தர்மபுரி - தமிழக மாவட்டங்கள்
புட்டிரெட்டிப்பட்டி :
மொரப்பூருக்கு கிழக்கில் எட்டாவது மைலில் உள்ளது. இவ்வூர், ஒரு புகைவண்டி நிலையமாகும். மருக்கொழுந்து பூ இங்கிருந்து பல ஊர்களுக்கும் செல்கிறது. இங்குள்ள அம்மன் கோவிலில் உள்ள தமிழ் கல்வெட்டு ஹரிஹரி புக்கரிடமிருந்து விஜய நகரத்தை மீட்டு தன் மகனுக்குப் பட்டம் கட்டிய சாளுவ நரசிம்மனைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது.
சோழப்பாடி :
தர்மபுரிவட்டத்தில் காவிரியும், தோப்பூர் ஆறும் கூடும் இடத்திலுள்ள கிராமம். சோழப்பாடி மூன்று பகுதியாக விளங்குகிறது. கோவில் உள்ள இடம் 'கோவில் சோழப்பாடி' இங்கு ஆடிப்பெருக்கின்போது மக்கள் கூடுவார்கள். தோப்பூர் ஆற்றுக்கு எதிர்புறம் கோட்டையுள்ளதால் அப்பகுதி 'கோட்டை சோழப்பாடி' எனப்படுகிறது. சந்தை கூடும் இடத்தை 'சந்தை சோழப்பாடி' என்கின்றனர்.
கங்கணகிரி :
கிருஷ்ணகிரி வட்டத்தில், வேலப்பட்டிக்கு வடக்கில் 3கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள மலையின் உயரம் 3450 அடி. இந்தவூருக்கு கிழக்கிலுள்ள கோட்டப்பள்ளி வழியாகவும், தென்மேற்கில் உள்ள பேலாகுளி வழியாகவும் இம்மலை உச்சியை அடையலாம். உச்சியில் கோட்டை உள்ளது. பொறியியல் வளர்ச்சியின் உச்சமாக இக்கோட்டை விளங்குகிறது.
கும்மாளபுரம் :
ஓசூர் வட்டத்தில் தளி கிராமத்திற்கு வடக்கில் 5மைல் தொலைவில் இந்தவூர் உள்ளது. இவ்வூரைச் சுற்றி நிறைய சிறிய கோவில்கள் உள்ளன. செப்டம்பர் மாதத்தில் கெளரம ஜாத்ரா என்னும் பண்டிகைக்கு பக்கத்து ஊர்களிலிருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இக்கோவிலின் சிறப்பு : இங்கு உச்சவமூர்த்தி கிடையாது. திருவிழா நாளில் குளத்திலிருந்து மண் எடுத்து உருவம் படைத்து, ஒருமாதம் கழித்து அதை மீண்டும் குளத்தில எறிந்து விடுவது மரபாகும்.
ஹடேதுர்கம் :
ஓசூர் வட்டத்திலுள்ள ஊர். கீழமங்கலம்-ராயக்கோட்டை நெடுஞ்சாலைக்குத் தெற்கில் சுமார் மூன்று மைல் தொலைவில் உள்ளது. இவ்வூர் மலையின் உயரம் சுமார் 3200 அடி. புரம் கிராமத்தின் வழியாக இம்மலையில் ஏற வசதி உள்ளது.
ஜகதேவி பாளையம் :
இவ்வூர் கிருஷ்ணகிரிக்குத் தென்கிழக்கில் ஆறுமைல் தொலைவில் இருக்கிறது. இம்மலையில் இரண்டு சிகரங்கள் தென்படுகின்றன. மேற்கிலுள்ள சிகரத்திற்குக் கேவல்கடி என்றும் கிழக்கிலுள்ள சிகரத்திற்கு ஜகதேவிதுர்கம் என்றும் பெயர்.
கம்பய நல்லூர் :
மொரப்பூர் இரயில் நிலையத்திற்கு வடமேற்கில், எட்டு மைல் தொலைவில் இவ்வூர் உள்ளது. ஊருக்கு வடகிழக்கில் சுமார் 2 மைல் தொலைவில் பெண்ணையாற்றுடன் கம்பையநல்லூர் ஆறு கலக்கிறது. இங்குள்ள கோட்டைக்கு சேர்வராயன் கோட்டை என்று பெயர். தாசிநாதேசுவரர் கோவிலில் நிறைய கல்வெட்டுக்கள் உண்டு. இங்கு சந்தை வெள்ளிக் கிழமைகளில் கூடுகிறது.
காரிமங்கலம் :
தர்மபுரியிலிருந்து காரிமங்கலம் 14-மைல். வள்ளல் காரியின் பெயர் பெற்று விளங்குகிறது. இம்மலையில் அருணேஸ்வரர் கோயில் உள்ளது.
மல்லப்பாடி :
பர்கூருக்கு தென்கிழக்கில் 2மைல் தொலைவில் உள்ளது. பாய் முடைதலுக்கு பேர் பெற்றது. இங்கு குகை ஓவியம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தர்மபுரி - Dharmapuri - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, தொலைவில், இவ்வூர், மைல், இங்கு, மாவட்டங்கள், தர்மபுரி, tamilnadu, தமிழக, கோட்டை, சந்தை, சுமார், பெயர், இம்மலையில், விளங்குகிறது, சோழப்பாடி&, தமிழ்நாட்டுத், உள்ள, இங்குள்ள, தகவல்கள், districts, ஓசூர், நிறைய, தென்கிழக்கில், | , காரிமங்கலம், dharmapuri, என்றும், வழியாகவும், உயரம், சோழப்பாடி, கோவில், தோப்பூர், மூன்று, கோவிலில், வட்டத்தில், கூடும், மலையின், information, வடக்கில், கிழக்கிலுள்ள