பெரம்பலூர் - தமிழக மாவட்டங்கள்
முக்கிய ஊர்கள் :
பெரம்பலூர் :
மாவட்டடத் தலைநகராய் விளங்குகிறது. மக்கள் தொகை மிகுதி. நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளதால் போக்குவரத்து அதிகம். வேளாண்மை சிறப்பாக நடை பெறுகிறது. இங்குள்ள பெருமாள் கோவில் புகழ் பெற்றது. கண்நோய்க்கு இக்கோயிலில் பூக்கும் நத்தியாவெட்டைப் பூவை கண்களில் ஒற்றிக் கொள்வர். இங்குள்ள வெள்ளந் தாங்கி அம்மன் கோவிலும் மக்களால் பூசிக்கப்படும் பெரிய கோயிலாகும். அரசு அலுவலகங்கள், வங்கிகள், திரைப்பட அரங்குகள், பஸ் வசதி, தந்தி, தபால் வசதி முதலியவற்றால் சிறந்த நகரமாகத் திகழ்கிறது.
![]() |
திருவெள்ளறைப் பெருமாள் கோயில் |
துறையூரில் நெசவுத் தொழிலை மேற்கொண்டுள்ள செங்குந்தர் மரபினர் பெருந்தொகையினராக வாழ்கின்றனர். இவர்கள் நெய்யும் உறுதியான வேட்டி சிறப்புடையது. இங்கு நீண்ட கடைவீதி உள்ளது. வாணிகத்திற்குச் சிறந்த இடம். போக்குவரத்து வசதி பெற்றுள்ளது. துறையூருக்கருகில் பச்சை மலைப் பகுதியின் பெரும்பகுதி தென்படுகிறது. இந்த மலையின் உயரம் 2500 அடி. இதன் பரப்பு 15 ச.மைல். இங்கு சுமார் 5000 பேர் வசிக்கின்றனர். நெல், சாமை, கம்பு முதலியன இங்கு முக்கிய விளைபொருட்கள். பலாவும் எலுமிச்சையும் மிகுதியாக விளைகின்றன. பச்சைமலையில் வாழும் மளையாளிகள் உளுந்து, மொச்சை, கொட்டைமுத்து ஆகியவற்றைப் பயிரிடுகின்றன. இவர்கள் வேட்டை நாய்களையும், செந்நாய்களையும் வளர்க்கிறார்கள்.
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளுக்குத் துறையூரில் ஒரு மடம் இருக்கிறது. இவ்வூர் வைணவச் செல்வாக்குப் பெற்றது. சுற்றியுள்ள பல ஊர்களின் பெயர்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஸ்ரீரங்கத்திறகு முன்னமே ஏற்பட்டதாகக் கருதப்படும் திருவெள்ளறைப் பெருமாள் கோயில் இங்கிருக்கிறது. காசி, கங்காராம் விசுவநாதர் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. இவ்வூர் திரெளபதி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
அருகிலுள்ள சிங்களாண்டபுரம் என்னும் சிற்றுரை ஒரு காலத்தில் சிங்கள மன்னன் ஒருவன் ஆண்டதாகச் சொல்லப்படுகிறது. துறையூரிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள மலை மீது பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டிருக்கிறது. மலையின் உயரம் 400 அடி. மலையுச்சியை அடைய வசதியாக படிக்கட்டுகள் வெட்டப்பட்டுள்ளன.
![]() |
இரஞ்சன்குடிகோட்டை |
ரஞ்சன்குடிகோட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அழகிய சிறிய கோட்டையாகும். கி.பி 17ஆம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் வழி வந்த ஜகின்தார் என்பவரால் கட்டப்பட்டது. தற்பொழுது இந்திய தொல்பொருள் அளவை கழகத்தின் பராமரிப்பில் உள்ளது. கி.பி 1751 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும்(முகமது அலி உதவியுடன்) பிரஞ்சு படையினருக்கும்(சந்தா சாகிப் உதவியுடன்) இடையே நடைபெற்ற வாலிகொண்டா போர் நடைபெற்ற இடம். முகலாய மன்னர்களின் கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.
வேப்பூர்:
வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் என்பது இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் இதுவும் ஒன்றாகும். வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வேப்பூரில் இயங்குகிறது.
சாத்தனூர்:
சாத்தனூர் (Sattanur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி ஆகும். இவ்வூரில் புகழ்பெற்ற தேசிய கல்மரப் பூங்கா உள்ளது.
நக்கசேலம்:
பெரம்பலூரில் இருந்து துறையூர் செல்லும் பிரதான சாலையில் பச்சை மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.( பெரம்பலூரில் இருந்து சுமார் 22 கி. மீ தொலைவிலும், துறையூரில் இருந்து 13 கி. மீ தொலைவிலும் அமைந்துள்ளது. )நக்கசேலம் கிராமத்தில் சோழ, பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில்கள் உள்ளன. இவ்வூரை சுற்றி புது அம்மாபாளையம், ஈச்சம்பட்டி, சிறுவயலூர், மங்கூன், விராலிப்பட்டி ஆகிய குக்கிராமங்கள் உள்ளன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெரம்பலூர் - Perambalur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - பெரம்பலூர், ஊராட்சி, பெருமாள், tamilnadu, உள்ளது, தமிழக, மாவட்டங்கள், தகவல்கள், இங்கு, தமிழ்நாட்டுத், வசதி, கோயில், அமைந்துள்ள, துறையூரில், வேப்பூர், இருந்து, மாவட்டத்தில், அமைந்துள்ளது, இந்திய, காலத்தில், இரஞ்சன்குடிகோட்டை, நடைபெற்ற, உதவியுடன், ஒன்றியம், பெரம்பலூரில், தொலைவிலும், | , நக்கசேலம், சாத்தனூர், தமிழ்நாடு, மாநிலத்தில், perambalur, மலையின், கோவில், பெற்றது, அம்மன், இங்குள்ள, சிறப்பாக, information, முக்கிய, போக்குவரத்து, சிறந்த, திருவெள்ளறைப், உயரம், மைல், சுமார், districts, பச்சை, துறையூர், இவர்கள், இடம், இவ்வூர்