தர்மபுரி - தமிழக மாவட்டங்கள்
தட்டக்கால் துர்கம் :
கிருஷ்ணகிரி வட்டத்திலுள்ள வேலம்பட்டிக்கு தென் கிழக்கில் 2மைல் தொலைவில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற கோட்டை ஒன்று மலையில் காணப்படுகிறது. பாரமஹால் பகுதியில் சிறந்த முறையில் பாதுகாக்கப் படும் கோட்டைகளுள் இதுவும் ஒன்று. கோட்டை வாயில்கள் கட்டட நுணுக்கங்களைப் பெற்றுத் திகழ்கிறது. வேடர்கள் அதிகம் வாழும் திட்டக்கல், துர்க்கத்திலிருந்து இரண்டு மைல் துரத்தில் உள்ள கிராமம்.
தென்கரைக் கோட்டை :
அரூர் வட்டத்திலுள்ள மொரப்பூருக்குத் தென் கிழக்கில் சுமார் பத்து மைல் தொலைவில் தென்கரைக்கோட்டை அமைந்துள்ளது. இங்குள்ள திரோபதை அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் தீமிதி விழா சிறப்பாக நடைபெறும். கெட்டி முதலியார்கள் ஆளுகையில் இப்பகுதி இருந்தது. சிதையுற்ற கோட்டையில் சிவன், பெருமாள் கோவில்கள் உள்ளன. அரசியார் குளிப்பதற்கும், தானிய கிடங்கும் இங்கு தற்போது காணப்படுகிறது.
சிங்காரப்பேட்டை :
கிருஷ்ணகிரி வட்டத்தில், ஊத்தங்கரைக்கு 5மைல் தொலைவில் கிழக்காக அமைந்துள்ளது. இது மைசூர் போரால் சிறப்பிடம் பெற்றது. ஜாவடி மலையில் கிடைக்கும் தேக்கு,தேன், மெழுகு முதலியன இங்கு மிகுதியாக விற்பனை செய்யப் படுகின்றன.
ராயக்கோட்டை |
கிருஷ்ணகிரியிலிருந்து 17 மைல் தொலைவில் உள்ளது. இங்குள்ள புதுப்பேட்டைக்கு அருகில் சிறிய கோட்டை உள்ளது. கோட்டை, கொத்தளங்களின் சுவடுகளை எங்கும் பார்க்கலாம். கோட்டைக்கு வடமேற்கில் சதுரமான கிணறு ஒன்று தோண்டப்பட்டுள்ளது. மலையுச்சியில் சதுரமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து இயற்கைக் காட்சிளை ரசிக்கலாம். கோட்டை உச்சியை அடைவது கடினம்.
அங்குசகிரி :
சூலகிரிக்கு 5மைல் கிழக்கில் இவ்வூர் இருக்கிறது. மலையின்உயரம் சுமார் 3038 அடி. இங்கு திம்மராயா கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிப்ரவரியில் நடைபெறும் திருவிழாவில் அன்னதானம் நடைபெறுகிறது.
பேரிகை :
பழைய பாலையப்பட்டு. பாகளூரிலிருந்து கிழக்காக 7மைல் தொலைவில் உள்ளது. பாளையக்காரர்களுக்குச் சொந்தமான அரண்மனையும், மண் கோட்டையும் உள்ளன. ஊருக்கு வடக்கில் பெரிய ஏரி ஒன்று காணப்படுகிறது. பட்டுத் தொழிலில் இப்பகுதி சிறப்புற்றிருந்தது. காய்கறிகளும், திராட்சையும் பல இடங்களுக்கும் செல்கிறது.
பெத்தமுகலாலம் :
ஓசூர் வட்டத்தில் மேலகிரி சமவெளிப் பகுதியில் இவ்வூர் அமைந்துள்ளது. கிளன்ஷா என்பவர் வசித்த வீடு தற்போதும் உள்ளது. இங்கு பல இடங்களில் உயரமான எறும்புப்புற்றுகளைக் காணலாம். இங்குள்ள கிளன்ஷா பண்ணைக்கு வடக்காக நான்கு மைல் தொலைவில் மேலகிரி மலைக் கோட்டையின் சில பகுதிகளை காணலாம்.
பொம்மிடி :
சேர்வராயன் மலையில் கிடைக்கும் காட்டுப் பொருள்களின் சிறந்த சந்தை கூடும் இடமாக உள்ளது. இங்கு தேன், தேக்கு, மெழுகு போன்ற பொருட்களை வியாழக்கிழமைகளில் கூடும் சந்தையில் வாங்க முடியும். இரயில் நிலையத்திற்கருகில் மேலக்கங்கவம்ச அரசரான ஸ்ரீபுருஷ முத்தரசர் காலக்கல்வெட்டுக்கள் இரண்டு கண்டெடுக்கப் பட்டுள்ளன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தர்மபுரி - Dharmapuri - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இங்கு, உள்ளது, கோட்டை, தொலைவில், ஒன்று, தமிழக, மைல், மாவட்டங்கள், tamilnadu, தர்மபுரி, மலையில், காணப்படுகிறது, அமைந்துள்ளது, கிழக்கில், இங்குள்ள, தமிழ்நாட்டுத், தகவல்கள், கிடைக்கும், தேன், மெழுகு, ராயக்கோட்டை, தேக்கு, | , காணலாம், கூடும், கிளன்ஷா, மேலகிரி, கிழக்காக, இவ்வூர், சதுரமான, சிறந்த, கிருஷ்ணகிரி, வட்டத்திலுள்ள, information, districts, dharmapuri, தென், பகுதியில், இப்பகுதி, வட்டத்தில், நடைபெறும், சுமார், இரண்டு, 5மைல்