');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
பிரிட்டிஷாரின் இந்த நடவடிக்கை பதட்டத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. தொடர் நிகழ்ச்சிகளுக்கும் வித்திட்டது. 1857 மே திங்களில் 3வது படைப்பிரிவைச் சேர்ந்த 85 சிப்பாய்களுக்கு அவர்கள் கொழுப்பு தடவிய தோட்டாக்களை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்தமைக்காக, நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனவே, மே 10 ஆம் நாள் அவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு தங்களது அதிகாரிகளைக் கொன்றுவிட்டு சிப்பாய்களை விடுதலை செய்தனர். பின்னர் டெல்லி நோக்கி புறப்பட்டனர். மீரட்டிலிருந்த தளபதி ஹூவட் என்பவரால் இதனைத் தடுக்க முடியவில்லை.
|
பகதூர் ஷா II |
மறுநாள் காலை, கிளர்ச்சியாளர்கள் டெல்லியை அடைந்தனர். 1857 மே 12ம் நாள் டெல்லியைக் கைப்பற்றினர். டெல்லியிலிருந்து படையதிகாரி லெப்டிணன்ட் வில்டாஷ்பி என்பவரால் கலகக்காரர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. முகலாய வம்சத்தைச் சேர்ந்த வயதான, பெயரளவுக்கே பேரரசராக இருந்த, இரண்டாம் பகதூர் ஷா என்பவரை இந்தியாவின் பேரரசராக அறிவித்தனர். வடக்கு மற்றும் மத்திய இந்தியாவிலிருந்த லக்னோ, அலகாபாத், கான்பூர், பனாரஸ், பீகாரின் சில பகுதிகள், ஜான்சி போன்ற இடங்களிலும் கலகம் வேகமாகப் பரவியது.
|
நிக்கல்சன் |
டெல்லி
டெல்லியில் பகதூர் ஷா பெயரளவுக்கே கலகத்துக்கு தலைமை வகித்தார். உண்மையில் பகத்கான் என்ற தளபதி கலகக்காரர்களை வழி நடத்தினார். பிரிட்டிஷ் தரப்பில் நிக்கல்சன், வில்சன், பெய்ர்ட் ஸ்மித், நெவில் சாம்பர்லின் போன்றவர்களின் கூட்டு முயற்சியால் 1857 செப்டம்பரில் டெல்லி கலகக்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டது. இரண்டாம் பகதூர்ஷா சிறைப்பிடிக்கப்பட்டு ரங்கூனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 1862ல் அங்கேயே அவர் இறந்தார்.
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->