கோயம்புத்தூர் - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | கோயம்புத்தூர் |
பரப்பு : | 4,732 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 3,458,045 (2011) |
எழுத்தறிவு : | 2,635,907 (83.98%) |
ஆண்கள் : | 1,729,297 |
பெண்கள் : | 1,728,748 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 731 |
வரலாற்றுச் சிறப்பு:
சங்க காலத்திலேயே தமிழகத்தை சோழநாடு, பாண்டியநாடு, சேரநாடு, கொங்குநாடு என்று பிரித்திருந்தார்கள். கோவை மாவட்டம் கொங்கு பகுதியில் இருந்தது. கொங்கு நாடுபற்றி சங்க இலக்கியங்களில் நிறைய தகவல்கள் கிடைக்கிறது. சேர நாட்டிற்கு அடுத்த நாடாக கொங்கு பகுதி இருந்தததால் சேரர்கள் இப்பகுதிகளை ஆண்டனர். களப்பிரர்கள், இராஷ்டிரர்கள், கங்க மன்னர்கள், சோழர்கள், விஜயநகரமன்னர்கள், திப்புசுல்தான், ஆங்கிலேயர் வரை இப்பகுதி அந்தந்தக் காலங்களில் அவர்களால் ஆளப்பட்டது.
கல்வெட்டில் காணப்படும் ஊர்கள்
சோழமாதேவி, தாளி, குடிமங்கலம், ஜோதம்பட்டி, கடத்தூர், கணியூர், கண்ணாடிப்புத்தூர், கொழுமம், குமாரலிங்கம், திருமுருக்கன்பூண்டி, அவிநாசி முதுமக்கள் இடுகுழிகள் கிடைத்த ஊர்கள் - இருகூர், சாவடிப்பாளையம், வெள்ளளுரில் 522 ரோம நாணயங்கள் கிடைத்துள்ளன.
பொது விபரங்கள்
பெயர்க்காரணம்:
கோயம்புத்தூர் என்பது 'கோசர்' என்று சங்க இலக்கியம் கூறும் பொய்க்கூறாதவர் வாழ்ந்த இடம் என்று கூறப்படுகிறது. கோசர் என்பது கோயர் என்றாகி, கோயன் + புத்தூர் = கோயம்புத்தூராகி விட்டது.
எல்லைகள்:
கோவை மாவட்டத்தின் வடக்கில் கர்நாடக மாநிலமும் தெற்கில் கேரளமாநிலமும் எல்லைகளாக உள்ளன. கிழக்கில் ஈரோடு மாவட்டமும், மேற்கில் நீலகிரி மாவட்டமும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையும், நீலமலையும் ஒரு மதில்போல் இம்மாவட்டத்தை வளைத்துள்ளன.
கோவை மாவட்டத்திலுள்ள காடுகளின் பரப்பு - 1,69,720 ஹெக்டேர். சாலைகளின் நீளம் - 7434.8 கி.மீ. பதிவு பெற்ற வாகனங்கள் 2,57,042, வங்கிகள் 328, காவல்நிலையங்கள் - 60, காவலர்கள் 5910, தந்தி அலுவலகங்கள் 260, தந்தி அஞ்சலகங்கள் 172, பொதுத் தொலைபேசிகள் - 1134. கோவை மாவட்டத்தின் தலைநகரம் கோயமுத்தூர். இதன் பரப்பு 6623.97 ச.கி.மீ, மக்கள் தொகை 35,08.374 பேர். இதில் ஆண்கள் 17,97,189, பெண்கள் 17,11,185 பேர். எழுத்தறிவு உள்ளோர் 20,75,023 பேர், மக்கள் நெருக்கம் ச.கி.மீ. 473 பேர்.
வருவாய் நிர்வாகப் பிரிவு
கோட்டங்கள் - 2 (கோயம்புத்தூர், பொள்ளாச்சி)
வட்டங்கள் - 8 (கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், கிணத்துக்கடவு, அன்னூர்)
வருவாய் கிராமங்கள் - 441 உள்ளாட்சி நிறுவனங்கள்
மாநகராட்சி - 1 கோவை
நகராட்சிகள் - 3 மதுக்கரை, வால்பாறை
ஊராட்சி ஒன்றியம் - 12
பேரூராட்சி - 37
பஞ்சாயத்துக்கள் - 227
சட்டசபை தொகுதிகள் - 10
மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி, வால்பாறை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோயம்புத்தூர் - Coimbatore - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கோயம்புத்தூர், கோவை, தகவல்கள், பேர், மக்கள், கோவை, தமிழக, மாவட்டங்கள், tamilnadu, வால்பாறை, கொங்கு, பொள்ளாச்சி, சங்க, தமிழ்நாட்டுத், பரப்பு, districts, | , வருவாய், வடக்கு, தெற்கு, coimbatore, மேட்டுப்பாளையம், information, சூலூர், மாவட்டமும், தொகை, நெருக்கம், பெண்கள், ஆண்கள், தலைநகரம், ஊர்கள், எழுத்தறிவு, மாவட்டத்தின், என்பது, தந்தி