அலை ஒசை - 4.38 மணி அடித்தது!
தாரிணி சௌந்தரராகவனைப் பார்த்து "நீங்கள்தான் நன்றாக யோசித்துச் சொல்லவேண்டும்" என்று கூறியது, ராகவன் சிறிது எரிச்சலுடன், "மறுபடியும் 'யோசிக்க வேண்டும்,யோசிக்க வேண்டும்' என்றே சொல்லிக் கொண்டிருக்கிறாயே? யோசிப்பதற்கு என்னஇருக்கிறது?" என்று கேட்டான். "நீங்கள் இப்படித்தான் சொல்வீர்கள். ஆயினும் நான்என்னுடைய கடமையைச் செய்தாக வேண்டும். உங்களுடைய தாயாரும் தகப்பனாரும் உற்றார் உறவினரும் என்ன சொல்லுவார்கள் என்று யோசியுங்கள்." "சுத்தப் பைத்தியக்காரத்தனம்!அவர்களையெல்லாம் நான் மறந்து எத்தனையோ நாளாயிற்று. என்னுடைய பெற்றோர்கள்தற்சமயம் அவர்களுடைய மூத்த பிள்ளையுடனும் மூத்த மாட்டுப் பெண்ணுடனும்சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள். என்னை அவர்கள் கவனிப்பதில்லைஅவர்களை இப்போதெல்லாம் நானும் நினைப்ப தில்லை....." "இப்போதுநினைப்பதில்லையென்றால் எப்போதும் விட்டுப் போய்விடுமா? இரத்த பாசம் ஒரு நாளும் விடாதுஅதற்கு என்னுடைய தகப்பனாரைக் காட்டிலும் வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?" "நல்லதகப்பனார் உன் தகப்பனார்! பெற்ற பெண்கள் இருவருக்கும் சத்துருவாயிருந்தார்.......""உங்கள் பெற்றோர்களை நீங்கள் கவனிக்காவிட்டால் போகட்டும். இந்தப் புது டில்லியில்நீங்கள் உத்தியோகம் செய்து வாழ்க்கை நடத்த வேண்டுமல்லவா? என்னை நீங்கள் கலியாணம்செய்து கொண்டால் எல்லாரும் என்ன நினைப்பார்கள்?" "ஒன்றும் நினைக்கமாட்டார்கள்,அப்படி ஏதாவது நினைத்தால் என்னைக் கொடுத்துவைத்த அதிர்ஷ்டசாலி என்றுநினைப்பார்கள். தாரிணி! இந்தப் புது டில்லியில் உன்னைப் போன்ற அழகி ஒருத்தி உண்டா?நாகரிகத்திலும் நடை உடை பாவனையிலும் உன்னை மிஞ்சக் கூடியவள் எவளேனும் உண்டா?கிளப்புகளுக்கும் பார்ட்டிகளுக்கும் உன்னை என்னுடன் அழைத்துக்கொண்டு போவதைப் போல்பெருமை தரும் விஷயம் வேறு உண்டா....?"
தாரிணியை மூடியிருந்த உடைக்குள்ளிருந்து அமுங்கி ஒலித்த சிரிப்பின் சத்தம் வந்தது.அதைக் கேட்டதும் ஏனோ சௌந்தர ராகவனுக்கு உடல் சிலிர்த்தது; விவரமில்லாத பீதி ஒன்றுஉண்டாயிற்று. "தாரிணி! இது என்ன சிரிப்பு! இந்த வேளையில்தான், இந்தச்சந்தர்ப்பத்தில்தான் சிரிப்பது என்பது கிடையாதா?" என்றான். தாரிணி எழுந்து நின்றாள்."சிரித்தது பிசகுதான்; மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்னதான் சொன்னாலும் இன்னும்ஒருநாள், - இருபத்தினாலு மணி நேரம் - உங்களுக்கு யோசிக்கச் சாவகாசம் கொடுக்கிறேன்.நாளைக்கு இதே நேரத்துக்குக் குழந்தையை அழைத்துக்கொண்டு வருகிறேன்" என்றுசொன்னாள். "உன்னுடைய பிடிவாத குணம் முன்னைப் போலவேதான் இன்னும் இருக்கிறது.தாரிணி! போனால் போகட்டும், உன் இஷ்டப்படியே நாளைச் சாயங்காலம் வஸந்தியைஅழைத்துக் கொண்டுவா! ஆனால் போவதற்கு முன்னால் இந்தப் பயங்கரமான பர்தா உடையைஎடுத்துவிட்டு உன் முகத்தையாவது காட்டி விட்டுப்போ! இல்லா விட்டால் உன்னைப் போக விடமாட்டேன். நானே பலாத்காரமாக உன் முகமூடியை அகற்றி விடுவேன்!" என்றான். இந்தக்கடைசி வார்த்தையைச் சொல்லும்போது ராகவனுக்கு சீதா அடிக்கடி பாடும் வழக்கமான ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. "தில்லித்துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்" என்ற பாரதியாரின் கண்ணன் பாட்டு சீதாவுக்கு தெரியும். டில்லியில் முகமூடி தரித்த பர்தா முஸ்லிம் ஸ்திரீகளைப் பார்க்கும்போதெல்லாம் சீதா அந்தப் பாட்டைப் பாடிக் காட்டுவாள். ராகவனும் அதை ரசித்துக் கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பான்.
