வெல்லெஸ்லி பிரபு
துணைப்படைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
ஹைதராபாத்
வெல்லெஸ்லி வகுத்த துணைப்படைத்திட்டம் 1798ல் முதன்முதலில் ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, அந்த ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை தற்காலிகமானதாகும். அதன்படி துணைப்படை நிர்வாகத்துக்காக ஆண்டுக்கு 24 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஹைதராபாத்திலிருந்த பிரஞ்சுப்படைகள் முழுவதும் வெளியேற்றப்பட்டன. அதற்கு பதில் பிரிட்டிஷாரின் துணைப்படை நிறுத்திவைக்கப்பட்டது. 1800 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட புதிய உடன்படிக்கைப்படி நிசாம் பெரும் நிலப்பகுதியை பிரிட்டிஷாருக்கு விட்டுக் கொடுத்தார். இப்பகுதி 'கொடை மாவட்டங்கள்' எனப்படும்.
அயோத்தி
ஆப்கானிய சாமன் ஷாவின் படையெடுப்பு அச்சத்தை காரணமாகக் காட்டி வெல்லெஸ்லி அயோத்தி நவாப் மீது துணைப்படை ஒப்பந்தத்தை திணித்தார். இதன்படி, நவாப் செல்வ வளமிக்க பகுதிகளான ரோகில் கண்ட், கீழ் தோ ஆப், கோரக்பூர் போன்றவற்றை பிரிட்டிஷாருக்கு வழங்கினார். அயோத்தி தலைநகரில் நிறுத்தப்பட்டிருந்த பிரிட்டிஷ் துருப்புக்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. நவாப்பின் படையில் வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டது. அயோத்தியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க விதிமுனறகளை ஏற்படுத்தும் பொறுப்பையும் பிரிட்டிஷாரே மேற்கொண்டனர். இதனால், அயோத்தியின் உள்விவகாரங்களிலும் அவர்கள் தலையிடும் உரிமையைப் பெற்றனர். வணிகக் குழுவிற்கு வளமிக்க நிலப்பகுதிகள் கிடைக்க வழிசெய்த போதிலும், வெல்லெஸ்லியின் வரம்பு மீறிய இந்த நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெல்லெஸ்லி பிரபு , வரலாறு, வெல்லெஸ்லி, இந்திய, துணைப்படை, அயோத்தி, பிரபு, பிரிட்டிஷாருக்கு, வளமிக்க, எண்ணிக்கை, கொள்ளப்பட்ட, நவாப், துணைப்படைத்திட்டம், இதனால், இந்தியா, முறைகேடான, பிரிட்டிஷாரே, ஆண்டு, செய்து