வெல்லெஸ்லி பிரபு
தஞ்சாவூர், சூரத், கர்நாடகம் ஆகிய பகுதிகளின் ஆட்சியாளர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டு அந்த அரசுகளின் நிர்வாகத்தை வெல்லெஸ்லி தாமே எடுத்துக்கொண்டார். தஞ்சையை ஆண்ட மராட்டியருக்கிடையே வாரிசுரிமைச் சிக்கல் நிலவியது. 1799-ல் தஞ்சை அரசர் சரபோஜியுடன் வெல்லெஸ்லி உடன்படிக்கை செய்து கொண்டார். இதன்படி, ஆட்சிப் பொறுப்பை பிரிட்டிஷாரே ஏற்றனர். சரபோஜி, 'ராஜா' என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டதுடன் ஆண்டுக்கு நான்கு லட்ச ரூபாய் ஓய்வூதியமும் பெற்றார்.
ராஜா சரபோஜி |
1759 ஆம் ஆண்டிலேயே சூரத் பிரிட்டிஷாரின் காப்பரசாக மாறியது. 1799ல் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரத்தின் நவாப் மறைந்தார். அவரது சகோதரர் ஆட்சிக்கு வந்தார். இத்தருணத்தை நன்கு பயன் படுத்திக்கொண்ட வெல்லெஸ்லி சூரத்தின் ஆட்சிப் பொறுப்பை தாமே ஏற்றார். நவாப்பிற்கு பட்டத்தை சூட்டிக்கொள்ளும் உரிமையும் ஆண்டுக்கு ஒரு லட்சரூபாய் ஓய்வூதியமும் வழங்கப்பட்டது.
கர்நாடகத்தில் வாழ்ந்த மக்கள் நீண்டகாலமாகவே இரட்டையாட்சியின் கொடுமையை அனுபவித்து வந்தனர். நவாப் உமாதத் உல் - உமாரா திறமையற்றவராகவும் செலவாளியாகவும் இருந்தமையால் முறைகேடான ஆட்சி ஏற்பட வழிவகுத்தது. 1801 ஆம் ஆண்டு அவர் மறைந்தார். அவரது மகன் அலி உசேன் நவாப் பதவியை ஏற்றார். ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு ஆட்சியை ஆங்கிலேயரிடம் ஒப்படைக்குமாறு வெல்லெஸ்லி அவரிடம் கூறினார். அதற்கு, நவாப் மறுக்கவே 1801 ஆம் ஆண்டு மறைந்த நவாப்பின் ஒன்றுவிட்ட மகனான ஆசிம் உத் தௌலாவுடன் வெல்லெஸ்லி ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார். இதன்படி கர்நாடகத்தின் ராணுவ மற்றும் சிவில் ஆட்சி முழுவதும் பிரிட்டிஷாரின் கைக்கு வந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெல்லெஸ்லி பிரபு , வெல்லெஸ்லி, வரலாறு, இந்திய, நவாப், ராஜா, சரபோஜி, உடன்படிக்கை, பிரபு, சூரத், ஓய்வூதியமும், பிரிட்டிஷாரின், இவர், ஆண்டு, ஆட்சி, மறைந்தார், ஏற்றார், அவரது, பொறுப்பை, கர்நாடகம், தஞ்சாவூர், இந்தியா, தாமே, இதன்படி, பட்டத்தை, ஆட்சிப், ஆண்டுக்கு