சிவகங்கை - தமிழக மாவட்டங்கள்
முக்கிய ஊர்கள்:
தேவக்கோட்டை:
தேவக்கோட்டை என்பது தேவர் கோட்டையைக் குறிக்கும். மதுரை இங்கிருந்து 60 மைல். பல நகரங்களுக்கும் பஸ் வசதி இருக்கிறது. சேவு.அ.அண்ணாமலைச் செட்டியார் கல்லூரியும், பி.எஸ்.எஸ். சோமசுந்தரம் செட்டியார் நன்கொடையால் அரசினர் நடத்தும் மருத்துவமனையும் உள்ளன. தேவக்கோட்டையில்தான் நகரத்தார் இனத்தவர் அதிகமாக வாழ்கிறார்கள். தேவக்கோட்டை ஜமீன்தார்கள் இராமேஸ்வரம் கோவிலுக்கு செய்யும் திருப்பணியால் அக்கோவிலுக்கு பரம்பரை அறங்காவலர்களாக உள்ளனர். இங்கு வீடுகள் மிக பெரியனவாக உள்ளன. அரசியல் எழுச்சி இந்நகரில் மிகுந்திருந்ததால் ஒரு சாலைக்கு தியாகிகள் சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சருகணி:
தேவக்கோட்டை, சிவகங்கை, திருவாடனைச் சாலைகள் கூடுமிடத்தில் இவ்வூர் உள்ளது. கத்தோலிக்கருக்குச் சருகணி ஒரு புனிதத் தலமாக இருந்து வருகிறது.
சங்கரபதிக் கோட்டை:
அமராவதிப்புதூருக்கு அருகே இவ்வூர் உள்ளது. சின்ன மருதுவும் பெரிய மருதுவும் இவ்வூரில் கோட்டைக் கட்டி வேட்டையாடியதாகக் கூறுவர். அவர்கள் வழிபட்ட கோவில் இன்றும் அரசு பராமரிப்பில் இருந்து வருகிறது.
காரைக்குடி:
![]() |
காரைக்குடி |
நடைபெறுகின்றன.
திருப்பத்தூர்:
காரைக்குடியில் இரயில் சந்திப்பிலிருந்து, 20 கி.மீ. தொலைவில் இவ்வூர் இருக்கிறது. திருப்பத்தூர் வட்டத் தலைநகராயும், ஊராட்சி ஒன்றியத் தலைநகராயும் விளங்குகிறது. செட்டிநாட்டு ஊர்கள் சூழ்ந்துள்ளதால் வணிகம் சிறப்பாக நடைபெறுகிறது. குன்றக்குடி, பிரான்மலை, பிள்ளையார்பட்டி, திருக்கோட்டியூர் ஆகிய வழிபாட்டுத் தலங்கள் இவ்வூரைச் சுற்றியுள்ளன. எல்லா ஊர்களுக்கும் பஸ் வசதி சாலை வசதி இருக்கின்றது. சனிக்கிழமைகளில் சந்தை கூடுகிறது. அரசினர் மருத்துவமனையும் உள்ளது. இங்கு மருதுபாண்டியர் கட்டிய கோட்டை அழிந்து விட்டது. மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்டு புதைக்கப்பட்டது இவ்வூரில்தான். சுவிடிஷ் மருத்துவமனைக்குள் இவர்களின் சமாதி இருக்கிறது. பெரிய மருது பாண்டியவர் விவசாயிகளுக்கென கட்டிய பெரிய கேணிகள் இவ்வூரைச் சுற்றிலும் உள்ளன. காராளன் கேணி என்று இவற்றை அழைப்பர்.
நெற்குப்பை:
இது ஒரு பேரூராட்சியாகும். தமிழக மாவட்டங்களைப் பற்றி சுமார் 15 நூல்கள் எழுதிய சோம. லெக்குமணச் செட்டியார் இவ்வூரைச் சேர்ந்தவராவார். இவ்வூர் மணிமுத்தாறின் கரையில் அமைந்து நீர்பாசனம் பெறுகிறது. திருவிழாக்கள் நிறைய நடைபெறுகின்றன. கல்வி வசதியும் மருத்துவ வசதியும் நிறைந்த இவ்வூர் பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது.
கீழ்ச் சீவற்பட்டி:
செட்டிநாட்டின் பெரிய ஊர்களில் ஒன்று. பாடுவார் முத்தப்பச் செட்டியார் எனும் பெரும் புலவர் பிறந்த ஊர்.
சீறுகூடல்பட்டி:
வாலி கண்டபுரம் எனும் ஊருக்கு அருகில் இது உள்ளது. இது கவியரசு கண்ணதாசன் பிறந்த ஊர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவகங்கை - Sivaganga - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இவ்வூர், இங்கு, சிவகங்கை, உள்ளது, தமிழக, வருகிறது, செட்டியார், தேவக்கோட்டை, பெரிய, வசதி, tamilnadu, மாவட்டங்கள், காரைக்குடி, இவ்வூரைச், சிறப்பாக, தமிழ்நாட்டுத், நடைபெறுகின்றன, இருக்கிறது, தகவல்கள், நடைபெறுகிறது, பள்ளிகளும், சந்தை, கூடுகிறது, மருதுபாண்டியர், பிறந்த, | , எனும், வசதியும், தலைநகராயும், கட்டிய, திருப்பத்தூர், இருந்து, அரசினர், மருத்துவமனையும், ஊர்கள், information, sivaganga, districts, இந்நகரில், சாலை, பெயர், ஆகிய, மருதுவும், கோட்டை, சருகணி, இரயில்