');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
சமூக வாழ்க்கை
ஹரப்பா மக்களின் சமூக வாழ்க்கையை அறிந்து கொள்ள போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. ஆண், பெண் இருபாலரும் கீழாடை, மேலாடை என்ற இரண்டுவித ஆடைகளையும் அணிந்தனர். இருபாலரும் மணிகளாலான ஆபரணங்களை அணிந்துகொண்டனர், வளையல்கள், காப்புகள், ஒட்டியாணம், சிலம்பு, காதணி, மோதிரம் போன்றவை பெண்களுக்கான ஆபரணங்கள். இவை தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலம் போன்ற உலோகங்களானவை. அரியவகை கற்களாலான ஆபரணங்களும் இருந்தன. மட் பாண்டங்கள், கற்கள், ஒடுகள், தந்தம் மற்றும் உலோகங்களாலான பல்வேறு வகையிலான வீட்டுக்குதவும் பாத்திரங்கள் மொகஞ்சாதோராவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நூற்கும் தக்களி ஊசிகள்,
|
ஹரப்பா ஆபரணங்கள் |
சீப்புகள், தூண்டில்முட்கள், கத்திகள் போன்றவை செம்பாலானவை. களிமண்ணாலான வண்டிகள் சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்களில் அடங்கும். கோலிகள், பந்துகள், தாயம் போன்றவை விளையாட்டுக்கு பயன்பட்டன. மீன் பிடித்தல் என்பது முறையான தொழில். வேட்டையாடுதலும், எருதுச் சண்டையும் பொழுதுபோக்குகளாகும். பல்வேறு போர் கருவிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. செம்பு மற்றும் வெண்கலத்திலான கோடரிகள், ஈட்டிகள், குறுவாட்கள், வில் அம்புகள் போன்றவையும் இதிலடங்கும்.
கலைகள்
|
நாட்டிய மங்கை |
ஹரப்பாவின் சிற்பங்கள் மிகச்சிறந்த வேலைப்பாடுகளைக் கொண்டதாகும். சுடுமண்ணாலான ஆண், பெண் உருவங்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் முத்திரைகளில் வரையப்பட்டுள்ள செதுக்கோவியங்கள் சிற்பியின் திறமைக்கு சான்று பகிர்கின்றன. மொகஞ்சாதாரோவில் கண்டெடுக்கப்பட்டுள்ள 'நாட்டிய மங்கை' என்ற வெண்கல உருவ பொம்மை சிறப்பான கலைநயத்திற்கு எடுத்துக் காட்டாகும். அதன் வலது கை இடுப்பின்மீதும், வளையல்கள் அணிந்த இடது கை தொங்கவிடப்பட்ட நிலையிலும் அமைக்கப் பட்டுள்ளது, ஹரப்பாவில் இரண்டு கற்சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒன்று மனிதனின் பின்பக்க வாட்டிலும் மற்றது நாட்டிய வடிவிலும் அமைந்துள்ளன. ஹரப்பா நகர மண்பாண்டங்கள் சிறந்த கலைநயமிக்கவையாகும். மண்பாண்டங்களும், குவனளகளும் பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் உருவாக்கப் பட்டுள்ளன. வண்ணப்பூச்சுடன்கூடிய மண்பாண்டங்கள் தரமிக்கவையாகும்.
கோணவடிவிலான கோடுகள், வட்டங்கள், இலைகள், செடிகள், மரங்கள் போன்ற ஓவியங்கள் மண்பாண்டங்கள்மீது வரையப்பட்டுள்ளன. சில மண்பாண்டங்களில் மீன் மற்றும் மயில் உருவங்களும் காணப்படுகின்றன.
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->