விஜயநகர் அரசு
இந்திய வரலாற்றில் விஜயநகரப் பேரரசின் வரலாறு ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. நான்கு மரபுகள் - சங்கம, சாளுவ, துளுவ, ஆரவீடு - கி.பி. 1336 முதல் 1672 வரை விஐய நகரை ஆட்சிபுரிந்தன. இலக்கியம், தொல்லியல், நாணயம் என விஜய நகர வரலாற்றுக்கான சான்றுகள் பல்வகைப்படும். கிருஷ்ண தேவராயரின் ஆமுக்த மால்யதம், கங்காதேவி எழுதிய மதுராவிஜயம், அல்லசானி பெத்தண்ணாவின் மனுசரிதம் போன்றவை விஜயநகர சமகால நூல்களாகும்.
![]() |
இபன் பதூதா |
இரண்டாம் தேவராயரின் ஸ்ரீரங்கம் செப்பேடுகள் போன்ற செப்பேடுகள் விஜயநகர அரச வழித்தோன்றல்கள் மற்றும் அவர்களது சாதனைகளைக் கூறுகின்றன. ஹம்பி இடிபாடுகளும் பிற சின்னங்களும் விஜய நகர ஆட்சியாளர்களின் பண்பாட்டுப் பங்களிப்பை வெளிப்படுத்துகின்றன. அவர்கள் வெளியிட்டுள்ள எண்ணற்ற நாணயங்களில் காணப்படும் உருவங்கள் மற்றும் சொற்றொடர்கள் விருதுகளையும் சாதனைகளையும் எடுத்துக்கூறுகின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஜயநகர் அரசு , வரலாறு, இந்திய, விஜய, விஜயநகர், அரசு, பயணி, அவர்களது, செப்பேடுகள், பயணிகள், தேவராயரின், இந்தியா, விஜயநகர, இபன், பதூதா