அரியலூர் - தமிழக மாவட்டங்கள்
திருச்செந்துறை :
எலமனுருக்குத் தென்கிழக்கில் அமைந்துள்ள இவ்வூரில் சிவாலயம் சிறந்து காணப்படுகிறது. இக்கோவிலில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.
எலக்குரிச்சி :
ஜெயங்கொண்ட சோழபுரத்திற்கு தென்மேற்கில் 25 மைல் தொலைவில் உள்ளது. ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தால் ஊர் சிறப்பு அடைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் இவ்வாலய திருவிழாவிற்கு பல பகுதிகளிலிருந்தும் மக்கள் கூடுவர்.
ஜெயங்கொண்ட சோழபுரம் :
வட்டத் தலைநகராய் விளங்குவதால் பல அலுவலகங்கள் நிறைந்துள்ளன. இப்பகுதியில் ஜைனமதம் பரவி இருந்ததிற்கான சான்றுகள் பல உள்ளன. இப்பகுதி நெடுஞ்சாலை போக்குவரத்து மிகுந்தது. நெசவுத்தொழில், உலோகப் பாத்திரத் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. வேளாண்மை சிறப்பாக நடைபெறுகிறது.
உடையார்பாளையம் :
![]() |
உடையார்பாளையம் சிவன் கோவில் |
ஜெயங்கொண்டதிற்கு மேற்கில் 5 மைல் தூரத்தில் இவ்வூர் உள்ளது. வட்டத் தலைநகர். அரசு அலுவலகங்களும், வாணிபச் சிறப்பும், போக்குவரத்தும் இவ்வூரின் வளர்ச்சிக்குத் துணையாகின்றன. இங்குள்ள சிவன் கோவில் பிரபலமானது. தோல் பொருட்களுக்கும், ஜமக்காளத்திற்கும், கைத்தறித் துணிகளுக்கும் இவ்வூர் பெயர் பெற்றது. இவை பல இடங்களுக்கும் இங்கிருந்து அனுப்பப்படுகின்றன.
தொழில் :
டால்மியாபுரம் சிமெண்டு தொழிற்சாலை :
![]() |
டால்மியாபுரம் சிமெண்டு தொழிற்சாலை |
அரியலூர் சிமெண்டு தொழிற்சாலைகள் :
அரியலூருக்குக் கிழக்கில் மணலேரி என்னும் ஊருக்கு அருகில் அரசினர் சிமெண்டுத் தொழிற்சாலை ஒன்றும், அரியலூருக்குத் தெற்கில் தனியார் துறையினரால் நடத்தப்படும் சிமெண்டுத் தொழிற்சாலை ஒன்றும் இயங்கி வருகின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரியலூர் - Ariyalur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தொழிற்சாலை, அரியலூர், சிமெண்டு, tamilnadu, மாவட்டங்கள், தமிழக, நடைபெறுகிறது, தமிழ்நாட்டுத், தகவல்கள், டால்மியாபுரம், இவ்வூர், பெற்றது, பெயர், சுமார், | , ஒன்றும், சிமெண்டுத், கோவில், என்னும், சிறப்பாக, ஜெயங்கொண்ட, information, districts, ariyalur, மைல், உள்ளது, உடையார்பாளையம், தொழில், வட்டத், மக்கள், சிவன்