கடலூர் - தமிழக மாவட்டங்கள்
திருக்கடம்பூர் :
சிதம்பரத்திற்கு மேற்கேயுள்ள காட்டு மன்னார்குடிக்கு 5 கி.மீ தொலைவில் உள்ளது.மேலைக் கடம்பூர் என்றும், கரக்கோவில் என்றும் இத்தலத்திற்குப் பெயர் உண்டு. இங்குக் கருவறை தேர் போன்று அமைந்துள்ளது. இவ்வூருக்கு கிழக்கே 2. கி.மீ தொலைவில் 'கடம்பூர் இளங்கோயில்' உள்ளது. இறைவன்:அமுதகடேசுரர், இறைவி:சோதிமின்னம்மை.
திருநெல்வாயில் அரத்துறை : பெண்ணாகடம் புகைவண்டி நிலையத்துக்குத் தென்மேற்கே 5 கி.மீ தொலைவில் இது நிவாநதி என்னும் வெள்ளையாற்றின் வடகரையிலுள்ளது. இறைவன்-அரத்துறையப்பர், அம்மை-ஆனந்தநாயகி.
திருத்துங்கானை மாடம் :
பெண்ணாகடம் புகைவண்டி நிலையம், விருதாசலத்திக்கு தென்மேற்கில் 18 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோவிலின் விமானம் 'யானையின் முதுகு' போல உள்ளது என்பதால் துங்கானை மாடக் கோயில் வகையைச் சார்ந்தது என்பர். கலிக்கம்ப நாயனார், அச்சுத களப்பாளர் வாழ்ந்தவூர். திருநாவலூர் :
பண்ணுருட்டி புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கே 16 கி.மீ தொலைவில் உள்ள இவ்வூரை 'திருநாம நல்லூர்' என அழைக்கின்றனர். சுந்தர மூர்த்தி நாயனார் பிறந்தது இவ்வூரில்தான். இங்குள்ள வரதராசப் பெருமாள் கோயிலில் நாவல் மரம், சுந்தரமூர்த்தி நாயனார் சிலை முதலியவை காணத்தக்கவை.
![]() |
பழமலைநாதர் கோயில் |
இன்று இவ்வூரை விருத்தாசலம் என அழைக்கின்றனர் இது நல்ல தமிழ் பெயரின் வடமொழி ஆக்கம் ஆகும். புகைவண்டி நிலையத்தலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. அருகில்மணிமுத்தாறு ஓடுகிறது. மாடவீதிகள் அழகாக அமைக்கப் பட்டிருக்கின்றன. தேவாரபாடல் பெற்ற தலம், இறைவன் பழமலைநாதர், இறைவி: பெரிய நாயகி. கோவில் சோழர் காலத்தில் திருபணி செய்யப்பட்டுள்ளது. அகன்ற வ்ாயிற்கோபுரத்தை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
திருக்கூடலையாற்றுர் :
விருத்தாசலத்திற்குக் கிழக்கில் 23 கி.மீ தொலைவில் உள்ளது. மணிமுத்தாறு, வெள்ளாறும் கூடும் இடமாதலால் இப்பெயர் பெற்றது. இறைவன்: நெறி காட்டு நாயகர்,இறைவி: புரிகுழலம்பிகை.
திருவெருக்கத்தம் புலியூர் :
தற்போது இராசேந்திரப்பட்டினம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. விருத்தாசலத்துக்கு தெற்கே 11 கி.மீ தொலைவில் உள்ளது. இறைவன்: திருநீலகண்டேசுரர். இறைவி: நீலமலர்க் கண்ணம்மை.
திருத்துறையூர் :
திருத்துறையூர் புகைவண்டி நிலையத்திலிருந்து ஊர் 2 1/2 கி.மீ துரத்தில் உள்ளது.சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க்கையுடன் தொடர்புள்ள ஊர். இறைவன்: சிட்டகுருநாதர்,இறைவி: பூங்கோதை நாயகி. அருணந்தி சிவாச்சாரியார் கோயிலும், சுந்தரரை தடுத்தாட் கொண்ட பெருமான் கோயிலும், வெளியில் குளத்துக்கருகில் உள்ளன.
சுற்றுலா தலங்கள் :
பிச்சாவரம் :
![]() |
பிச்சாவரம் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடலூர் - Cuddalore - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தொலைவில், உள்ளது, இறைவன், புகைவண்டி, இறைவி, நாயனார், கடலூர், பிச்சாவரம், tamilnadu, தமிழக, மாவட்டங்கள், தமிழ்நாட்டுத், தகவல்கள், இடமாதலால், நாயகி, செய்யப்பட்டுள்ளது, கோயிலும், திருத்துறையூர், மரங்கள், கடல், | , அருகில், சுரபுன்னை, சுற்றுலா, பழமலைநாதர், கொண்ட, கோயில், கடம்பூர், என்றும், காட்டு, information, cuddalore, districts, உண்டு, அமைந்துள்ளது, இவ்வூரை, அழைக்கின்றனர், உள்ள, நிலையத்திலிருந்து, பெண்ணாகடம், சுந்தரமூர்த்தி