காஞ்சிபுரம் - தமிழக மாவட்டங்கள்
மகாபலிபுரத்தை காண வருபவர்கள்
முதல்முதல் பார்ப்பவை ஒரு பெரும்பாறையும், அதில்
வடிக்கப்பட்டுள்ள அமரச் சிற்பங்களுமே இந்தச் சிற்பத்தை
அர்ஜுனன் தவம் என்கிறார்கள். தொண்ணுறு அடி நீளமும் முப்பதடி
உயரமும் உள்ள இந்தப் பாறை மதிலில் நூற்றைம்பது சிற்பங்கள் மிக
அழகாகச் செதுக்கப் பெற்றிருக்கின்றன. தெய்வங்கள்,
தேவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள், நாகராஜன், நாககன்னிகை
முதலியவர்களையும், யானை, சிங்கம், சிறுத்தை, குரங்கு, பூனை,
பறவைகள் இவற்றையும்உயிர்ச்சிற்பங்களாகச்
மகாபலிபுரம் |
மான் ஒன்று தன் பின்னங்காலால் முகத்தை சொறிந்து கொள்ளும் காட்சி, துறவி மார்பு எலும்புத் தெரியத் தவம் செய்யும் கோலம், வேறு சில பிராணிகளின் அழகு, யானைகளின் கம்பீரத் தோற்றம் இவையெலாம் பார்ப்பவரின் மனம் கவரும் சிற்ப காட்சிகள். பஞ்சபாண்டவர் மண்டபம் சிங்கச் சிற்பங்கள் தலைப்பகுதியில் அமைந்த ஆறு தூண்களோடு காட்சியளிக்கிறது. அடுத்து பசுமண்டபம் எனப்படும் கிருஷ்ண மண்டபம்.
இநதிரன் கோபங்கொண்டு கடும்மழை பொழியச் செய்து ஆயர்பாடியில் இருப்பவர்களுக்குத் தொல்லை தருகிறான். அதைத் தடுக்க கிருஷ்ண பிரான் கோவர்த்தன கிரியைக் குடையாய்ப் பிடித்த காட்சியை இதன் சுவரில் வடித்திருக்கிறார்கள். இதன் அடியில் கோபாலர்கள் அமைதியாகத் தங்கள் அலுவல்களைக் கவனித்து வருகிறார்கள். ஒருவன் பால் கறக்கும் காட்சி விநோதமாயிருக்கிறது.
பசு தன் கன்றை நக்கிக் கொடுப்பது தத்ரூபமாய் இருக்கிறது. குட்டியுடன் இருக்கும் பெண்குரங்குக்கு ஆண்குரங்கு பேன் எடுக்கும் சிலை அமைப்பு கண்ணைக் கவர்கிறது. குன்றின் மேல் ஏறும் போது ஒரே பாறையில் இரண்டு அடுக்குகளுடன், மேலே ஒன்பது கலசங்களுடன் செதுக்கப்ட்ட கணேசரதம் காணப்படுகிறது. குன்றின் வடகோடியில் யானை, மான், குரங்கு, மயில் முதலிய சிற்பங்களைக் காணலாம்.
அடுத்து வடமேற்கில் த்ரிமூர்த்தி மண்டபம் உள்ளது. இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருக்கும் மூன்று கர்ப்பகிருகங்கள் அமைந்துள்ளன. இவற்றை அடுத்து ஒரு பாறையில் துர்க்கை ஓர் எருமையின் தலையில் நிற்கும் காட்சி செதுக்கப்பட்டிருக்கிறது. த்ரிமூர்த்தி மண்டபத்திலிருந்து சிறிது தூரத்தில் கோடிக்கல் மண்டபம் இருக்கிறது. இதில் பெண் துவராபாலிகைகள் கழுத்தில் சிறுமாலையுடனும், வில்லைத் தாங்கியபடியும் கம்பீரமாக நிற்கிறார்கள்.
சற்று தெற்கே போனால் வராக குகை மண்டபத்தைக் காணலாம். இதன் உட்பக்கச் சுவர்பாறையின் இடதுபுறம் வராக அவதாரச் சிற்பத்தை வடித்திருக்கிறார்கள். பூமியைக் கவர்ந்துச் சென்ற அரக்கன் கைகூப்பிக் கிடக்கிறான். திருமால் வராக வடிவம் எடுத்து லட்சுமியைத் தாங்கி நிற்கிறார். மேலே தேவர்கள் வணங்குகிறார்கள். இதற்கு எதிர்சுவரில் மகாபலியின் கர்வத்தை அடக்கி உலகளந்த திருமாலின் சிற்பம் இருக்கிறது.
