திருவாரூர் - தமிழக மாவட்டங்கள்
தொழில்:
இம்மாவட்டத்தின் பெருந்தொழில் விவசாயமே. அதற்கடுத்து வடபாதிமங்கலத்தில் ஆரூரான் சர்க்கரை ஆலை நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டு இன்றும் நல்ல முறையில் நடந்து வருகிறது. இதற்குத் தேவையான கரும்பை சுற்று வட்டாரங்களில் பயிர்செய்து இங்கு கொண்டுவரப்படுகிறது. இதற்கடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் முயற்சியால் மன்னார்குடியை அடுத்த வடசேரியில் இரசாயன ஆலை தொடங்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி:
ராஜகோபாலசாமி கோயில் |
தமிழ்ச்சமணர் சிலர் இன்றும் இவ்வூரில் வாழ்கின்றனர். சமணர் கோயில் ஒன்று இருக்கிறது. பித்தளை பாத்திரங்களும் இருப்புச் சட்டிகளும் ஓரளவு செய்யப்படுகின்றன. மன்னார்குடி வேட்டி எங்கும் புகழ்பெற்றது. அரசாங்கத்தாரால் தொடங்கப்பட்ட தச்சு - இரும்பு தொழிற்சாலையில் விவசாயக் கருவிகள் செய்யப்படுகின்றன. கோட்டூர் அரங்கசாமி முதலியார் நூலகம் இந்நகரில் காணத்தக்க அருங்கலைக்கூடமாகும். பள்ளிகள், கல்லூரிகள் இந்நகரில் உள்ளன. இந்நகரின் மேற்குக் கோடியிலுள்ள 'மேலவாசல்', ஒய்சாளர் கட்டிய அரண்மனையின் மேலவாயிலாக இருந்தது என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள்.
கோட்டூர்: தேவாரமும், திருவிசைப்பாவாலும் பாடப்பெற்ற 2 கோயில்கள் இவ்வூரில் உள்ளது. சோழ, நாயக்க, மராட்டிய மன்னர்களின் கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன. இவ்வூர் கல்வெட்டை ஆதாரமாகக் கொண்டே சேக்கிழார் காலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவ்வூர் வள்ளல் அரங்கசாமி முதலியார் (1805-1907) 200 வேலி நிலமும், 12 இலட்சம் ரூபாயையும் அறச் செயலுக்காக எழுதி வைத்தார். மாணவர் இல்லம், நூல் நிலையம், புலவர் மன்றம், ராஜகோபாலசாமி கோயில் கட்டளைகள் முதலியன இவர் பெயரால் மன்னார்குடியில் நடைபெறுகின்றன.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் |
வடபாதிமங்கலம்:
ஆரூரான் சர்க்கரை ஆலையால் இவ்வூர் புகழ்பெற்றது. இந்த ஆலை இருப்பதால் இவ்வூர் அருகிலுள்ள பல கிராமங்களில் கரும்பு பயிரிடப்பட்டு இங்கு அனுப்பப்படுகிறது. ஒன்றுபட்ட தஞ்சைமாவட்டத்தில் ஏற்பட்ட முதல் ஆலைகளில் இதுவும் ஒன்று. இதன் உரிமையாளரான தியாகராஜ முதலியார் இம்மாவட்ட சிறப்பு பிரமுகராவார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - Thiruvarur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இவ்வூர், திருவாரூர், tamilnadu, மாவட்டங்கள், கோயில், தமிழக, மன்னார்குடி, ராஜகோபாலசாமி, வாழ்கின்றனர், முதலியார், தமிழ்நாட்டுத், தகவல்கள், ஒன்று, இவ்வூரில், கோட்டூர், செய்யப்படுகின்றன, புகழ்பெற்றது, இந்நகரில், ஒன்றுபட்ட, | , முஸ்லீம்கள், முழுவதும், இருக்கிறது, கூத்தாநல்லூர், அரங்கசாமி, சமணர், சர்க்கரை, இன்றும், வருகிறது, ஆரூரான், information, thiruvarur, districts, இங்கு, உள்ளது, சிறப்பு, நிறைந்த, கல்வெட்டுக்கள், கோயிலாக, கட்டிய, கோயில்கள், இக்கோயிலில்