அந்தப் பாட்டு இப்போது ராகவனுக்கு நினைவு வந்ததும் அவனுடைய உடம்பு மீண்டும்சிலிர்த்தது. ராகவனுடைய அந்த வார்த்தைகளைக் கேட்ட தாரிணி சிறிது நேரம் நின்றஇடத்திலேயே நின்றாள். அவளுடைய மனதுக்குள் ஏதோ போராட்டம் நடந்தது போலும். ஒருநிமிஷம் தயங்கி நின்ற பிறகு, "தங்கள் விருப்பத்தை இப்போதே நிறைவேற்றுகிறேன். என் பேரில்குற்றம் சொல்ல வேண்டாம்!" என்று தாரிணி சொல்லிவிட்டு அவளை மூடியிருந்த பர்தாஉடையைக் கழற்றிக் கீழே நழுவி விழச் செய்தாள். உல்லாசமாக இயற்கை வனப்புகளைப்பார்த்துக்கொண்டு மலைச்சாரல் வழியாகப் போய்க் கொண்டிருந்த ஒருவனுடைய தலையில்திடீரென்று பாராங்கல் விழுந்து, கண்ணிலே கொள்ளிக் கட்டை குத்தி, காலிலே ஆயிரம்தேள்கள் கொட்டி, எதிரே பயங்கரமான பிசாசு ஒன்று தோன்றி அவனுடைய கழுத்தைப் பிடித்துஅமுக்கினால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது ராகவனுக்கு. பர்தா உடையைக் கழற்றியதும்எதிரில் தோன்றிய உருவம், சௌந்தரராகவன் பலமுறை பார்த்து இதயத்தில் பதித்து வைத்துக்கொண்டிருந்த தாரிணியின் மோகன உருவம் அல்ல; அவன் பார்க்க வேண்டுமென்று ஆவல்கொண்டிருந்த சௌந்தரிய வடிவம் அல்ல! சீதாவுக்கு உடன் பிறந்த சகோதரியின் பூரணசந்திரனையொத்துப் பொலிந்த முகம் அல்ல. அவன் பார்த்தது ஒரு கோர ஸ்வரூபம். ஒரு கை துண்டிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உருவம். ஒரு கண் இருந்த இடத்தில் வெறுங்குழி இருந்த உருவம். வலது நெற்றிப் பொட்டிலிருந்து இடது கன்னத்தின் ஓரம் வரையில் ஒரு நீண்ட பெரிய பிளவு ஓடியிருந்த பயங்கர வடிவம். மகா சிற்பி ஒருவன் அமைந்திருந்த தெய்வீகச் சிலையைவெறிகொண்ட கஜினி முகம்மது தாக்கி உடைத்த பிறகு சிதைந்துபோன சிலை எப்படிஇருக்குமோ அப்படித் தோற்றமளித்த பரிதாப உருவம்.
சௌந்தரராகவன் பீதியினாலும் பயங்கரத்தினாலும் பரிதாபத்தினாலும்அருவருப்பினாலும் கதிகலங்கியவனாய் திகைத்து நின்றான். சற்று நேரம் திறந்த கண்கள்திறந்தபடி, திறந்த வாய் திறந்தபடி, பார்த்துக்கொண்டே நின்றான். அப்புறம் நிற்க வலிவற்றவனாய்த் தொப்பென்று ஸோபாவில் விழுந்தான். அந்த உருவம் வாய் திறந்து பேசியது. முன் பல் இரண்டு இல்லாதபடியால் வாயைத் திறந்தபோது அந்த கோர ஸ்வரூபம் மேலும் பயங்கரமாகக் காட்சி தந்தது. "ஐயா! மன்னிக்க வேண்டும், தங்களுக்கு இந்தத் துன்பத்தை இன்று தரவேண்டாம் என்றுதான் நினைத் தேன். ஆனால் நீங்கள் கேட்கவில்லை உடையைஎடுக்கும்படி பிடிவாதம் பிடித்தீர்கள்!" என்று தாரிணி கூறினாள். ஆம், அது தாரிணியின்குரல்தான்! சந்தேகமில்லை. எவ்வளவு சின்னாபின்னமடைந்திருந்த போதிலும் அந்த முகம்தாரிணியின் முகந்தான்! ஆனாலும் சௌந்தரராகவன் அதை நம்புவது எளிதாக இல்லை. இதுவேறு யாராகவாவது இருக்கலாகாதா என்றும் தன்னை இந்தப் பயங்கர ஏமாற்றத்துக்குஉள்ளாக்க யாரோ செய்த சூழ்ச்சியாக இருக்கக்கூடாதா என்றும் எண்ணினான். "நான் போய்வருகிறேன், ஒரு நாள் முழுதும் யோசித்துப் பதில் சொல்லுங்கள். ஒரு நாள் என்ன? ஒரு வாரம்வேண்டுமானாலும் யோசித்துச் சொல்லுங்கள்!" என்றாள் தாரிணி. சௌந்தரராகவனுடையதலைக்கு உட்புறம் நூறு குட்டிப் பிசாசுகள் புகுந்து கொண்டு 'ஹஹஹஹஹஹா!" என்று பரிகசித்துச் சிரித்தன. "போகாதே, தாரிணி! போகாதே! ஏதாவது சொல்லி விட்டுப் போ! இல்லாவிட்டால் எனக்கு இப்போதே பைத்தியம் பிடித்துவிடும்!" என்று ராகவன் அலறினான்.