மதுரை - தமிழக மாவட்டங்கள்
இக்குளத்தின் மேற்கு கோடியில் ஊஞ்சல் மண்டபம் உள்ளது. ஒவ்வொரு
வெள்ளிக் கிழமையன்றும் இங்கு மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும்
ஊஞ்சலாடும் வைபவம் நடை பெறுகிறது. இம்மண்டபத்திற்கு அடுத்து
கிளிக் கூட்டு மண்டபம் அமைந்துள்ளது. இங்கு மீனாட்சியின் பெயரை
உச்சரிக்கும் கிளிகள் உள்ளிட்ட பல சிற்பங்கள் அழகுற வடிவமைக்கப்
பட்டுள்ளன. இம்மண்டபத்தின் பின்புறம் மீனாட்சி உள்ள
கோயிலுக்குள் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
வசந்த மண்டபம் அல்லது புதுமண்ட பத்தில் மீனாட்சி திருமண நிகழ்ச்சிகள் பல காணப் படுகின்றன. மற்றும் இராவணன் கயிலாய மலையைத் தூக்கியது, சூரிய சந்திரர் யானைக்குக் கரும்பு வழங்கியது முதலிய சிற்பங்களும் காணத்தக்கவையாகும். இந்த மண்டபம் திருமலை நாயக்கரால் கட்டப்பெற்றது. ஏப்ரல்-மே மாதங்களில் வரும் வசந்த விழா இம்மண்டபத்தில்தான் கொண்டாடப்டுகிறது. மீனாட்சிக் கோயிலுக்கு கிழக்கே 5கி.மீ. தொலைவில் உள்ள குளம் மாரியம்மன் தெப்பக்குளம் என்று அழைக்கப்படுகிறது.
இக்குளத்தின் நடுவில் விநாயகர் கோவில் இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோவில் கொண்ட பரப்பின் அளவுக்கு தெப்பக்குளமும் அமைந்துள்ளது. ஜனவரி-பிப்ரவரியில் இங்கு தெப்பத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா நடைபெறும்போது இந்தியா முழுவதிலிமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இந்தக் குளம் 1646-இல் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. வைகை ஆற்றிலிருந்து புதை குழாய்கள் மூலம் இக்குளத்திற்கு நீர் வரும் விதத்தில் இக்குளம் கட்டப்பட்டுள்ளத.
மீனாட்சி அம்மனுக்குச் சூட்டப் பெறும் வைரக் கிரீடம் 470 காரட் எடையுள்ளது. தங்கக் கவசம் ஆறு கிலோ கிராம் தங்கத்தால் ஆனது. முத்து விதானம். நீலமேகப் பதக்கம், தங்க அங்காடி, முத்து, நவரத்தினக் கிரீடங்கள், நற்பவளக் கொடி, விலை யுயர்ந்த காசுமாலைகள் முதலிய நகைகளும் உள்ளன. நளமகாராஜா, பாண்டிய, நாயக்க மன்னர்கள், மற்றும் கிழக்கிந்தியக் கம்பெனியார் காலத்து நகைகளும் மதுரை மீனாட்சியம்மனுக்குச் சொந்தமானவை. இவற்றைப் பார்க்க விரும்புவோர் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி பார்வையிடலாம்.
ஆயிரங்கால் மண்டபத்தில் உண்மையில் 985 தூண்களே உள்ளன. இம்மண்டபத்தில் கோயில் அருங்காட்சியகம் உள்ளது. இக்கோயில் 6 ஹெக்டேர் பரப்பில் கட்டப் பட்டுள்ளது. பெரியத் திருவிழாக்கள் சித்திரையிலும் மாசியிலும் நிகழ்சின்றன.
சித்திரை சித்திரைத் திருவிழா (மீனாட்சி திருமணம்)
வைகாசி வசந்த விழா (விசாக விழா)
ஆனி ஊஞ்சல் விழா
ஆடி முளைக் கொட்டு விழா
ஆவணி பிட்டுத் திருவிழா
புரட்டாசி நவராத்திரி விழா
கார்த்திகை தீபவிழா
மார்கழி திருவாதிரை
தை தைப்பூச நாளில் தெப்பத்திருவிழா
மாசி - தை மாத மக நட்சத்திரத்தில் தொடங்கும் நாற்பது நாள்விழா
பங்குனி - பங்குனி உத்தரவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூடும் சுற்றுலாத் தலமும் ஆகும்.
மீனாட்சி - சுந்தரேசுவரர் கோவில் :
மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரை - Madurai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - மீனாட்சி, மதுரை, விழா, கோவில், உள்ள, மாவட்டங்கள், தமிழக, tamilnadu, மண்டபம், இங்கு, வசந்த, அம்மன், உள்ளது, தமிழ்நாட்டுத், தகவல்கள், நகைகளும், முத்து, நிலையில், | , தெப்பத்திருவிழா, பக்தர்கள், மண்டபத்தில், பங்குனி, காணப்படுகிறது, திருவிழா, உருவங்களும், நந்தி, சுந்தரேசுவரர், முதலிய, இக்குளத்தின், ஊஞ்சல், இந்தியா, information, madurai, districts, அமைந்துள்ளது, பின்புறம், தொலைவில், குளம், வரும், நாயக்கரால், அல்லது, திருமலை, விநாயகர்