பெரம்பலூர் - தமிழக மாவட்டங்கள்
இயற்கை வளங்கள்
ஆறுகள்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லாறு, சுவேதா ஆறு, வெள்ளாறு (வடக்கு), சின்னாறு ஆகிய ஆறுகள் உள்ளன.
அணைகள்:
சின்னாறு அணை, விசுவக்குடி அணை முதலிய அணைகளிலிருந்து நீர் தேக்கப்பட்டு விவகாரத்திற்கும், நீர்மின் உற்பத்திக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சின்னாறு அணை:
சின்னாறு நீர்த்தேக்கம், தமிழ்நாடு, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரத்தைச் சேர்ந்த எறையூரில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை NH45 ஒட்டி அமைந்துள்ளது. இது சின்னாற்றின் குறுக்கேக் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கமாகும். இந்நீர்த்தேக்கம் 1958 இல் அப்போதைய முதலமைச்சர் காமராஜர், மற்றும் கக்கன் ஆகியோரின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டதாகும். இதன் மூலம் ஏறத்தாழ 716 ஏக்கர் நிலங்காள் பாசன வசதி பெறுகின்றன. இதையொட்டி அரசு பயனியர் மாளிகையும் உள்ளது.
![]() |
விசுவக்குடி அணை |
விசுவக்குடி அணை விசுவக்குடி தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள விசுவக்குடி அருகில் கல்லாற்று ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை. இந்த அணை ரூ.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு 2015 இல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. வேப்பந்தட்டை அருகே உள்ள விசுவக்குடியில் பச்சைமலை-செம்மலை இடையே கட்டப்பட்டுள்ள புதிய அணைக்கு பச்சைமலை, செம்மலையில் இருந்து ஏறக்குறைய 5.61 சதுர மைல்கள் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழைநீர் கல்லாற்று நீரோடை வழியாக இந்த அணைக்கு வந்தடைகிறது. கல்லாறு ஓடையின் குறுக்கே 665 மீட்டர் நீளமும் 10.3 மீட்டர் ஆழமும் கொண்டுள்ளது. இந்நீர்த்தேக்கத்தில் 41 மில்லியன் கனஅடி நீரை தேக்கிவைத்து 30.67 மில்லியன் கனஅடி நீரை பாசனத்திற்கும், 10 மில்லியன் கனஅடி நீரை குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தமுடியும். இந்த அணையில் 2 நீர் வெளியேற்று வாய்க்கால்கள் உள்ளன. நடுவில் உபரிநீர் வெளியேற்று வாய்க்காலும் உள்ளது. 2,500 ஏக்கர் பயிர்சாகுபடிக்குரிய நீர்த்தேவையை இவ்வணை பூர்த்தி செய்யும்.
அருவிகள்:
மயிலூற்று அருவி, ஆனைக்கட்டி அருவி, கோரையாறு அருவி, வெண்புறா அருவி ஆகிய அருவிகள் இங்கு உள்ளன.
![]() |
மயிலூற்று அருவி |
மயிலூற்று அருவி அல்லது மயிலூத்து அருவி (Myluthu Falls) தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக விளங்கும் பச்சைமலை அடிவாரத்தில் உள்ள லாடபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு அருவி. இது பெரம்பலூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் துறையூர் செல்லும் வழியில் உள்ளது. ஆண்டின் பெரும்பகுதியில் வறண்டிருப்பினும் அக்டோபர் - நவம்பர் திங்களில் பொழியும் மழையால் இந்த அருவி செழிப்புற்றுச் சுற்றுலா ஈர்ப்புப் பகுதியாக விளங்குகின்றது.
![]() |
கோரையாறு அருவி |
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள கோரையாறு கிராமத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பச்சைமலை மீது கோரையாறு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்நீர் வீழ்ச்சியில் மலை உச்சியிலிருந்து தண்ணீர் கொட்டும் இடத்தில் 60 அடி ஆழம் கொண்ட நீர் தேக்கமும் உள்ளது.
இவ்வருவியில், ஆண்டுதோறும் மழை காலத்திலும் மற்றும் அக்டோபர் முதல் ஜனவரி வரையுள்ள குளிர் காலங்களிலும் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமிருக்கும்.
ஏரிகள்
பெரிய ஏரி, சித்தேரி, வெண்பாவூர் ஏரி, வடக்கலூர் ஏரி, கீரவாடி ஏரி, லாடபுரம் பெரிய ஏரி, குரும்பலூர் ஏரி ஆகிய ஏரிகள் இங்கு உள்ளன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெரம்பலூர் - Perambalur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - அருவி, பெரம்பலூர், விசுவக்குடி, கோரையாறு, பச்சைமலை, சின்னாறு, உள்ளது, மயிலூற்று, தமிழக, மாவட்டங்கள், tamilnadu, உள்ள, நீரை, கட்டப்பட்டுள்ள, கனஅடி, மில்லியன், அமைந்துள்ள, நீர், ஆகிய, மாவட்டம், தகவல்கள், வேப்பந்தட்டை, தமிழ்நாட்டுத், இங்கு, districts, லாடபுரம், perambalur, அக்டோபர், பெரிய, | , ஏரிகள், தண்ணீர், அருவிகள், தொலைவில், information, ஓடையின், கல்லாற்று, ஊராட்சியில், ஏக்கர், குறுக்கே, கல்லாறு, அமைந்துள்ளது, ஆறுகள், மீட்டர், அணைக்கு, வெளியேற்று