கடலூர் - தமிழக மாவட்டங்கள்
கெடிலத்தின் கழிமுகம் :
கெடிலநதி கடலூருக்கருகில் மூன்று இடங்களில் கடலில் கலக்கிறது. ஆறு கடலோடு கலக்கும் தோற்றம் கண்கொள்ளாக் காட்சியாகும். கெடிலத்தின் இந்த முகத்துவாரத்தை யொட்டியுள்ள சூழ்நிலை மிகக் கவர்ச்சியும் அழகும் வாய்ந்தது. மாலை வேளையில் மக்கள் இங்கு பொழுது போக்குவதற்கு ஏற்ற சூழல் அமைந்துள்ளது. சென்னை மரினா கடற்கரை போன்று இது நீளமில்லாவிட்டாலும் அகன்ற மணற் பரப்பைக் கொண்டது. சோலைகள் நிறைந்த சூழ்நிலையும், கடலோடு ஆறு கலக்கும் கண்கவர் காட்சியும் இங்கிலாந்து நாட்டில் உள்ள 'கவுண்டி கடற்கரை' போன்றதென்று புகழப்படுகிறது.
கடலூர் தீவு :
உப்பனாற்றிற்கும், கடலூக்கும் நடுவில் ஒரு தீவு இருக்கிறது. இந்தத் தீவிற்குக் கிழக்கு எல்லையாகக் கடலூம், வடக்கு எல்லையாகக் கெடிலத்தின் முக்கிய நடுப்பகுதியும், மேற்கு-தெற்கு எல்லைகளாகக் உப்பனாறும் அமைந்துள்ளன. இந்தக்கழிமுகத் தீவு 'அக்கரை' என அழைக்கப்படுகிறது. இந்த அக்கரைத் தீவில் சோணங்குப்பம், சிங்காரத் தோப்பு, கோரி என்றும் மூன்று சிற்றுர்கள் உள்ளன. இந்தத் தீவு சென்று காணத்தக்கதாகும்.போக்குவரத்திற்குப் படகு வசதி உண்டு.
செயிண்ட் டேவிட் கோட்டை :
செயிண்ட் டேவிட் கோட்டை |
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் :
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் |
இதன் துணை வேந்தர்களாக இருந்தவர்கள்: வி.எஸ்.சீனுவாசசாஸ்த்திரி, கே.வி.ரெட்டி, எஸ்.ஜி. மணவான இராமானுஜம், ஆர்.கே.சண்முகம் செட்டியார், சி.பி.இராமசாமி ஐயர், டி.எம்.நாராயண சாமிபிள்ளை, எஸ்.வி. சிட்டிபாபு போன்ற பெருமக்கள் ஆவர்.
துறைமுகம் :
கடலூர் முதுநகரில் உள்ளது. கெடில ஆற்றின் முகத்துவாரத்தில் இயற்கையாய் அமைந்த துறைமுகம் ஆகும். இத்துறை முகம் பழமையானது. அந்நிய வாணிபத்தில் சென்னைக்குத் துணையாக உள்ளது. தற்காலம் ஒரு நடுத்தரத் துறைமுகமாக மாற்றப்பட்டு உள்ளது. இரும்புக்கனிகள், எரிபடிவங்கள் ஆகியவை முக்கிய ஏற்றுமதி. கந்தகம், உரம் உணவு தானியம் ஆகியவை முக்கிய இறக்குமதி. பரங்கிப் பேட்டை இம்மாவட்டத்திலுள்ள மற்றொரு துறைமுகம். முன்பு போக்குவரத்து இருந்தது. இன்றும் படகுகள் வந்து போகின்றன. முன்பு உப்பளம் இருந்த இடம் தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரணுவியல் ஆராய்ச்சிப்பிரிவு உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடலூர் - Cuddalore - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, கடலூர், கெடிலத்தின், முக்கிய, தீவு, ஆண்டு, தமிழக, மாவட்டங்கள், tamilnadu, இருக்கிறது, துறைமுகம், செயிண்ட், கோட்டை, கழகம், அண்ணாமலைப், டேவிட், இந்தத், தமிழ்நாட்டுத், தகவல்கள், அமைந்த, districts, பல்கலைக், செட்டியார், cuddalore, | , முன்பு, ஆகியவை, கடற்கரை, தந்தை, கலக்கும், தீவில், இங்கு, கடலோடு, மூன்று, உள்ள, இன்றும், information, எல்லையாகக்