திருவண்ணாமலை - தமிழக மாவட்டங்கள்
திருவண்ணாமலைப் பகுதிக்கு நீர்ப்பாசனம் போதாத காரணத்தால்,
சாத்தனுர் நீர்தேக்கத் திட்டம் 1949 இல் உருவானது.
நீர்த்தேக்கத்தின் தோற்றம் :
இந்நீர்த் தேக்கத்தின் மொத்த நீளம் 2583
அடி அதில் 1400 அடி கட்டடப் பகுதி. 1183 அடி மண் அணைப்பகுதி.
நடுவில் 432 அடி மடை உள்ளது. அதில் 9 கண்கள் உண்டு. ஒவ்வொரு
கண்ணின் அகலமும் 40 அடி. கடைக்காலின் ஆழம் 135 அடி கடைக் காலுக்கு
மேலாக அணையின் உயரம் 147 அடி. இவ்வணைக்கட்டு வேலை 1955 பிப்ரவரி
மாதம் தொடங்கப்பட்டு, 1956 மே மாதத்தில் முடிந்தது.
அமைப்பு :
சிறிய அணைக்கட்டின் இடது புறம் அமைந்துள்ள
மடையில் 3 கண் உள்ளன. ஒவ்வொன்றும் 9 அடி அகலம் 5 1/2 அடி உயரம்
உடையது. இக்கண்கள் வழியாக நொடிக்கு 400 க.அடி நீர் வெளியாகிறது.
தலைக் கால்வாயின் தொடக்கத்திலிருந்து எட்டு மைல் வரையில் நீர்க்
கசிவு ஏற்படா வண்ணம் சிமெண்ட் கால்வாய் போடப் பட்டுள்ளது. இதனால்
சேமிக்கப்படும் நீர் மேலும் 1000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன
மளிக்கும்.
இக்கால்வாயின் முதல் 6 மைல்களுக்குள் 6 பாலங்களும், ஒரு பெரிய
நீர்குழாயும், இரண்டு நடைபாலங்களும், இரண்டு மேம்பாலங்களும், 11
சுரங்க வழிகளும் கட்டப் பட்டுள்ளன. 6 மைல்களுக்கு அப்பால் 3
பாலங்களும் 8 சுரங்க வழிகளும் கட்டப் பட்டுள்ளன. இவ்வணை
இம்மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலமாகக் கருதப்டுகிறது.
திரைப்படத்துறையினர் இப்பகுதியில் படம் பிடிப்பு நடத்துகின்றனர்.
இவ்வணையைச் சுற்றிலும் அமைந்துள்ள மின்சார அலங்காரம் பாதிப்பேரைக்
கவரக்கூடியது.
தமிழகத்து சரவணபெளகொளா :
போளூருக்கு அருகில் உள்ள வடபாதி மங்கலம்
இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது திருமலை.
'திருமலை' யில் உள்ள சிறு குன்றின் மீது மூன்று நிலைகளில் சமணக்
கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்குன்று முழுவதும் சமணச் சிறுகோயில்
உள்ளன.
குன்றின் கீழ்ப்பகுதியில் உள்ள கோவில் சோழர்காலத்தில்
கட்டப்பட்டது. அக்கோவில் உள்ள கல்வெட்டு மூலம் நமக்கு பல
செய்திகள் தெரிய வருகின்றன. இக்கோவில் இராஜாராஜனின் தமக்கையராகிய
குந்தவை பிராட்டியார், இம்மலையில் ஒரு ஜினாலயம் அமைத்தார். அது
குந்தவை ஜினாலயம் என்று பெற்றது. பொன்னுரைச் சேர்ந்த நந்கை,
அம்மலையின் அருகில் திரு உருவை நிறுவினாள். அருகதேவனுக்குரிய
மலைகளில் மிகச் சிறந்ததாக இத்திருமலை கொள்ளப்படுகிறது.
கோவில் அமைப்பு :
அடிவாரத்திலுள்ள கோவில், சிறு கோவிலாகும்.
முக மண்டத்தில் அருகக் கடவுளின் பெரிய புடைப்புச் சிற்பம் உள்ளது.
உள்ள திருவாசியுடன் கூடிய முக்குடையின் கீழ் அருகக் கடவுளின்
உருவம் செப்பு திருமேனியாகக் காணப்படுகிறது. கருவளையின் வெளியே
சோழர்காலக் கல்வெட்டு காணப்படுகிறது.
மாடிக்கோவில் :
இரு பாளைகளுக்கு இடையே உள்ள இடை வெளியை
இணைத்து அறைகளாகத் தடுத்து இரண்டு பெரிய அறைகள் காணப்டுகின்றன.
இவ்வறைகளுக்குச் செல்ல மாடிப்படிக்கட்டுகள் உண்டு. இப்படிக்
கட்டுகளுக்கு கீழேயும், மேலேயும் அருகக் கடவுளின் சிற்பங்கள்
கண்ணைக் கவரும் வண்ணம் உள்ளன.
ஓவியங்கள் :
அறைகளில் சமண சமயம் தொடர்பான ஓவியங்கள்
உள்ளன. இவ்விரண்டு அறைகளிலும் கி.பி. 13ம் நூற்றாண்டு முதல் 15-ம்
நூற்றாண்டு வரை வரையப்பட்ட ஓலியங்களின் சிதைவைக் காணலாம். ஒரு
அறையில் பெண் கடவுளின் முழு உருவம் சிதையாமல் உள்ளது. அவ்வறையின்
ஒரு பக்கத்தில் அருகக் கடவுள் சமவ சரணத்தில்
'அருள் உரை'க்கும் பாங்குடன் காணப்படுகிறது. தீர்த்தங்கரரைச்
சுற்றி மனிதர்கள், விலங்குகள், பறவைகள் முதலியன உட்கார்ந்து அருள்
உரை கேட்கின்றனர்.
நேமி நாதர் :
மாடி கோவிலின் மற்றொரு பக்கத்தில்
திகம்பரக் கோலத்தில் நின்ற வண்ணம் உள்ள நேமிநாதரின் புடைப்புச்
சிற்பம் 20 அடியில் காணப்படுகிறது. இந்தச் சிலை தான் தமிழகத்தில்
உள்ள சமண சமய சிற்பங்களில் பெரியது என்று சொல்கிறார்கள்.
மலையின் உச்சியில் உள்ள சிறு கோவிலில் ஒரே வட்ட வடிவத்தில் உள்ள
மாக்கல்லில் 5 தீர்த்தங்கரர்களின் உருவம் காணப்படுகிறது. அருகில்
இரு இணையடிகள் செதுக்கப் பட்டுள்ளன. இது போன்றதொரு கோவில்
தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை.
திருவண்ணாமலை - Tiruvannamalai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ள, கோவில், காணப்படுகிறது, அருகக், திருவண்ணாமலை, உள்ளது, தமிழக, கடவுளின், மாவட்டங்கள், tamilnadu, பெரிய, பட்டுள்ளன, சிறு, அருகில், வண்ணம், இரண்டு, உருவம், தகவல்கள், தமிழ்நாட்டுத், தமிழகத்தில், | , கல்வெட்டு, குந்தவை, ஜினாலயம், ஓவியங்கள், சிற்பம், நூற்றாண்டு, பக்கத்தில், அருள், புடைப்புச், வழிகளும், அதில், உண்டு, சாத்தனுர், information, tiruvannamalai, districts, உயரம், அமைப்பு, கட்டப், திருமலை, சுரங்க, பாலங்களும், அமைந்துள்ள, நீர், குன்றின்