மொரீசியஸில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
கல்வி :
1810-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கிய அந்நாளில் கூட தமிழர்களுக்கென்று திண்ணைப் பள்ளிகள் இருந்தன. மாலை நேரங்களில் தமிழுடன் கணிதமும் கற்பிக்கப்பட்டது என ஆங்கிலேயர் குறிப்பிட்டுள்ளனர்.
1865-ஆம் ஆண்டளவிலே 26 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. 1872-ஆம் ஆண்டில் பல தமிழ் நூல்கள் இங்கு வரவழைக்கப்பட்டன. விடுதலைக்குப் பின்னர் கல்வித் திட்டத்தில் தமிழ் இடம் பெற்றது. தமிழ் கற்க விரும்பிய பள்ளிக் குழந்தைகளுக்கு முறைமையான ஆசிரியர் பயிற்சி அளிக்கத் தமிழகத்திலிருந்து தமிழாசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். மொரீசியசு சூழ்நிலைகளுக்கேற்றவாறு தமிழ்ப் பாடநூல்களை இவர்கள் எழுதினர்.
1954-இல் 50 மாணவர்கள் தமிழ் பயின்றனர். 1957-இல் 1500 குழந்தைகள் பாலர் தமிழ் வாசகம் நூலின் வழி தமிழ் பயின்றனர். 11 பேர் ஆசிரியர் பணிக்குப் பயிற்சிப் பெற்றனர். 1966-இல் முறையான பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. 1967-இல் ஆசிரியர் எண்ணிக்கை 60, தமிழ் கற்பிக்கும் பள்ளிகள் 75, மாணவர் 5,000 ஆக உயர்ந்தனர். 1968-ஆம் ஆண்டு மார்சு 12 ஆம்நாள் மொரீசியஸ் நாடு விடுதலை பெறவே, கீழை மொழிகளுக்கு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 10,000 மாணவர்கள் தமிழ் பயில்கின்றனர். 200 தொடக்கப் பள்ளிகள் தமிழ் கற்றுத் தருகின்றன.
பள்ளித் திட்டத்தில் மட்டுமின்றித் தமிழில் ஆலம் உடையோரை ஊக்குவிக்கும் வகையில் மாலைப் பள்ளிக்கூடம் நடத்தப்படுகின்றன. மகாத்மா காந்தி நிறுவனம் நடத்தி வரும் தமிழ்ச் சான்றிதழ் பட்ட வகுப்புகளில் ஆண்டுக்கு நாற்பது பேர் தமிழ்க் கல்வி பெற்று வருகின்றனர்.
மொரீசியஸ் கல்விக் கழகமும் (Mauritius Institute of Education) மொரீசியஸ் வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்களும் தமிழ்மொழி கற்பிக்கின்றன.
மொரீசியஸ் தமிழ் இலக்கியம்
மொரீசியஸ் தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலத்தை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம்.
1. 1930-க்கு முற்பட்ட காலம்.
2. 1930-1950 வரையிலான இடைப்பட்ட காலம்.
3. 1950-இல் இருந்து இன்று வரையிலான காலம்.
1930க்கு முன் மொரீசியஸ் இலக்கிய நூல்கள் எதுவும் தோன்றியதாகக் குறிப்பில்லை. ஆனால், அவ்வப்போது தமிழ் இதழ்களில் பல கவிதைகளும், கட்டுரைகளும் வெளியாயின. பத்திரிக்கைகள் பற்றி நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. மொரீசிய தமிழ் பத்திரிக்கை வரலாறு கிட்டத்தட்ட 125 ஆண்டுக்காலப் பாரம்பரியம் உடையது என மொரீசியன் என்ற நாளிதழில் 1861-ஆம் ஆண்டு கட்டுரையொன்று வெளியிட்டது. இக்காலத்தில் பல தமிழிதழ்கள் தோன்றி மறைந்தன. 1868 தொடங்கி The Mercantile Advertiser, Mimic Trunpater என்ற இதழை 'விகட எக்களத் தூதனை' துளசிங்க நாவலர் என்பவர் நடத்தி வந்தார். இவ்விதழ் ஆங்கிலம்-தமிழ் இருமொழி இதழ். இதில் பல கட்டுரைகளையும், கவிதைகளையும் நாவலரே எழுதி வந்துள்ளார். இவ்விதழின் துணையாசிரியராக இருந்த பண்டிதர் பெருமாள் சுப்பராயன் என்பவரும் அவ்வப்போது பல கவிதைகளும் கட்டுரைகளும் எழுதி வந்தார் என்று தெரிகிறது.
