');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
இந்தியாவின்மீது முஸ்லிம்கள் நடத்திய படையெடுப்புகளின் விளைவாக டெல்லி சுல்தானியம் நிறுவப்பட்டது. அது கி.பி. 1206 முதல் 1526 ஆம் ஆண்டுவரை நீடித்தது. ஐந்து வெவ்வேறு வம்சங்கள் அடிமை, கில்ஜி, துக்ளக், சையது, லோடி ஆகியன டெல்லி சுல்தானியத்தை ஆட்சி செய்தன. வட இந்தியா முழுவதையும் கைப்பற்றியதோடு நிற்காமல், அவர்கள் தக்காணத்திலும் தென்னிந்தியாவிலும் நுழைந்தனர். இந்தியாவில் அவர்களது ஆட்சி, சமூகம், ஆட்சித் துறை மற்றும் பண்பாட்டு நிலைமைகளில் பெருத்த மாற்றங்களை ஏற்படுத்தின.
அடிமை வம்சம்
அடிமை வம்சம் மாம்லுக் வம்சம் என்றும் அழைக்கப்படுகிறது. மாம்லுக் வம்சம் என்ற குர்ஆன் சொல்லுக்கு அடிமை என்று பொருள். கி.பி. 1206 முதல் 1290 ஆம் ஆண்டுவரை அடிமை வம்சம் டெல்லியில் ஆட்சிபுரிந்தது. இக்காலத்தில் மூன்று மரபுகள் ஏற்படுத்தப்பட்டன. அவை
1 குத்புதீன் ஐபக் நிறுவிய குத்பி மரபு (1206 - 1211).
2 இல்துத்மிஷ் நிறுவிய முதல் இல்பாரி மரபு (1211 - 1266)
3. பால்பன் நிறுவிய இரண்டாவது இல்பாரி மரபு (1266 - 1290)
குத்புதீன் ஐபக் (1206 - 1211)
|
குத்புதீன் ஐபக் |
கோரி முகமதுவிடம் அடிமையாக இருந்தவர் குத்புதீன் ஐபக். கோரி முகமது அவரை இந்தியப் பகுதிகளுக்கு ஆளுநராக நியமித்தார். டெல்லிக்கு அருகிலுள்ள இந்திரபிரஸ்தம் என்ற இடத்தில் ஐபக் தனது ராணுவ நிலையத்தை அமைத்துக் கொண்டார். கோரியின் வாழ்நாளிலேயே ஐபக் ஒரு நிலையான படையைத் திரட்டியதோடு வட இந்தியாவில் தமது ஆதிக்கத்தையும் நிலைப்படுத்திக் கொண்டார். 1206 ஆம் ஆண்டு கோரி இறந்தவுடன் ஐபக் தனது சுதந்திரத்தை அறிவித்துக் கொண்டார். கோரி அரசுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொண்டார். இவ்வாறு, அடிமை வம்சத்திற்கும்
|
குதுப்மினார் |
டெல்லி சுல்தானியத்திற்கும் ஐபக் அடிகோலினார். சுல்தான் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்ட அவர் லாகூரை தலைநகராக்கினார். அவரது ஆட்சி நான்கு ஆண்டுகளே நீடித்தது. முஸ்லிம் எழுத்தாளர்கள் ஐபக்கை 'லாக் பக்ஷ்"என அழைக்கின்றனர். அவர்களுக்கு தாரளமாக கொடைகளை வழங்கியதால் அவ்வாறு அழைக்கப்பட்டார். ஹசன் நிசாமி என்ற சிறந்த அறிஞரை ஐபக் ஆதரித்தார். சூஃபித் துறவி குவாஜா குத்புதீன் பக்தியார் என்பவரின் பெயரில் அவர் குதுப்மினாரை கட்டத் தொடங்கினார். பின்னர் அது இல்துத்மிஷ் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. 1210 ஆம் ஆண்டு குதிரைப் போலோ விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது ஐபக் தவறி விழுந்து இறந்தார். அடுத்து அவரது மகன் ஆரம் பக்ஷ் ஆட்சிப் பொறுப்பேற்றார். எட்டு மாதங்களுக்குப் பிறகு இல்துத்மிஷ் அவரை அகற்றிவிட்டு டெல்லி சுல்தானாகப் பதவியேற்றார்.
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->