திருவள்ளூர் - தமிழக மாவட்டங்கள்
திருவடமுல்லைவாயில் :
தொண்டைமான் என்னும் அரசன் தன் யானையின் காலைச் சுற்றிக் கொண்ட முல்லைக் கொடிகளை வாளால் வெட்டியபோது இறைவன் (மாசிலாமணி ஈசுவரர்) மேலும் பட்டது. அதன் அடையாளமாக இறைவன் மேல் வாள் வடுவும் காணப்படுகின்றது. இது அம்மன்னன் அருள் பெற்ற இடம். இறைவன் அம் மன்னனுக்குத் துணையாக நந்தித்தேவரையும் போருக்கு அனுப்பியதாகப் புராணம் கூறும். நந்தி கிழக்கு நோக்கி இருக்கிறது. இறைவன் தீண்டாத் திருமேனி. சந்தனக் காப்பிடுவது வழக்கில் உள்ளது. இவ்வூருக்கு சண்பகராண்யம் என்னும் பெயரும் உண்டு. சண்பகச் சோலை சூழ் திருமுல்லைவாயில் என்று சுந்தரர் பாடியுள்ளார். சென்னைக்கு மேற்கில் உள்ள அம்பத்தூருக்கு வடமேற்கில் 2 1/2 கி.மீ. தொலைவிலும், ஆவடிக்கு வடகிழக்காக 4 கி.மீ. தொலைவிலும் இவ்வூர் உள்ளது.
திருவல்லம் :
கோள்கள் ஒன்பதும், வல்லாள மன்னனும் இவ்விறைவனை (வல்லநாதர்) வழிப்பட்ட ஊர். நந்தி கிழக்கு நோக்கி உள்ளது. தீக்காலியென்னும் அவுணன் வழிபட்டதால், தீக்காலிவல்லம் எனவும் அழைக்கப்படுகிறது. திருவலம் என்ற பெயரும் உண்டு. சென்னை - காட்பாடி இருப்புப்பாதையில் திருவல்லம் இரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கில் 3 கி.மீ. தொலைவில் நீவா ஆற்றின் கரையில் இக்கோயில் உள்ளது.
திருக்கச்சூர் ஆலக்கோயில் :
இறைவன் விருந்திட்ட வரதர். கோயில் மரம் ஆல் என்பதால் ஆலக்கோயில் என்னும் பெயர் எய்தியது. பசியால் வாடிய சுந்தரருக்கு இறைவன் பொதிசோறு அளித்தார். பின் இறைவன் மறைந்தருளியதால் வருந்தி சுந்தரர் திருப்பதிகம் பாடினார். அமிர்தம் திரண்டு வருதற்பொருட்டுத் திருமால் ஆமையாக இருந்து வழிப்பட்ட ஊராதலால் திருக்கச்சூர் (கச்சபம் = ஆமை) என்ற பெயர் வழங்குகிறது. இக்கோயிலுக்கு மேற்கில் மலைமருந்தீசர் திருக்கோயில், மேற்கில் இரந்திட்ட வரதர் கோயில், வழியில் கருக்கடிப் பிள்ளையார் கோயில்களும் உள்ளன. இது சிங்க பெருமாள் கோயில் இரயில் நிலையத்திற்கு வடமேற்கே 2 1/2 கீ.மீ. தொலைவில் உள்ளது.
திருவெண்பாக்கம் :
![]() |
திருவெண்பாக்கம் |
முக்கிய ஊர்கள் :
எண்ணுர் :
தென்னஞ் சோலைகள் சூழ்ந்த ஊர். படகோட்டிப் பொழுது போக்குவதற்கு ஏற்ற இடம். இங்கு உப்பளங்கள் நிரம்ப உள்ளன. பெருஞ்தொழிற்சாலைகள் பல இயங்கி வருகின்றன. எண்ணுரில் கடல்வாழ் உயிரினங்கள் நிலையம் உள்ளது. உயிரினங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், படகோட்டுவதற்கும், மீன் பிடித்தலுக்கும், நீச்சல் பழகுவதற்கும் ஏற்ற இடமாக அந்நிலையம் விளங்குகிறது. அனல் மின்னாக்கம், உரத்தொழில் ஆகியவற்றில் இவ்வூர் சிறப்புறுகிறது.
அம்பத்துர் :
இது சென்னையிலிருந்து 10 மைல் தொலைவில் உள்ளது. தொழில் நகரம். அருகில் ஆசியாவிலேயே பெரிய தொழிற்பேட்டைகளில் ஒன்றான அம்பத்தூர் தொழிற்பேட்டை இருக்கிறது. இவ்வூரிலிருந்து சென்னைத் துறைமுகத்துக்குச் செல்ல நெடுஞ்சாலை வசதி உண்டு. மண்பாண்டத் தொழில், செங்கல் அறுக்கும் தொழில் இவ்வூரில் சிறப்பாக நடைபெறுகிறது. டி.ஐ.சைக்கிள் தொழிற்சாலையும், டன்லப் டயர் தொழிற்சாலையும் இங்குள்ளன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவள்ளூர் - Thiruvallur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, இறைவன், என்னும், திருவள்ளூர், கோயில், உண்டு, தமிழக, மாவட்டங்கள், tamilnadu, இவ்வூருக்கு, மேற்கில், இவ்வூர், சுந்தரர், தொலைவில், தொழில், தமிழ்நாட்டுத், இரயில், பெயர், தகவல்கள், திருவெண்பாக்கம், இங்கு, சுந்தரமூர்த்தி, மின்னல், ஏற்ற, தொழிற்சாலையும், | , வேறு, பூண்டி, வரதர், அருகில், நந்தியின், தொலைவிலும், நந்தி, கிழக்கு, இடம், information, thiruvallur, districts, நோக்கி, இருக்கிறது, நிலையத்திலிருந்து, திருக்கச்சூர், வழிப்பட்ட, திருவல்லம், பெயரும், ஆலக்கோயில்