கோயம்புத்தூர் - தமிழக மாவட்டங்கள்
கல்வி
பள்ளிகள்
தொடக்கப் பள்ளிகள் - 1,441, நடுநிலைப் பள்ளிகள் - 234, உயர்நிலைப் பள்ளிகள் - 133, மேநிலைப் பள்ளிகள் - 134.
கல்லுரிகள்
பொறியியல் கல்லுரிகள் - 3 , மருத்துவக் கல்லுரிகள் - 2 , பார்மசிக் கல்லுரி - 1 , ஆசிரியர் பயிற்சிக் கல்லுரிகள் - 4, கலை, அறிவியல் கல்லுரிகள் - 31, சட்டக்கல்லுரி - 1, வேளாண்மை, தோட்டக்கலை கல்லுரிகள் - 3, தொழில் நுட்பக்கலை கல்லுரிகள் , 7, பல்கலைக்கழகங்கள் - 3.
![]() |
மருதமலை |
பேரூர் - பட்டீஸ்வரர் கோவில், காரமடை-அரங்கநார் கோவில், குருந்தமலை முருகன் கோவில், அவிநாசியிலுள்ள அவிநாசியப்பர், திருமுருக்கன் பூண்டியில் உள்ள முருகநாதர் கோவில், மேல் சிதம்பரம் நடராஜர் கோவில், கோவை கோணியம்மன், மருதமலை முருகன், ஈச்சனாரி விநாயகர் முதலியவை வழிப்பாட்டிடங்கள் இம்மாவட்டத்தில் முக்கியமான தலங்களாகும்.
சுற்றுலா இடங்கள்:
![]() |
ஆனைமலை |
இங்கு யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டுநாய், பறக்கும் அணில் போன்ற விலங்குகளும், பல்வேறு பறவை இனங்களும் காணப்படுகின்றன.
அமராவதி அணைக்கட்டில் முதலைகள் உள்ளன. டாப் ஸ்லீப் பகுதியில் எண்ணற்ற பறவை இனங்களைக் காணலாம். இந்தப் புகலிடத்தைச் சுற்றிப்பார்க்க வெளிநாட்டவர் மிகுதியாக வருகின்றனர். இப்புகலிடத்தை யானை மீது அமர்ந்து அல்லது வாகனத்தில் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட பழங்குடிகள்:
ஆனை மலையிலுள்ள கோழி கமத்தி, ஆழியார் அணை, சவமலை, பவர்ஹவுஸ், கொல்லத்திப்பாறை போன்ற இடங்களில் மலமலசர் என்ற பழங்குடிகள் காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். மலையில் வாழ்பவர்கள் மலைமலசர், மலையடிவாரத்தில் வாழ்பவர்கள் பதிமலசர் என்னும் இருபிரிவினர் உள்ளனர். பதிமலசர்கள் ஆனைக்குந்தி, சேத்துமடை, அட்டஹட்டி, கீழ்புனாச்சி, சர்க்கார்பதி முதலிய இடங்களில் வாழ்கிறார்கள்.
காடர்:
ஆனைமலைப்பகுதியில் உள்ள பரமன்கடவு, பன்னிகுழி, சவமலை, நெடுங்குன்றம், கருங்குன்று, அயன்குளம், வாகைமலை ஆகிய இடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
முதுவர்:
தங்கள் பூர்வீகம் மதுரை என்று சொல்லிக்கொள்கிறார்கள். மற்ற பழங்குடிகளைவிட நாகரீகம் அடைந்தவர்களாக காணப்படுகின்றனர். வாய்மொழி இலக்கியம், இசை ரசிக்கும் இயல்பு போன்ற சிறப்பினைப் பெற்றவர்கள் இவர்கள்.
புலையர்:
ஆனைமலைப்பகுதியில் 2000 குடும்பங்கள் வாழ்கின்றனர். குறிப்பாக
பொள்ளாச்சியிலிருந்து முடீஸ் போகும் வழியில் நீர்வீழ்ச்சி என்ற
இடத்திற்கு அருகில் மலைகளிலும், மலையடிவாரத்திலும், கீழ்ப்பூனாஞ்ஜியிலும்
இவர்கள் வாழுகின்றனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோயம்புத்தூர் - Coimbatore - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கல்லுரிகள், கோவில், பள்ளிகள், கோயம்புத்தூர், மாவட்டங்கள், தமிழக, tamilnadu, தமிழ்நாட்டுத், இடங்களில், வருகின்றனர், தகவல்கள், போன்ற, சவமலை, பழங்குடிகள், | , ஆனைமலைப்பகுதியில், இவர்கள், வாழ்பவர்கள், வாழ்ந்து, உள்ள, information, districts, coimbatore, மருதமலை, முருகன், யானை, ஆனைமலை, கோவை, பறவை