நீதிக்கட்சியின் ஆட்சி
மொத்தம் 13 ஆண்டுகள் நீதிக்கட்சி ஆட்சியிலிருந்தது. சமூக நீதியும் சமூக சீர்திருத்தங்களுமே இந்த ஆட்சியின் சிறப்புகளாகும். அரசப் பணியிடங்களில் பிராமணர் அல்லாத சமூகத்தினருக்கு போதிய பிரதிநிதித்துவத்தை நீதிக்கட்சி வழங்கியது. கல்வி சீர்திருத்தங்கள் மூலம் தாழ்த்தப்பட்டோர் நிலை உயர்வதற்கு அது பாடுபட்டது.
நீதிக்கட்சியின் கல்விச் சீர்திருத்தங்கள்
1. கட்டணமில்லாத கட்டாயக் கல்வி முதன் முறையாக சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2. ஏறத்தாழ 3000 மீனவ குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர்களுக்கு மீன்வளத்துறையின் மூலமாக இலவச மீன் பிடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
3. சென்னையில் தோற்தெடுக்கப்பட்ட மாநகராட்சி பள்ளிகளில் இலவச மத்திய உணவு அளிக்கப்பட்டது.
4, 1934ம் ஆண்டு சென்னை துவக்க கல்வி சட்டம் திருத்தப்பட்டு 1335ல் துவக்க கல்வியின் தரம் மேம்படுத்தப்பட்டது.
5. பெண் கல்வி நீதிக் கட்சியின் ஆட்சியில் ஊக்குவிக்கப்பட்டது.
6. தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் கல்வி தொழிலாளர் நலத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
7. ஆயுர்வேதா, சித்தா, யுனானி மருத்துவக் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது.
மாவட்ட முன்சீப்புகளை நியமிக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திடமிருந்து பறிக்கப்பட்டது. 1921 மற்றும் 1922 ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டு அரசாணைகள், உள்ளாட்சி அமைப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் பிராமணர் அல்லாதவர்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்தன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீதிக்கட்சியின் ஆட்சி , கல்வி, வரலாறு, நீதிக்கட்சியின், இந்திய, அளிக்கப்பட்டது, ஆட்சி, இலவச, துவக்க, சென்னையில், சமூக, இந்தியா, நீதிக்கட்சி, பிராமணர், சீர்திருத்தங்கள்