நாகப்பட்டினம் - தமிழக மாவட்டங்கள்
சுற்றுலா செல்ல வேண்டிய
இடங்கள்:
பூம்புகார்:
காவிரியாறு கடலோடு கலக்கும் இடமே காவிரிப் பூம்பட்டினம். ஆறு கடலுள் புகும் ஊர் என்பதையே 'புகார்' என்ற சொல் குறிக்கிறது. பூம்புகார், அக்காலத்தில் எப்படி இருந்தது என்பதை அறிய பட்டினபாலையும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும் உதவுகிறது.
காவிரிப்பூம்பட்டினம்-மருவூர்பாக்கம், பட்டினப்பாக்கம் என்ற இருபகுதிகளாக இருந்ததையும், சோழரின் தலைநரமாகவும், துறைமுக நகரமாகவும், வணிகத்தில் கொடிகட்டி பறந்தது. பல நாட்டு வணிகர்களும் திரியும் தெருக்களும், யவன இருக்கையும், கண்ணகி, கோவலன், மணிமேகலை முதலியோரின் வாழ்க்கையின் முக்கிய இடமாக இருந்ததையும் இலக்கியங்களின் வாயிலாக அறிகிறோம்.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே பெரும் துறைமுகப் பட்டினமாக
![]() |
பூம்புகார் |
நாகூர்:
![]() |
நாகூர் |
நாகூர் கந்தூரி விழா முஸ்லீம் ஆண்டு தொடங்கும் போது நடைபெறுகிறது. நாகூர் ஆண்டவர் இறந்த நாள் முதல் 14 நாட்களுக்கு இவ்விழா நடைபெறுகிறது. இந்த விழா நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரும். விழாதேதி ஆண்டு தோறும் மாறும். அக்காலத்தில் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்படும்.
கந்தூரித் திருவிழாவில் பாய்மரக்கப்பல் போலவும் தோணி போலவும் மரத்தாலும் காகிதத்தாலும் செய்த பொம்மைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. கடலில் செல்லும் கப்பல்களைப் புயலினின்றும் காற்றினின்றும் நாகூர் ஆண்டவரே காப்பாற்றி அவைகளைக் கரையில் சேர்க்கிறார் என்ற நம்பிக்கை. இவ்வூர் மக்களாகிய மரக்காயரிடம் வேரூன்றியிருப்பதாலேயே இவ்வாறு ஊர்வலம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் விழவில் சந்தனக்கூடு ஊர்வலம் நிகழும். தர்காவைப் போன்ற வடிவத்தில் அமைத்த ஒரு தேரில் சந்தனம் முதலிய நறுமணப்பொருள்கள் சேமித்து வைக்கப்பெற்று, பிறகு அவையாவும் நாகூர் ஆண்டவர் சமாதியின் மீது போடப்பட்டு வழிபட வந்திருப்பவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
முஸ்லீம்கள் இத்திருவிழாவின் போது உண்ணாநோன்பு மேற்கொள்வர்; இறுதி நாளில் கடலிற்று சென்று தம் கரங்களைக் கழுவுவார்கள். இத்திருவிழாவுக்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், இலங்கை, பர்மா, மலேசியா, அரபு நாடுகள் ஆகியவற்றிலிருந்தும் 2 இலட்சம் பேர் நாகூருக்கு வருகின்றனர். வருபவர்கள் மூலம் தர்காவுக்கு 10 இலட்சத்திற்கு மேற்பட்ட அளவு பணம் கிடைக்கும். செலவு போக வருவாயில் எஞ்சும் தொகை நாகூர் ஆண்டவரின் வளர்ப்புக் குழந்தையான யூசூப் என்பாரின் வாரிசுகளால் 640 பங்காக பகிர்ந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது.
நாகூர் ஆண்டவரின் மனைவி, மக்களின் சமாதியும் தர்காவிலேயே உள்ளன. வியாழக்கிழமைகளில் இங்கு மக்கள் கூட்டம் மிகுதியாக இருக்கிறது. புறாக்களைப் பறக்கவிட்டு வழிபடும் முறையும் இங்கு உண்டு. நாகூர் ஆண்டவராகிய சாகுல் அமீது, முகம்மது நபியின் வழித்தோன்றல் என்பது வரலாறு. தஞ்சை ஆண்ட அச்சுதப்ப நாயக்கரின் வயிற்று வலியைப் போக்கி அவனுடைய பேராதரவைப் பெற்று நாகூரில் தங்கினார். நாகூர் ஆண்டவர் உயிர்நீத்தபிறகு நாகூரில் அவருக்குத் தர்காவைக் கட்டி வைத்ததோடு கந்தூரி விழாச் செலவுக்காக நிலங்களையும் அச்சுதப்ப நாயக்கரே மானியம் விட்டிருக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாகப்பட்டினம் - Nagapattinam - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நாகூர், தமிழக, ஆண்டவர், இங்கு, நாகப்பட்டினம், tamilnadu, மாவட்டங்கள், முஸ்லீம், நடைபெறுகிறது, பூம்புகார், தமிழ்நாட்டுத், தகவல்கள், நாள், போது, ஆண்டு, ஊர்வலம், நாகூரில், | , அச்சுதப்ப, ஆண்டவரின், விழா, போலவும், இந்துக்கள், இருந்ததையும், என்பதை, அக்காலத்தில், information, கடலில், அரசு, வருகின்றனர், districts, nagapattinam, கந்தூரி