வேலூர் - தமிழக மாவட்டங்கள்
ரத்தினகிரி முருகன் கோயில்
வேலூரிலிருந்து ஆற்காடு செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரத்தினகிரி மலை உச்சியில் பாலமுருகன் கோயில் உள்ளது.பாலமுருகனடிமை சுவாமிகள் இக்கோயிலைக் கட்டி நிர்வகித்து வருகிறார். 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் முருகனின் அருளாலும், பாலமுருகனடிமை சுவாமிகளின் அருளாலும், பக்தர்களின் அருளாலும் ஒளிர்வதாக நம்பப்படுகிறது.காலை ஆறு மணி முதல் மாலை எட்டு மணி வரையிலும் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். தேவர்களின் கடவுளாக நம்பப்படும் முருகன் ரத்தினகிரியில் வாழ்ந்து அருள்பாலிப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.
பொற்கோயில்
பொற்கோயில் |
விழாக்கள் :
வேலூர் சித்திரை பெளர்ணமி புஷ்பப் பல்லக்கு, குடியாத்தம் கங்கையம்மன் திருவிழா, மேணீஜூன் ஏலகிரி கோடைவிழா.
சுற்றுலாத்தலங்கள் :
வேலூர் கோட்டை, முத்துமண்டபம், ஏலகிரிமலை, அமிர்திகாடு, ஜவ்வாது மலை, விஷ்ணு பாப்பு வான் இயற்பியல் மையம்.
வேலூர்க் கோட்டை
வேலூர்க் கோட்டை |
இராணுவ நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட கோட்டையாக இது காட்சியளிக்கின்றது. கோட்டைக்குள் திப்பு மகால், ஹைதர் மகால், பாஷா மகால், கண்டி மகால், பேகம் மகால் ஆகிய அழகிய அரண்மனைகளும் ஜலகண்டேசுவரர் ஆலயம், தேவாலயம், மசூதி, அரசு அருங்காட்சியகம், பல அரசு அலுவலகங்கள் ஆகியனவும் காணப்படுகின்றன. பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் உள்ள இக்கோட்டையை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை பாதுகாத்துக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் பார்வையிட்டுச் செல்கின்றனர். கோட்டையைச் சுற்றியுள்ள அகழியில் படகுப் போக்குவரத்தும் நடைபெறுகின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேலூர் - Vellore - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - வேலூர், மகால், உள்ள, tamilnadu, மாவட்டங்கள், தமிழக, வேலூரின், பொற்கோயில், இக்கோயில், அருளாலும், கட்டப்பட்ட, கோட்டை, வேலூர்க், தமிழ்நாட்டுத், சுமார், தகவல்கள், அமைந்துள்ளது, பரப்பளவில், சுற்றியுள்ள, கோட்டையைச், அரசு, | , இந்திய, அழகிய, ஏக்கர், சுவர், ரெட்டி, நாள்தோறும், ரத்தினகிரி, முருகன், information, districts, vellore, கோயில், உள்ளது, வேயப்பட்டுள்ளது, முக்கிய, நூற்றாண்டில், பாலமுருகனடிமை, கட்டப்பட்டுள்ளது