திருவண்ணாமலை - தமிழக மாவட்டங்கள்
ஆற்றுவளம் :
செய்யாறு அணை :
ஆரணிக்குக் கிழக்கே பத்து மைல் தொலைவில்
இந்த அணைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து புறப்படும் கால்வாயின் மூலம்
144 குளங்களில் நீர் நிரம்பி 24,000 ஏக்கர் நிலங்களின் பயிர்
வளர்ச்சிக்குப் பயன்பட்டு வருகிறது. இது செய்யாற்றுத் தலைக்
கால்வாய் எனப்படும். இவ்வெள்ளத்தால் பாசன வசதி பெறும் வட்டங்கள்
செய்யாறு, வந்தவாசி ஆகியன. ஆண்டுதோறும் இதன் பராமரிப்புக்காக
ரூ.60,000 செலவு செய்யப்படுகிறது. திருவந்திபுரம் சேயாற்றில்
கட்டப்பட்ட அணை, வந்தவாசி வட்டத்திற்குப் பாசன நீர் அளிக்கிறது.
பாலாற்று அணை மூலமாக செய்யாறு வட்டம் பயடைகிறது.
சாத்தனுர் அணை :
சாத்தனுர் அணை |
இந்த அணை முதல் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் தொடங்கப்பட்டு 1958-இல் முடிவு பெற்றது. இதற்காக மொத்த மதிப்பீட்டுச் செலவு ரூ.258 இலட்சமாகும். இதன் நீர் பெருக்கத்தால் வடற்காடு மாவட்டத்தில் 15,000 ஏக்கர் நிலங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 5800 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்றுள்ளன.
இந்த அணையின் உயரம் 147 அடி. நீளம் 2580அடி. இதில் 1500 அடி கல் கட்டடப் பகுதியும் 1180 அடி மண் அணைப்பகுதியுமாகும். கல்கட்டடம் 80 இலட்சம் கன அடியும் மண் அணைப்பகுதி 43 இலட்சம் கன அடியும் சொற்றளவு கொண்டதாகும். இதில் 46,000 இலட்சம் கனஅடி முதல் 81,000 இலட்சம் கன அடி நீரைத் தேக்கி வைக்க முடியும்.
மலைவளம் :
திருவண்ணாமலை எனும் புனிதமலை இம்மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள ஐவ்வாது மலையின் பகுதிகள் போளூர் வட்டத்தின் மேற்குப் பகுதிவரை பரவி இருக்கிறது. செங்கம் வட்டத்தின் தென் பகுதியில் மன் மலைத் தொடர் உள்ளது.
வேளாண்மை :
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆற்றுப்பாசனம் உள்ள செய்யாறு வட்டம். சிறப்பான முறையில் நெல் உற்பத்தி செய்கிறது. மற்ற பகுதிகளில் ஏரி, கிணற்று பம்புசெட் மூலம் விவசாயம் நடைபெறுகிறது.
புன்செய் பயிக்ளை கம்பு, கேழ்வரகு, நிலக்கடலை, எள் போன்றவை கிணற்றுப் பாசனம் உள்ள இடங்களில் நடைபெறுகிறது. செய்யாறு வட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு பெருமளவில் விளைவிக்கப்படுகிறது.
சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள் :
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை |
கி.பி.1516 இல் கிருஷ்ணதேவராயர், ஆயிரங்கால்மண்டபத்தையும், திருக்குளத்தையும் பதினொரு நிலைக் கோபுரத்தையும், பல்வேறு திருப்பணிகளையும் செய்தமையைக் கல்வெட்டுக்களால் அறிகிறோம். பெரிய கோபுரத்தின் உயரம் 66 மீட்டராகும்.
வல்லாளன் கோபுரம், சக்தி விலாசம், கிளிக் கோபுரம் கலியாண மண்டபம் முதலியன காணத்தக்கன. கோயிள் உள்ளும் வெளியிலுமாக, மலைப்பகுதிகளிலும் 360 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமான தீர்த்தங்கள்: சிவகங்கை, பிரமதீர்த்தம், அக்கினி தீர்த்தம், இந்திர தீர்த்தம் முதலியனவாகும். சித்துக்கள் பல புரிந்த குகை நமச்சிவாயார், குரு நமச்சிவாயர் கோயில்கள் இங்கு உள்ளன.
இங்கு சித்திரைத் திருவிழா, பங்குனித் திருக்கல்யாணத் திருவிழா, மாசி வல்லாளன் விழா, தைத்திருவூடல் விழா, ஆனி விழா, ஆடி அம்பிகை விழா முதலியன ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுகின்றன.
ஆண்டுதோறும் கார்த்திகைத் திங்களில் நடைபெறும் அண்ணாமலை யார் தீபம், தமிழத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கும் பேற்றினைப் பெற்றது. திருவண்ணாமலையின் சுற்றளவு 11 கி.மீ, மலையின் உயரம் 11 கி.மீ இரமண மகரிஷி இம்மலையின் பவளக்குன்று பகுதியிலும், விருபாட்சிக் குகையிலும் 17 ஆண்டுகள் தங்கியிருந்தார். பின்னர் இம்மலையில் உள்ள ரமணாசிரமத்தில் கடைசி வரை இருந்து இறந்தார். இரமண மகரிஷி பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் பெற்றுச் செல்வார்கள்.
திருவண்ணாமலை - Tiruvannamalai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருவண்ணாமலை, செய்யாறு, விழா, tamilnadu, மாவட்டங்கள், இலட்சம், தமிழக, சாத்தனுர், மாவட்டத்தில், உயரம், உள்ளது, ஏக்கர், உள்ள, பாசன, நீர், தமிழ்நாட்டுத், தகவல்கள், இங்கு, மலையின், மகரிஷி, அடியும், | , வட்டத்தின், இங்குள்ள, திருவிழா, தீர்த்தங்கள், தீர்த்தம், முதலியன, கோபுரம், நடைபெறுகிறது, வல்லாளன், இரமண, நீரைத், மூலம், வசதி, வந்தவாசி, தொலைவில், மைல், tiruvannamalai, districts, information, ஆண்டுதோறும், இதன், பெற்றது, நிலங்களும், விழுப்புரம், வட்டத்தில், செங்கம், செலவு, வட்டம், இதில்