆம் ஆண்டு அ.சுப்பையா முதலியார் 'பிரார்த்தனை மாலை' பாடியுள்ளார். 1974இல் 'தினசரி பிரார்த்தனைத் திரட்டு' சரவண ஐயரால் எழுதப்பட்டுள்ளது. 1977-இல் வெளியான மொரீசியசு முருகன் பாமாலையை சிவன் திருமலைச் செட்டி எழுதியுள்ளார். பேராசிரியர் வாசுதேவ் விஷ்ணு தயாலுவின் முன்னுரையுடன் 'மொரீசியசு தீவில் தமிழர்களின் சிறு சரித்திரம்' 1960 ஆம் ஆண்டு வெளியானது. முத்துக்குமாரன் சங்கிலி திருக்குறளை பிரஞ்சில் 'Le Thirukkural' என 1974-ஆம் ஆண்டு மொழிபெயர்த்துள்ளார். இவர் பாரதியார் பாடல்கள், பிரார்த்தனைப் பாடல்கள், நீதி நூல் பத்து முதலிய நூற்களையும் பிரஞ்சில் கொண்டு வந்துள்ளார். 1985-இல் வெளியான அருணாசலம் புட்பரதத்தின் 'திருப்புகழ்ப் பாடல்கள்' என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்கது. இராமு. சூரியமூர்த்தியால் எழுதப்பட்ட (Tamouls a L'lle Maurice) 'மொரீசியஸ் தீவின் தமிழர்' நூல் மிகச் சிறந்த ஆவணமாகும். தி.அம்மிகன் Tamil quest in Mauritius (1735-1985) என்ற நூலை எழுதியுள்ளார்.
வாய்மொழி இலக்கியங்கள் :
மொரீசியஸ் சென்ற தமிழர்கள் பலரும் படிப்பறிவில்லாதவர்கள் ஆவர். ஆனால் அனுப அறிவு மிக்கவர்கள். அதன் அடிப்படையில் அவர்கள் பாடிய நாட்டுப்புற இலக்கியங்கள் சேகரிக்கப்படவில்லை. அவை கிட்டியிருக்குமானால் மிகச் சிறந்த ஆவணமாக இன்று திகழும். ஆனாலும் அவர்கள் என்னென்ன வகையான பாடல்களை பாடினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிட்டியுள்ளன. கும்மி, லாவணி, தெம்மாங்கு முதலிய பாடல்களே ஆகும்.
ஆப்ரோ மொரீசியர்களின் நாட்டுப்புறப் பாடல்களான 'செகா' (Sega) என்பர். இப்பாடல்களில் தமிழரின் நாட்டுப்புற இசை வடிவங்களையும், தமிழ் சொற்களையும் சு.இராஜாராம் கண்டுள்ளார். பிரஞ்சுக்காரர்கள் மொரீசியசை ஒரு காலனித்துவ நாடாக்க முயன்ற காலம் தொடங்கி ஆப்ரிக்க அடிமைகள் மற்றும் தமிழ் தோட்டதொழிலாளர்களிடையே ஏற்பட்ட நீண்ட காலத் தொடர்பே இத்தாக்கத்திற்குக் காரணம் எனலாம்.
செகாவைப் பொறுத்தவரையில் தமிழின் தாக்கத்தை அதன் இசையிலும், இசைக்கருவிகளிலும், தமிழ் நாட்டுப்புறப் பாடல்களில் வழங்கும் சில சொற்களைப் பயன்படுத்துவதிலும் காண முடிகிறது. ராவான்-பறை; கசசக-கூழாங்கல் முக்கிய இசைக் கருவிகள்.
எ.கா:
"தங்கச்சி, பொன்னம்மா
திலோ பஞ்சாலே தொமமா
திலோ பஞ்சாலே
தால் மொ தொனே
க்யுரி மொ தொனே
க்யுரி ஃபேரே தொ மோர் தம்பி"
இப்பாடலில் பயன்படுத்தப்படும் தமிழ்ச்சொற்களை பாருங்கள்!
