தமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள்
1908
தூத்துக்குடியில் அயலார் கப்பல் ஆதிக்கத்தை வ.உ.சிதம்பரனார் தலைமையில் எதிர்த்தனர்.
1908-1957
என்.எஸ்.கிருட்டிணன் காலம். வெள்ளித்திரை மூலமும் பாமரமக்களுக்கு பகுத்தறிவு படைக்கமுடியும் என்ற அப்பட்டமான உண்மையைப் புலப்படுத்தியவர். தற்கால நகைச்சுவைக்கு இலக்கணம் படைத்தவர்.
1910
வ.வே.சு.ஐயர் நாடு விடுதலை வேண்டி. தியாகப்பலிக்கு தயாராகுங்கள். 'பாரத மாதா அழைக்கின்றாள்' '1857 திரும்புகிறது' ஆகிய புத்தகங்கள் வெளியிட்டார். உருசியாவுக்குச் சென்று வெடிகுண்டு தயாரிப்பதை கற்றுவந்தார். சிறந்த தமிழறிஞர். கம்பனுக்கும் வள்ளுவருக்கும் உரை கண்டவர்.
1910-1998
சந்திர சேகர்; ஆரயிச்சியாளர். நோபல் பரிசு பெற்ற இரண்டாம் தமிழர்.
1911
சூன் 17 ஆம் நாள் மணியாச்சி புகைவண்டி நிலையத்தில் வாஞ்சிநாதன் ஆசுதுரையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தன்னுயிரையும் போக்கிக் கொண்டார்.
1912
திராவிடர் அமைப்பு தோன்றியது. 1916 டிசம்பரில் தென்னிந்தியர் நல உரிமைக்கழகம் தோன்றியது. பின் நீதிக் கட்சி என்ற பெயருடன் இயங்கியது. வைதீகர் ஆதிக்கத்தாலும், சாதிக்கொடுமையாலும் புண்பட்டிருந்த மக்களிடத்தில் தனித்தமிழ்ப் பற்று ஏற்பட்டது.
1912-1974
மு.வரதராசனார் தமிழக வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இவருக்குத் தனியிடம் உண்டு. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதன் முதலாக பேரறிஞர் (டாக்டர்) பட்டம் பெற்றவர். 85 நூல்கள் எழுதியுள்ளார்.
1916
அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கினார்.
1917
உருசியாவில் லெனின் தலைமையில் செஞ்சட்டையினர் ஆட்சி அமைத்தனர்.
1918
திரு.வி.கலியாணசுந்தரனார், கேசவபிள்ளை, வாடியா முதலியோர் சென்னையில் முதல் தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினர்.
டாக்டர் டி.எம்.நாயர், தியாகராக செட்டியார், கேசவப்பிள்ளை, நடே முதலியார் போன்றோர் சாமானியர் உரிமைகளுக்காகவும், வைதீகர்களின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் இயக்கங்களில் ஈடுபட்டனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - டாக்டர், வரலாற்றிலும், தோன்றியது, தலைமையில்