மணிமேகலை - இரண்டாம் நூற்றாண்டு
பத்தினியின் சிறப்பு
கண்ணகி வாயிலாகப் பத்தினிப் பெண்ணின் தெய்வீக ஆற்றலை இளங்கோவடிகள் காட்டினார். அவள் தீயை ஏவ, அத்தீ மதுரையை எரித்தது. ஆனால் சாத்தனார் படைத்த ஆதிரையைத் தீயும் நெருங்க அஞ்சிற்று. இது சாத்தனார் வெளிப்படுத்தும் கற்பின் மாண்பு. அரசர் முறை செய்யவில்லையேல், பெண்களுக்குக் கற்பு சிறக்காது என்றும் கூறுகின்றார். கணவன் இறந்தவுடன் உயிர் விடும் தலையாய கற்புடையாரையும், உடன்கட்டையேறி உயிர்விடும் இடையாய கற்புடையாரையும், கைம்மை நோன்பு இயற்றி மறுமையிலும் கணவனைக் கூடத் தவம் புரியும் கடையாய கற்புடையாரையும் இவர் அறிமுகப்படுத்துகின்றார்.
சீர்திருத்தக் கொள்கை
மணிமேகலை மாபெரும் சீர்திருத்தக் காப்பியமாகும். சங்க காலத்தில் பெருவழக்காக இருந்த கள்ளும், ஊன் உணவும் சமண பௌத்த சமயங் களால் பெரிதும் கண்டிக்கப்பட்டன. இவ்வகையில் திருவள்ளுவர்க்கு அடுத்தபடியாகச் சிறந்து நிற்பவர் சாத்தனாரே. சாதுவன், நாகர்குருமகனுக்குக் கூறிய அறிவுரைகள் பல. அவற்றுள் இன்றியமையாதவை கள்ளும் ஊனும் கைவிடத்தக்கவை என்பதாகும்.
மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் (ஆதிரை பிச்சையிட்டகாதை, வரிகள் : 84-85) |
என்றும்,
மூத்துவிளி மாவொழித்து எவ்வுயிர் மாட்டும் தீத்திறம் ஒழிக, (மேற்படி வரிகள்: 116-117) |
என்றும் கூறிய சாதுவன்,
நல்லறம் செய்வோர் நல்லுலகு அடைதலும் அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும் உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர் (மேற்படி வரிகள்: 88-90) |
என்று அதன் பலனையும் எடுத்துக் கூறினான்.
பரத்தையாகப் பிறந்தவளும், உலகம் போற்றத்தக்க பத்தினியாக வாழமுடியும் என்பதனை மாதவியின் வாழ்வின் மூலம் நிறுவினார் சாத்தனார். அவ்வாறே பரத்தைக்கு மகளாகப் பிறந்தவளாலும் உலகம் போற்றும் அறச் செல்வியாக வாழ முடியும் என்று மணிமேகலை வாயிலாக உணர்த்தினார். ஒழுக்கம் இல்லாத பெண்ணின் மகன் ஆபுந்திரன் பசிப்பிணி மருத்துவனாக உயர்ந்து நிற்றலைச் சாத்தனார் காட்டுகின்றார். பிறப்பால் உயர்ந்தவன் அல்லாத ஆபுத்திரன், வேதம் பயின்ற அந்தணர்கட்கு உண்மையையும் ஒழுக்கத்தையும் உணர்த்துகின்றான். பரத்தைமை யொழுக்கம் மேற்கொண்ட ஆடவர்கள் தம் செல்வம் இழந்து சிறப்பிழந்து அவலம் உறுவர் என்பதனைச் சாதுவன் வாயிலாக உணர்த்தியுள்ளார்.
பசிப்பிணி நீக்கல்
மணிமேகலைக் காப்பியம்,
பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க (மணிமேகலை, பதிகம், வரிகள்: 116-117) |
என வாழ்த்தித் தொடங்குகின்றது.
அறம் எனப்படுவது யாது எனக் கேட்பின், மறவாது இது கேள், மன்னுயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல் (பாத்திரம் பெற்ற காதை, வரிகள்: 116-117) |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மணிமேகலை - Manimekalai - இரண்டாம் நூற்றாண்டு - 2nd Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - மணிமேகலை, வரிகள், நூற்றாண்டு, இரண்டாம், சாத்தனார், என்றும், தகவல்கள், கற்புடையாரையும், தமிழ்நாட்டுத், இலக்கிய, சாதுவன், கள்ளும், தமிழ், நூல்கள், அடைதலும், பசிப்பிணி, | , வாயிலாக, உலகம், செய்வோர், கூறிய, மேற்படி, பெண்ணின், tamil, century, manimekalai, literatures, list, information, tamilnadu, சீர்திருத்தக்