திருவாரூர் - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | திருவாரூர் |
பரப்பு : | 2,274 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 1,264,277 (2011) |
எழுத்தறிவு : | 946,471 (82.86 %) |
ஆண்கள் : | 626,693 |
பெண்கள் : | 637,584 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 556 |
வரலாறு :
பண்டைய தமிழ்நாட்டின் பகுதியாகிய சோழ மண்டலத்தின் ஒருபகுதியே திருவாரூர் வட்டமாகும். கரிகாலன் கி.பி. 50 முதல் 95 வரை ஆண்டதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கரிகாலனுக்கும் முற்பட்ட புராண காலச் சோழர்களான முசுகுந்தன், புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி, கன்றுக்காக மகனைக் கொன்ற மனுநீதிகண்ட சோழன் மூவரும் வாழ்ந்த இடமாக கூறப்படும் இடம் திருவாரூர் ஆகும். திருவாரூரையும் தியாகராசர் கோயிலும் பிரித்து வரலாறே எழுதமுடியாது. காவிரி ஆற்றின் வளமான வண்டல்பகுதியை உள்ளடக்கியது திருவாரூர் வட்டம். சோழ அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து ஊர்களுள் இதுவும் ஒன்று. (மற்ற ஊர்கள்: காவிரிப்பூம்பட்டினம், உறையூர், செய்ஞலுர், கருவூர்).
* ஆறு சிவத்தலை விராட புருடனின் ஆறு ஆதாரங்கள் என்று போற்றுவது சைவமரபு. அம்முறையில் திருவாரூர் மூலாதாரத்தலம்.
* ஐம்பூதத் தலங்களில் திருவாரூர் பிருதிவித்தலமாகும்.
* மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறந்து விளங்குந்தலம் திருவாரூர்.
* ஏழு விடங்கர் தலத்தில் மற்ற தலங்கள் சூழ நடுவில் உள்ளது திருவாரூர்.
தஞ்சை மாவட்டத்திலிருந்து பிரித்து, திருவாரூர் மாட்டம் 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் சில பகுதிகளை ஒன்றிணைத்து இம்மாவட்டம் உண்டாக்கப்பட்டபோது ஏ.டி.பன்னீர் செல்வம் மாவட்டம் என்றே அழைக்கப்பட்டது. பின்னர் 1998இல் தமிழக அரசின் ஆணையை தொடர்ந்து, மாவட்டத் தலைநகரான திருவாரூரின் பெயரிலேயே வழங்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்ட ஒன்றியங்கள்:
திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், கொரடாச்சேரி, குடவாசல்.
சட்டமன்றத் தொகுதிகள்:
திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வலங்கைமான்
வழிபாட்டிடங்கள்:
திருவாரூர், மன்னார்குடி, திருச்செங்கட்டான்குடி, திருக்கண்ணபுரம், எண்கான், வலங்கைமான்.
சுற்றுலாயிடங்கள்:
திருவாரூர், மன்னார்குடி.
மாவட்ட முக்கிய பிரமுகர்கள்:
மனுநீதிசோழன், தியாகய்யர், முத்துசாமி தீட்சதர், சாமா சாஸ்த்திரி, திருவாரூர் நடேச நாயனக்காரர், திருமருகல் டி.வி.நமச்சிவாயம், வலங்கை சண்முகசுந்தரம் முதலிய புகழ்பெற்ற இசைக்கலைஞர்களும், திரு.வி.க., ஏ.டி.பன்னீர் செல்வம், முதல்வர் கருணாநிதி, திருவாரூர் தங்கராசு, ஆரூர்தாஸ், மன்னை நாராயணசாமி, கோட்டூர் அரங்கசாமி முதலியார், வடபாதிமங்கலம் ஆரூரான், சக்கர ஆலை தியாகராஜ முதலியார், கந்தசாமி, கே.பாலசந்தர், நெடுஞ்செழியன் முதலியோர் இம்மாவட்டத்தின் முக்கியப் பிரமுகர்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - Thiruvarur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருவாரூர், தமிழக, மன்னார்குடி, tamilnadu, மாவட்டங்கள், வலங்கைமான், தகவல்கள், தமிழ்நாட்டுத், கோட்டூர், திருத்துறைப்பூண்டி, | , முதலியார், மாவட்ட, பிரமுகர்கள், பிரித்து, information, districts, thiruvarur, மக்கள், சோழ, பன்னீர், மற்ற, செல்வம்