அரியலூர் - தமிழக மாவட்டங்கள்
கலியுக வரதராசப் பெருமாள் கோயில் :
இவ்வைணவக் கோயில் விழுப்புரம்-திருச்சி குறுவழி இரயில் பாதையில் உள்ள அரியலூருக்குக் கிழக்கில் 3 மைல் தூரத்திலிருக்கும் கல்லங்குறிச்சி என்னும் ஊரில் உள்ளது. இதைக் கலியபெருமாள் கோவில் என்றும் சொல்கிறார்கள். சுமார் கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் தென்கலை அமைப்பைச் சேர்ந்ததாகும். இக்கோயிலுக்கு நான்கு வாயிற்படிகள் அமைந்துள்ளன. 16 1/2 அடி உயரத்தில் சுற்றுமதில் சுவரும் எழுப்பப் பட்டுள்ளது. தலவிருட்சம் மகாலிங்க மரமாகும். கிழக்கு கோபுர வாசலின் கீழ்பால், கருங்கல்லால் ஆன நாற்கால் மண்டபம் உள்ளது. உற்சவ மூர்த்திகள் வெளியில் செல்லும் முன்னும், உள்ளே நுழையும் முன்னும் இம்மண்டபத்தில் ஆராதனை
வரதராசப் பெருமாள் கோயில் |
மக்கள் இதை சக்திவாய்ந்த கடவுளாக நம்புவதால் தினமும் கூட்டம் மிகுந்திருக்கிறது. சொந்தமாக உள்ள இரு தேர்களில் ஒன்றில் பெருமாளும், மற்றொன்றில் அனுமாரும் ஊர்வலம் வருவார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் மக்கள் திரளாக வருவர். தானியங்கள் காணிக்கையாக வழங்கப்படுகின்றன. ஸ்ரீராம நவமியின் போது 11 நாட்கள் விழா நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவுக்கு மறுநாள் நடக்கும் ஏகாந்த சேவை சிறப்பானதாகும். இக்கோவில் ஆதரவில் ஒரு மகளிர் உயர்நிலைப் பள்ளியும், உணவு விடுதி, நூல்நிலையம், சித்த மருத்துவமனை முதலியனவும் செயல்பட்டு வருகின்றன.
முக்கிய ஊர்கள் :
அரியலூர் :
விஜய நகரச் அரசர்கள் தமிழகத்தை சுமார் 250 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தனர். இந்தப் பேரரசில் கி.பி.1490 முதல் ஆட்சி செய்த திம்மராயர் புகழ் பெற்றுத் திகழ்ந்தார். இவரே அரியலூர் குறுநில மன்னரை நியமித்த பேரரசர். திம்மராயர் காலத்தில் தென்னாட்டில் மக்களுக்குக் கொடியவர்களாலும், கொடிய மிருகங்களாலும் பெருந்துன்பங்கள் ஏற்பட்டன. இத்துன்பங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொருட்டு இராமநயினார் என்பவரை திம்மராயர் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் தென்னிந்தியாவிற்கு வந்து அக்கொடியவர்களை அடக்கிவிட்டுத் திரும்பும்போது கொள்ளிடத்திற்கு வடபால் பயங்கர காடு ஒன்று இருந்தது. இந்தக் காட்டை திருத்தி நாடாக்க இராமநயினார் விரும்பினார்.
கொள்ளிடத்திற்கு வடக்கிலும், வெள்ளாற்றுக்குத் தெற்கிலும், ஊட்டடத்தூருக்குக் கிழக்கிலும், சிதம்பரத்திற்கு மேற்கிலுமாக கிராம பூமிகளை உண்டாக்கி, அதற்கு அரியலூர் எனப் பெயர் சூட்டினார். பிறகு இராமநயினார் அரியலூர் குறுநில மன்னராக திம்மராயரால் நியமிக்கப்பட்டார். இவர் கி.பி. 1491 தொடங்கி 1951 வரை அரியலூரை ஆண்டார். அரியலூர் அரண்மனை முகமது அலியின் படையெடுப்பால் நாசமானதாகத் தெரிகிறது. அரியலூர் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் தலைசிறந்த பேரூராட்சியாகத் திகழ்கிறது. ஊராட்சி ஒன்றியத்தின் தலைநகராய் விளங்கும் இவ்வூரில் மக்கள்தொகை மிகுதி.
கலியபெருமாள் கோவில் |
பல சிமெண்டு தொழிற்சாலைகளும், அரசு அலுவலகங்களும், மருத்துவமனைகளும், வங்கிகளும் நிறைந்து காணப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை கூடுகிறது. முக்கியமாக ஆடு விற்பனை சந்தையில் சிறப்பாக நடைபெறுகிறது. அரியலூர் வட்டம் சுமார் இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்ததாக புவியியல்
கல்மரம் |
அரியலூருக்கு அருகில் மேற்குச் சாத்தனுர் கிராமத்தில் ஒரு பெரிய கல்மரம் விழுந்து கிடக்கிறது. 16 அடி நீளமும், 4 அடி சுற்றளவும் கொண்ட இம்மரம் வேர்களுடனும் கிளைகளுடனும் காணப்படுகிறது. இதைப் பல நாட்டினரும் வந்து பார்த்து ஆய்வு செய்கிறார்கள். 1923 இல் பெங்களூர் மத்திய கல்லூரிப் புவியியல் பேராசிரியர் இராமராவ் என்பவர் ஒரு ராட்சதப் பிராணியின் முதுகெலும்பைக் கண்டுபிடித்தார். இக்கண்டுபிடிப்புகள், இப்பகுதியில் பெட்ரோல், நிலக்கரி, தங்கச் சுரங்கம், எண்ணெய் ஊற்று, ஆகியன இருப்பதை உறுதிப் படுத்துகின்றன. இப்பகுதியில் சுண்ணாம்புக் கல், ஜிப்சம், வெள்ளைக் களிமண், அப்ரேகம் முதலிய கனிமப் பொருட்கள் கிடைக்கின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரியலூர் - Ariyalur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - அரியலூர், கோவில், tamilnadu, உள்ளது, மாவட்டங்கள், தமிழக, இராமநயினார், இவ்வூரில், கலியபெருமாள், கோயில், உள்ள, இப்பகுதியில், திம்மராயர், தகவல்கள், சுமார், தமிழ்நாட்டுத், வந்து, ஆகியன, ஒன்று, கொள்ளிடத்திற்கு, திகழ்கிறது, நடுநிலைப்பள்ளி, ராட்சதப், பிராணியின், | , கொண்ட, கல்மரம், மேனிலைப்பள்ளி, புவியியல், அரசு, முன்னும், பெருமாள், விழுப்புரம், திருச்சி, வரதராசப், information, ariyalur, districts, குறுவழி, இரயில், வருகின்றன, ஆட்சி, நடைபெறுகிறது, மக்கள், பாதையில், நான்கு, குறுநில