இந்திய தேசிய இயக்கம் (1905 - 1916)
தீவிரவாதிகளின் தலையாய குறிக்கோள் சுயராஜ்யம் அல்லது முழு விடுதலையே தவிர வெறும் தன்னாட்சி அல்ல.
தீவிரவாதிகள் பின்பற்றிய வழிமுறைகள்
பிரிட்டிஷாரின் நீதியுணர்வில் தீவிரவாதிகள் நம்பிக்கை கொண்டிருக்க வில்லை. எப்படி பிரிட்டிஷார் பலவந்தமாக இந்தியாவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர் என்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர். அரசியல் உரிமைகளை போராடித்தான் பெறவேண்டும் என்பது அவர்களது நம்பிக்கையாகும். தன்னம்பிக்கையும் தன் முனைப்பும் அவர்களது உணர்வில் ஊறியிருந்தன.
தீவிரவாதிகள் பின்பற்றிய வழிமுறைகள் வருமாறு:
1. அரசு நீதிமன்றங்களையும், பள்ளிகளையும், கல்லூரிகளையும் புறக்கணிப்பதன் மூலம் பிரிட்டிஷ் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது.
2. சுதேசிப் பொருட்களை ஆதரிப்பது; அந்நியப் பொருட்களை வாங்க மறுப்பது.
3. தேசியக் கல்வியை அறிமுகப்படுத்தி வளர்ப்பது.
பால கங்காதர திலகர் |
பால கங்காதர திலகர், லாலா லஜபதிராய், பிபின் சந்திரபால், அரவிந்த கோஷ் போன்ற தலைவர்கள் தீவிரவாத தேசிய இயக்கத்தை முன்னின்று நடத்தினர்.
இந்தியாவில் பிரிட்டிஷாருக்கு எதிரான ஒரு முழுமையான இயக்கத்தை தோற்றுவித்தவர் பால கங்காதர திலகர் ஆவார். அவரை 'லோக மான்ய திலகர்' என்றும் அழைப்பர். மராட்டா மற்றும் கேசரி என்ற வார இதழ்களின் வாயிலாக பிரிட்டிஷாரின் கொள்கைகளைச் சாடினார். தேசிய இயக்கத்தில் பங்கு கொண்டதற்காக பிரிட்டிஷாரால் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1908ல் 6 ஆண்டு கால சிறை வாசத்திற்காக மாண்ட்லே கொண்டு செல்லப்பட்டார். 1916ல் பூனாவில் தன்னாட்சி கழகத்தை அமைத்தார். "சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை நான் அடைந்தே தீருவேன்" என்று முழங்கினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தேசிய இயக்கம் (1905 - 1916) , இந்திய, வரலாறு, தேசிய, திலகர், தீவிரவாதிகள், தீவிரவாதிகளின், இயக்கம், கங்காதர, மறுப்பது, பொருட்களை, தலைவர்கள், இயக்கத்தை, அவர்களது, பின்பற்றிய, குறிக்கோள், இந்தியா, சுயராஜ்யம், தன்னாட்சி, பிரிட்டிஷாரின், வழிமுறைகள், கொண்டு