செகா பாடல்களைத் தமிழ்நாட்டுப்புறப் பண்பிற்கு ஏற்பத் தமிழ்படுத்தி செகா இசையோடு பாடும் வழக்கமும் தமிழர்களிடையே இன்று உள்ளது.
"சின்னத் தாய் தங்கமே தங்கம்
மாப்பிளெ பொண்ணு ரெண்டுபேரும்
மணவறைச் சுத்திவரக் கல்யாணம்
சின்னத்தாய் தங்கமே தங்கம்
சின்னத் தாய் தங்கமே தங்கம்
கூத்து :
தமிழகத்திலிருந்து 4000 மைல் சென்ற பின்னரும் தமிழ் கலையை மட்டும் அழியாமல் காத்து வந்த அத்தோட்டத் தொழிலாளர்களை என்றும் மறக்க முடியாது. கூத்துக்களின் பகுதிகளை 'வாத்தியார்' கூடி நடிகர்கள் மனப்பாட முறையில் நினைவில் வைத்து பாடியும், ஆடியும் வந்தனர். தமிழர் ஆடும் கூத்துக்களைக் காண வெள்ளையர் வருவார்களாம். தமிழ் நடிகர் கிடைக்காத நேரங்களில் பிறமொழியாளர்களுக்கும் தமிழைக் கற்பித்து கூத்தாட வைத்தனர் என அறிகிறோம். அக்காலத்தில் ஆடப்பட்ட கூத்தின் அமைப்பு தமிழகத் தெருக்கூடத்தின் அமைப்பை ஒட்டியே இருந்தது. இவ்வகையில் ஆடப்பட்ட கூத்துக்கள் : அரிச்சந்திரன் நாடகம், தேசிங்குராஜா கதை, நல்லதங்காள் கதை, செருத்துண்ட நாடகம், பாரதம், அலிபத்சா நாடகம், வீர குமார நாடகம், கண்ணன் சண்டை, மதுரை வீரன் நாடகம், வெங்கடேச பெருமாள் நாடகம் போன்றவை.
நாடகம் :
பண்டிதர் பெருமாள் 'சதாரம்' எழுதி நடித்தார். சுப்பையா முதலியார் 'தமிழ் மன்னன் குமணன்' எழுதினார். இராசரத்தினம் சங்கிலி எழுதிய 'பாரிஸ்டர் கமலநாதன்' நாடகம் போர்ட் லூயி நகராட்சி அரங்கில் நடிக்கப்பட்டது. 1944 முதல் வானொலியில் தமிழ் நாடகங்கள் நடிக்கப்பட்டன. சுப்பையா பிள்ளையைத் தொடர்ந்து விநாயகம் பிள்ளை வானொலியில் நிறைய தமிழ் நிகழ்ச்சிகளுக்கிடையில் நாடகத்தைக் கொண்டு வந்தார். தேசிய நாடக விழாவில் சிவன் திருமலைச் செட்டி எழுதிய நாடகங்கள் தொடர்ந்து பரிசு பெற்று வந்துள்ளன. 1987 ஆம் ஆண்டு 'ஆங்லட்' என்ற நாடகம் நடத்தப்பட்டுள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மொரீசியஸில் தமிழர் - Tamils in Mauritius - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நாடகம், தமிழ், தமிழர், மொரீசியஸில், tamil, ஆண்டு, நாடுகள், வாழும், சுப்பையா, mauritius, தங்கம், தங்கமே, இன்று, இலக்கியங்கள், தகவல்கள், தமிழ்நாட்டுத், நாட்டுப்புற, க்யுரி, தொனே, நாட்டுப்புறப், செகா, திலோ, பஞ்சாலே, ", ஆடப்பட்ட, பெருமாள், எழுதிய, வானொலியில், சென்ற, | , தாய், நாடகங்கள், தொடர்ந்து, சின்னத், பிரஞ்சில், information, முதலியார், வெளியான, மொரீசியசு, tamilnadu, countries, tamils, persons, living, சிவன், திருமலைச், முதலிய, கொண்டு, மொரீசியஸ், மிகச், நூல், பாடல்கள், செட்டி, எழுதியுள்ளார், சங்கிலி, சிறந்த