பண்டிதர் பெருமாள் சுப்பராயன் 1919-இல் எழுதிய "இந்து வாலிபர் சங்கத்தின் அங்கதினர் கட்கோர் திறந்த நிருபம் மேற்படி சங்கத்தில் யானும் ஒரு காரிய தரியாம்" என்ற சிறு நூல் வழி அக்கால பழக்க-வழக்கங்கள், வசன நடை முதலியவற்றை அறிய முடிகிறது. 1920 களில் பெருமாள் சுப்பராயன் Guy de Theramond என்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எழுதிய 'Cavengar' என்ற நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தார். 1927 இல் ஜி.வெங்கடசாமி என்பவர் 'žதாலட்சுமி' என்ற நூலை எழுதியுள்ளார்.
1930-1950 வரையிலான இடைக்காலம் :
இக்காலத்தில் Tamil Kalvi Kazagam (1944) Tamil Maha Sangam (1947) போன்ற இதழ்கள் வெளிவந்தன. இக்காலத்தில் வீ.அருணாசல அரனடிகள் 'சக்குபாய்' என்ற மொழிபெயர்ப்பு நூலை 1935 திலும், 'கலைமகள் போதனம்' 'காவடிச்சிந்து' என்ற நூற்களை 1940 இல் எழுதியதாகத் தெரிகிறது. இவர் மாணவரான வடிவேல் செல்லன் 'ஸ்ரீ சிவ சுப்பிரமணியர்பதிகம்' பாடியுள்ளார். ஆ.உ. சுப்பராயன் என்பவர் 1940 இல் "மோரீஷஸ் ஸ்ரீமீனாட்சி அம்மன் பதிகம்" என்ற நூலை எழுதியுள்ளார். 1932-இல் பெருமாள் சுப்பராயன் எழுதிய 'தியானாபிமான கீதங்கள்' என்ற நூலை முதல் தமிழ் இலக்கியம் என்கின்றனர்.
1940-ஆம் ஆண்டு வடிவேல் செல்லனால் இயற்றப்பட்ட 'முருகவேல்மாலை', அ.சுப்பையா முதலியாரால் இயற்றப்பட்ட கவிதை; ஆறுமுகம் வெளியிட்ட 'சன்மார்க்க நீதி' என்ற மூன்று நூலையும் கண்டித்து பண்டிதர் சுப்பராயர் எழுதிய 'கவியா, தமிழ்க் கொலையா?' என்ற நூலைச் சிறந்த விமர்சன நூல் எனக் கொள்ள முடியும்.
அ.சுப்பையா முதலியார் 1940 இல் 'தமிழ் மன்னன் குமணன்' என்ற நாடகத்தை எழுதினார். இக்காலத்தில் சு. விநாயகம் பிள்ளை, ஆறுமுகம், எம்.வைத்திலிங்க பத்தர், ஆ.உ.சுப்பராயன் முதலியோர் கவிதை, கட்டுரைகள் எழுதி வளப்படுத்தினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மொரீசியஸில் தமிழர் - Tamils in Mauritius - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழ், தமிழர், சுப்பராயன், மொரீசியஸ், மொரீசியஸில், எழுதிய, நூலை, பள்ளிகள், பெருமாள், தகவல்கள், வாழும், நாடுகள், tamil, இக்காலத்தில், பண்டிதர், ஆசிரியர், எழுதி, காலம், ஆண்டு, என்பவர், வரையிலான, mauritius, தமிழ்நாட்டுத், சுப்பையா, கவிதை, கட்டுரைகளும், | , ஆறுமுகம், வந்தார், இயற்றப்பட்ட, tamils, கவிதைகளும், ", நூல், வடிவேல், எழுதியுள்ளார், தெரிகிறது, நடத்தி, கல்வி, ஆண்டில், ஆங்கிலேயர், இருந்தன, information, tamilnadu, persons, living, countries, தமிழ்ப், நூல்கள், தமிழில், தமிழ்க், இலக்கிய, மூன்று, பேர், பயின்றனர், திட்டத்தில், பயிற்சி, மாணவர்கள், அவ்வப்போது