மதுரை - தமிழக மாவட்டங்கள்
கம்பத்தடி மண்டபத்தில் நடராசர் வழக்கத்திற்கு மாறாக இடக் காலை
ஊன்றி வலக் காலைத் தூக்கி ஆடும் கோலத்தில் காட்சி தருகிறார்.
இம்மண்டபத்தூண்களில் மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும்
திருமணம் நடைபெறும் காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.
இக்கோயில் ஒரு சுற்றுலாத் தலமாகும்.
திருபரங்குன்றம் :
இது அறு படை வீடுகளுள் முருகனுக்கு உகந்த படைவீடு. நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் போற்றியிருக்கும் தலம். இது மதுரைக்குத் தென் மேற்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இரயில் நிலையம் உள்ளது. முருகன் இந்திரனின் மகளாகிய தெய்வானையை மணம் செய்து கொண்ட பதியாகும். சங்கநூல்கள் பலவற்றில் குறிக்கப் பெற்ற தொன்மைச் சிறப்புடையது. முருகன் மணவிழாக் கோலத்தில் இக்கோவிலில் காட்சி தருகிறார். விநாயகர் கனியும் கரும்பும் கரங்களில் ஏந்தி மணவிருந்தினைச் சுவைத்து நிற்கும் கோலத்தில் காணப்படுகிறார். இக்கோயிலில் முருகன் உருவத்திற்கு அபிஷேகம்
திருபரங்குன்றம் |
திருபரங்குன்றம் எனும் சொல் சிவபெருமானுக்கு உரிய மலை என்றும் பொருள் தரும். தேவாரப் பெருமைப் பெற்ற தலம். முருகனே இங்கு வந்து சிவப்பெருமானை வழிப்பட்டு பயனெய்தினார் எனவும், திருமால் முதலிய எல்லாத் தேவர்களும் முருகனைக் காண இங்கு வந்தனர் எனவும் புராணம் கூறுகிறது. இங்குள்ள சரவணப் பொய்கையும், பிரமகூவமும் புனிதத் தீர்த்தங்களாகப் போற்றப்படுகின்றன. 150 அடி உயரமுள்ள எழுநிலை மாடக் கோபுரத்துடன் தோன்றும் இக்கோயில் வயல்களும் பொழில்களும் சூழ்ந்த மலையைக் குடைந்து அமைக்கப் பட்டதாகும். இக்கோவிலில் தெய்வானை திருமணக் காட்சி, சுதை வேலைப்பாடுகள் கொண்ட தலப்புராணக் காட்சிகள், கோ பூசை செய்யும் உமையம்மை, பாற்கடலில் பள்ளிக் கொண்ட பெருமாள், இசையொலி எழுப்பும் பூதகணங்கள், மற்றும் இராணி மங்கம்மாள், மீனாட்சி, நாயக்கர் உருவங்கள், துளசி அறையிலுள்ள சிற்பங்கள் அனைத்தும் கலையழகு மிளிர சிறப்பாக அமைந்துள்ளன.
திருப்பரங்குன்றம், சம்பந்தர் சுந்தரர் தேவாரங்களையும், அருணகிரியார் திருப்புகழையும் பெற்றத் தலம். அகநானுறு, பரிபாடல், கல்லாடம் ஆகிய நூல்களில் சிறப்பிடம் பெற்றது. நக்கீரர் பூசை செய்த தலமாதலால், அர்த்த மண்டபத்தில் அவரது திருவுரு காணப்படுகின்றது. பங்குனி உத்திர விழாவில் நக்கீரர் உலாவரும் நிகழ்ச்சி ஐந்தாம் நாளில் நடைபெறுகிறது. இக்கோயில் பாண்டிய அரசர்களாலும், நாயக்க மன்னர் களாலும், நகரத்தார்களாலும், அரசினர் ஆதரவாலும், பொது மக்களாலும் திருப்பணி செய்யப் பெற்றுள்ளது. ஆண்டுமுழுவதும் இக்கோயிலுக்குப் பல்லாயிரம் மக்கள் வருகை தருகின்றனர். இது ஒரு சுற்றுலாத் தலமும் ஆகும்.
அழகர் கோவில் :
அழகர் கோவில் |
அழகர் மலை அடிவாரத்தில் அழகர் கோவில் உள்ளது. இக்கோயில் பல மண்டபங் களையும் சிற்பச் சிறப்புடைய திருவுருவங்களையும் உடையது. மூலவர் பெயர் கள்ளழகர். கல் அழகர் என்னும் பெயரும் இவருக்குண்டு.
மீனாட்சியின் சகோதரனான கள்ளழகர், மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் நடக்கும் திருமணத்திற்குச் செல்வதைத் தவிர்த்தார். நேரங்கழித்து திருமணவிழாவிற்குச் சென்றார். இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் போது கொண்டாடு கிறார்கள். அழகர் கோவிலிலிருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தங்கத்திலான அழகர் திருவுருவத்தை சுமந்துக் கொண்டு ஊர்வலமாக பக்தர்கள் செல்கிறார்கள். மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமண நிகழ்ச்சி முடிந்த கட்டத்தில் இவ்வூர்வலம் வைகை கரையை அடையும்.
இந்நிகழ்ச்சிக்கு மாறாக, மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிற்பங்களில் மீனாட்சியின் திருமண விழாவை விஷ்ணு தவிர்ப்பதாகச் சித்தரிக்கப்ட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் அழகர்க்கு மலர்சூட்டி, தேனும் திணைமாவும் படைக்கின்றனர். அர்ச்சனைக்கு அரளிப் பூவே பயன்படுத்தப்படுகிறது. இக்கோவிலில் உள்ள விஷ்வச்சேனர் இரு திருக்கரங்கள் மட்டுமே கொண்டிருக்கிறார். மேலும் இவர்தம் நாச்சியாருடன் காட்சி தருகிறார். கரு வறையில் சோலைமலைக் குமரனின் வெள்ளி வாகனம் இருக்கிறது. சக்கரத்தாழ் வாருக்கும் மூலவருக்கும் வெள்ளிக்கிழமை சஷ்டி நாட்களில் நாட்டுக்கோட்டை நகரத்தார் அபிஷேகம் செய்கின்றனர். இன்னும் வலம்புரி விநாயகர், வயிரவர், கலியான சுந்தரவல்லி, ஆண்டாள், சாலிக்கிராமம் முதலிய சந்நிதிகளும் உள்ளன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரை - Madurai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - அழகர், மதுரை, முருகன், மீனாட்சி, இக்கோயில், காட்சி, tamilnadu, தமிழக, மாவட்டங்கள், உள்ளது, திருபரங்குன்றம், தலம், நக்கீரர், கொண்ட, கோவில், கோலத்தில், தகவல்கள், தமிழ்நாட்டுத், தருகிறார், இக்கோவிலில், அம்மன், பூசை, நிகழ்ச்சி, கள்ளழகர், திருமண, உள்ள, | , கோவிலில், மீனாட்சியின், என்னும், முதலிய, விளங்கியது, தொலைவில், மாறாக, மீனாட்சிக்கும், மண்டபத்தில், information, madurai, districts, சுந்தரேஸ்வரருக்கும், நடைபெறும், அபிஷேகம், இங்கு, விநாயகர், பெற்ற, காட்சிகள், சுற்றுலாத், எனவும்