திருவள்ளூர் - தமிழக மாவட்டங்கள்
திருவாலங்காடு :
கூத்தப்பொருமான் காளியோடு ஊர்த்துவ தாண்டவம் ஆடும் தலம். இங்கு இறைவன் பணித்தபடி காரைக்கால் அம்மையார் தலையால் நடந்துச் சென்றார். திருஞான சம்பந்தரும், சுந்தரரும் இவ்வூரைக் காலால் மிதிக்க அஞ்சினர். இறைவருள் கூடிய பின்னர் வந்து வழிப்பட்டனர். இவ்வூருக்கு வடாரணியம், பழையனுர், ஆலங்காடு என்னும் பெயர்களும் உண்டு. நீலியின் பொய்யுரையை நம்பிய
திருவாலங்காடு |
திருவொற்றியூர் :
இறைவன் மாணிக்கத் தியாகரின் ஆணைப்படி சக்கிலியாரை சுந்தரர் மகிழமரத்தடியில் திருமணம் செய்து கொண்டார். ஆண்டுதோறும் மாசிமாத மக நட்சரத்தித்தன்று மகிழடி சேவை என இது விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பட்டினத்தார் சமாதியும், அப்பரடிகள் கோயிலும் தனியே உள்ளன. ஆதிபுரியென்னும் பெயருள்ள இவ்வூரில் இறைவன் கோயிலைச் சுற்றி வரும்போது, வட்டப் பாறையம்மன் என்னும் துர்க்கை கோயிலை வடக்குப் பக்கத்தில் காணலாம். ஊழி வெள்ளத்தை மேலே வரவொட்டாது தடுத்தமையால் ஒற்றியூர் எனப் பெயர் ஏற்பட்டது. சென்னைக்கு வடக்கில் 8 கி.மீ. தொலைவில் திருவொற்றியூர் இரயில் நிலையம் உள்ளது.
திருவேற்காடு :
திருவேற்காடு |
திருவலிதாயம் (பாடி) :
பாரத்துவாசர், வியாழகுரு, அனுமார் முதலியோர் வழிபட்ட தலம். இவ்வூர்க் கோயில் மிகவும் சிறியது. ஆனால் மிக்கச் சிறப்புடையது. சென்னைக்கு மேற்கே 13 கி.மீ. தொலைவிலும், கொரட்டூர் இரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சென்னையிலிருந்து வில்லிவாகம், கொன்னுர் வழியாகவும் செல்லலாம்.
திருப்பாசூர் :
இறைவன் பாசூர்நாதர். சிவப்பெருமான் மூங்கிலடியில் தோன்றியதால் (பாசு=மூங்கில்) இப்பெயர் பெற்றார். கரிகால் சோழ மன்னனின் பகைவனனான குறும்ப அரசன் ஒருவனுக்கு உதவி செய்ய வேண்டிச் சமணர்கள் பெரும்பாம்பு ஒன்றைக் குடத்தில் இட்டுச் சோழனுக்கு அனுப்பினர். சிவப்பெருமான் இங்கு பாம்பாட்டியாக வந்து, சோழன் உயிரைக் காத்தார். இவ்வரலாறு அப்பர் தேவாரத்தில் சொல்லப் படுகிறது. பிள்ளையார் திருவுருவங்கள் மிகப்பல இவ்வூரில் உள்ளன. இவ்வூர் திருவள்ளூருக்கு வட மேற்கில் 7 கி.மீ. தொலைவிலும், கடம்பத்தூர் இரயிலடியிலிருந்து வடக்கில் 5 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
திருக்காளத்தி :
திருக்காளத்தி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவள்ளூர் - Thiruvallur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தொலைவிலும், உள்ளது, இறைவன், திருவள்ளூர், என்னும், கோயில், tamilnadu, தமிழக, மாவட்டங்கள், இரயில், நிலையத்திலிருந்து, இவ்வூரில், திருவாலங்காடு, சென்னைக்கு, மலையும், தமிழ்நாட்டுத், பெயர், தகவல்கள், திருவேற்காடு, மிக்கச், சிவப்பெருமான், இருக்கிறது, | , காளத்தி, திருக்காளத்தி, இவ்வூரை, சிறப்புடையது, வழியாகவும், திருப்பாசூர், இங்கு, வந்து, தலம், information, thiruvallur, districts, உண்டு, சென்னை, துர்க்கை, எனப், திருவொற்றியூர், இவ்வூர், தொலைவில், வடக்கில்