நாகப்பட்டினம் - தமிழக மாவட்டங்கள்
தஞ்சையை ஆண்ட மராட்டிய அரசர் பிரதாப்சிங் இந்த தர்காவின்
முன்னாலுள்ள 90 அடி (28 மீட்டர்) உயரமுள்ள மினார் ஒன்றை
அமைத்திருக்கிறார். இது தவிர இன்னும் நான்கு கூண்டுகள் உள்ளன.
கடலிலிருந்து பார்த்தால் இவை நன்றாக தெரியும். தர்காவுக்குள்
கோயில்களில் காணப்படுவது போன்ற மண்டபமும், திருக்குறளும்
உள்ளன. நாகூர் ஆண்டவர் காலத்தில் வாழ்ந்த டச்சு கவர்னர், அவர்
நினைவாக 'பீர் மண்டபம்' என்ற மன்றத்தை கட்டியுள்ளார். மாராட்டிய
அரசர் துளஜாஜி, தர்காவின் நடைமுறைச் செலவுக்காக 6,000 ஏக்கர்
நன்செய் நிலத்தை வழங்கியுள்ளார். நாகூர் ஆண்டர் தர்கா மீது
பொன்னாடை போர்த்தும் உரிமை இந்துக்களுக்கு வழங்கப்படுகிறது.
வேளாங்கண்ணி:
![]() |
வேளாங்கண்ணி |
வேளாங்கண்ணிக்கு, "கீழை நாட்டு லூர் டீஸ்" (Lourdes of the East) என்ற பெயர் உண்டு.
தரங்கம்பாடி:
![]() |
டேனிஷ் கோட்டை |
தரங்கம் என்பது அலைகளைக் குறிக்கும். இவ்வூரில் கடல் அலைகள் ஓசை நயத்துடன் பாடிக் கொண்டு கரையை மோதுகிறதாம். அதனால் இவ்வூரை 'தரங்கம்பாடி' என்று அழைத்தனர். இப்பொருள்பட ஐரோப்பியர் சிலரும் இவ்வூரைப்பற்றி Song of Tranquebar; waves of Tran quebor என்ற தலைப்புகளில் நூற்களுக்கும் கட்டுரைகளும் எழுதியுள்ளனர். தென்னிந்தியாவில் கிருத்துவம் பரப்பும் தலைமையிடமாகவும் இருந்தது. இங்கிருந்தே புரொட்டாஸ்டாண்ட் மதம் பரவியது. சீகன்பால்க் என்ற ஜெர்மானியர் தமிழ் எழுத்துக்களை ஜெர்மனியில் செய்ய சொல்லி தரங்கம்பாடியில் அச்சிட்டார். 'புதிய ஏற்பாடு' 1715-இல் இங்கு அச்சிடப்பட்டுள்ளது. இந்நாளில் இந்நகரம் சிற்றுராக இருப்பினும், பழைய கட்டடங்கள், பாழடைந்துள்ள சின்னங்கள், டேனிஷ்காரரின் புகழ்பரப்பும் கோட்டை, மசூதி, கோயில்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை இவ்வூரின் தொன்மையை தெரிவிக்கின்றன.
டேனிஷ் கவர்னர் வாழ்ந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள உப்பள அலுவலகமும், டேனிஷ் தளபதியுடைய இல்லத்தின் கனத்த சுவர்களும், டேன்ஸ்பர்க் கோட்டையின் கிழக்கு மதிலில் வைக்கப்பட்டுள்ள பழைய காலத்துத் துப்பாக்கியும், கோட்டையருகே கடலோரத்தில் சீகன்பால்க் நினைவு சின்னமும் காணத்தக்கவை.
1624-இல் இக்கோட்டை, டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியாரால் டென்மார்க் அரசருக்கு விற்கப்பட்டது. இக்கோட்டை ஐரோப்பாவிலுள்ள கோட்டைகளைப் போன்றது. நடுவே ஒரு முற்றம், சுற்றிலும் பல கட்டிடங்கள், அவற்றையடுத்துச் செங்கற்களால் உறுதியாகக் கட்டப்பெற்ற மதில்கள். மதில்களின் நான்கு மூலைகளிலும் காவல் அரண்கள். அவற்றை அடுத்து அகழிக்ள என்ற அமைப்பில் அது கட்டப்பெற்றிருக்கிறது. கோட்டைக்குள் டேனிஷ் கவர்னரின் மாளிகையும், படைத்தலைவரின் மாளிகையும், வெடி மருந்துக் கிடங்கும், கிறித்துவ ஆலயங்களும், சுங்க அலுவலகமும் சிறைச்சாலையும் இருந்தன. அவர்களுடைய தேவைக்கேற்ப, 1791 வரை பல தடவை இக்கொட்டை திருத்தியமைக்கப்பட்டது. 1845-இல் டேனிஷ்காரர்கள் பிரிட்டீசாருக்கு 12 1/2 இலட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு தங்கள் நாடு சென்றுவிட்டனர்.
கோடியக்கரை வனவிலங்கு புகலிடம்:
கோடியக்காடு வேதாரண்யத்துக்குத் தெற்கே இருக்கிறது. 10 கி.மீ. நீளத்துக்கும் 5 கி.மீ அகலத்துக்கும் அடர்ந்துள்ள இக்காடு இருமருங்கிலும் கடலால் சூழப்பட்டிருக்கிறது. இதைச் சுற்றிலும் உவர்மண் இருக்கிறது. மழை குறைவாக இருப்பதால், நீண்ட அகன்ற இலையுள்ள மரங்கள் இங்கு வளருவதில்லை. பாலைப்பழம், துவரம்பழம், கொழுஞ்சிப்பழம் போன்ற சில காட்டுப் பழங்களும், கீரை, கிழங்கு வகைகள் சிலவும், சீந்தில் கொடி என்னும் மூலிகையும், கோழிதுவரை என்ற கொட்டையும் பூனைக்காய்ச்சிக் கொட்டையும் முட்புதர்களும் இக்காட்டில் மண்டிக் கிடக்கின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாகப்பட்டினம் - Nagapattinam - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - டேனிஷ், தமிழக, நாகப்பட்டினம், tamilnadu, மாவட்டங்கள், கோட்டை, தகவல்கள், தமிழ்நாட்டுத், தரங்கம்பாடி, சீகன்பால்க், தரங்கம்பாடியில், இவ்வூரில், இங்கு, சுற்றிலும், இருக்கிறது, கொட்டையும், | , மாளிகையும், ஆரோக்கிய, அலுவலகமும், இக்கோட்டை, பழைய, வேளாங்கண்ணி, தர்காவின், நான்கு, அரசர், information, nagapattinam, districts, போன்ற, நாகூர், நாகப்பட்டினத்திற்கு, தெற்கே, நினைவாக, அவர், வாழ்ந்த, கவர்னர், மாதா