விண்ணை அளப்பது போல் ஒரு கால் தூக்கியிருக்கிறது. கீழே மகாபலி வியப்பும் அச்சமும் தோன்ற அமர்ந்திருக்கிறான். அடுத்து மகிஷாசுரமர்த்தினியாகச் சிங்கத்தின் மேல் ஏறி எருமைத் தலை அரக்கனோடு போர்புரியும் காட்சி அமைந்திருக்கிறது. இதற்கு எதிராகச் சாந்தமாய் ஐந்துத்தலை நாகத்தில யோக நித்திரை செய்கிறார் திருமால். திருமாலுக்கு எதிரே அடிபட்ட இருவர். இப்படி இந்த ஒரு மண்டபத்திலேயே ரெளத்திரத்தை காட்டும் சிற்பத்துக்கு எதிரில் சாந்தமே உரு எடுத்த கோலத்தையும் காணலாம்.
மகாபலிபுரம் |
சற்று தெற்கே போனால் இராமானுஜ மண்டபம் இருக்கிறது. ஆனால் இது இராமானுஜரின் காலத்துக்கு நானுறு ஆண்டுகளுக்கு முன் அமைத்தது. இதில் உள்ளத் தூண்களை நிமிர்ந்து அமர்ந்த சிங்க உருவங்கள் தாங்குகின்றன. இதையடுத்து குன்றின்மேல் ஏறிப்போனால் இடிந்த கோபுரம் போன்ற ஒரு கட்டிடம் இருக்கிறது. இது முன்பு கலங்கரை விளக்கமாகப் பயன்பட்டது. இது ஓலக்கணீசர் என்ற பெயருள்ள சிவப்பெருமான் கோயில். இதையடுத்து முற்றுபெறாத ராயகோபுரம் ஒன்று இருக்கிறது. இனி கீழிறங்கி நடந்தால் குன்றுக்குத் தெற்கே பாண்டவரதங்கள் எனப்படும் ஐந்து ரதங்கள் உள்ள இடத்துக்குப் போய்ச்சேரலாம். இவற்றை நெருங்கும் போதே சீறி நிற்பது போன்ற கல் சிங்கம் ஒன்றும், அதன் பின்னால் கம்பீரமான யானை ஒன்றும் காண்போர் கண்ணைக் கவரும். இந்த ஐந்து ரதக் கோயில்களும் ஒரே பாறையில் செதுக்கியவை.
குடிசைபோல் அமைந்திருக்கும் சிறிய கோயில் திரெளபதி ரதமாகும். இதன் அடிப்புற மேடையைச் சிங்கங்களும் யானைகளும் தாங்குவது போல் செதுக்கப்ட்டிருக்கிறது. கர்ப்பக்கிருகத்தின் உள்பகுதியில் துர்க்கை உருவம் பின் சுவரிலே புடைப்புச் சிற்பமாக அமைந்திருப்பதை காணலாம். தாமரை மலரின் மேல் நிற்கும் கோலம்; தலையில் கரண்ட மகுடம்; காலடியில் இரண்டு மனிதர்கள் மண்டியிட்டிருக்கிறார்கள்; ஒருவன் தலையை அறுத்திடும் காட்சி; வெளிப்புறம் இரண்டு துவாரபாலிகைகள் வில் பிடித்து நிற்கிறார்கள். துர்க்கையினுடைய இந்த விமானத்தின் முன்னால் சிங்க உருவம் நிற்கும் விதமாய் செதுக்கப்பட்டுள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
காஞ்சிபுரம் - Kancheepuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இருக்கிறது, காணலாம், காட்சி, மண்டபம், தமிழக, நிற்கும், இரண்டு, காஞ்சிபுரம், அடுத்து, இதன், tamilnadu, ஒன்று, மாவட்டங்கள், மேல், தமிழ்நாட்டுத், தகவல்கள், தெற்கே, வராக, இதில், பாறையில், யானை, இவற்றை, துர்க்கை, தலையில், உருவம், மேலே, | , த்ரிமூர்த்தி, சற்று, திருமால், இதற்கு, போல், சிங்க, போன்ற, கோயில், ஒன்றும், இதையடுத்து, ஐந்து, போனால், நிற்கிறார்கள், எனப்படும், மனிதர்கள், தேவர்கள், சிங்கம், குரங்கு, மகாபலிபுரம், சிற்பங்கள், உள்ள, districts, information, சிற்பத்தை, தவம், அமைந்த, பாகத்தில், கிருஷ்ண, வடித்திருக்கிறார்கள், ஒருவன், கண்ணைக், கவரும், கோலம், சிற்ப, கீழே, மான், kancheepuram, குன்றின்