தாரிணி உட்கார்ந்தாள், "தயவு செய்து பதறாதீர்கள்; வீணாக அலட்டிக் கொள்ளாதீர்கள். நான்என்ன சொல்ல வேண்டும்? கேளுங்கள், சொல்கிறேன்!" என்றாள். ராகவன் தாரிணியை ஒருதடவை காலோடு தலை வரை உற்றுப் பார்த்துவிட்டு மேஜைமீது தன் முகத்தைச் சேர்த்துவைத்துக் கொண்டு விம்மினான். "ஐயா! தாங்கள் எத்தனையோ தத்துவங்கள் படித்தவர். படித்ததத்துவங்களையெல்லாம் இப்போது தயவு செய்து ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். விதியைவெல்ல யாரால் முடியும்? நடந்து போனதை நினைத்துத் துக்கப்பட்டு ஆவதென்ன?" என்றுசொன்னாள் தாரிணி.
சௌந்தரராகவன் தலை நிமிர்ந்தான். "தாரிணி! அந்த விதி என்னை எதற்காகஉயிரோடு வைத்திருக்கிறது? இந்தக் கோரக் காட்சியைக் காண்பதற்காகத்தானா?கல்கத்தாவில் சுரம் அடித்துக் கிடந்தபோதே நான் இறந்து போயிருக்கக் கூடாதா?" என்றுகதறினான். "விதியை வெல்லும் சக்தியை நமக்குக் கடவுள் கொடுக்கவில்லை. ஆனால்எப்பேர்ப்பட்ட கஷ்டத்தையும் துக்கத்தையும், வெல்லும் சக்தியைக் கொடுத்திருக்கிறார். இன்றைக்குக் காந்தி மகான் இறந்ததை நினைத்து இந்தத் தேசமெல்லாம் வருத்தப்படுகிறது. இன்னும் ஒரு மாதம் போனால் எல்லோரும் மகாத்மாவை மறந்துவிடப் போகிறார்கள்.அவரவர்களின் காரியத்தைப் பார்க்கப் போகிறார்கள் இந்த உலகத்தில் எந்தவிதமான சுகமும் இன்பமும் சாசுவதமல்ல; அதுபோலவே கஷ்டமும் துன்பமும் சாசுவதம் அல்ல. துன்பத்தை மறந்து விடும் சக்தியைக் கடவுள் நமக்கு அளித்திருக்கிறார்" என்றாள் தாரிணி. "கடவுள் என்றுசொல்லாதே! கடவுள் இல்லை என்று நான் சத்தியம் செய்வேன். உன்னை இந்தக் கோலத்தில்பார்த்த பிறகு கடவுளிடம் எப்படி நம்பிக்கை உண்டாகும்?" என்றான் ராகவன். "நான் இந்தக்கோலமான பிறகுதான் கடவுளிடம் எனக்குப் பரிபூரண நம்பிக்கை உண்டாகியிருக்கிறது. ஐயா!என்னை வளர்த்த தாயையும் உங்கள் குழந்தை வஸந்தியையும் காப்பாற்றினேன். நல்ல சமயத்தில்கடவுள் என்னை அவர்கள் இருந்த இடத்தில் கொண்டு போய் விட்டார்; அந்தப்பிரயத்தனத்திலேதான் என்னுடைய ஒரு கை போயிற்று; ஒரு கண் போயிற்று; முகத்தில் இந்தக்கத்திக் காயம் ஏற்பட்டது. ஆனால் என்னை வளர்த்த தாயை நான் காப்பாற்ற முடிந்தது; என்உயிருக்குயிரான சகோதரியின் குழந்தையை நான் காப்பாற்ற முடிந்தது. இது கடவுளின்கருணை அல்லவா?" பிறகு ரஜினிபூர் ராஜ்யத்தில் ஒரு முஸ்லிம் மசூதியில் பல ஸ்திரீகள்அடைக்கப்பட்டிருந்ததையும், அந்த மசூதியைக் கொளுத்திவிட்டு அதில் இருந்தவர்களையெல்லாம் கொன்று விடச் சில வெறியர்கள் முயன்றதையும், தான்தன்னந்தனியாக அவர்களை எதிர்த்து நின்றதையும், அதற்குள் ரஜினிபூர் மகாராணி படைகளுடன் வந்து தன்னையும் மசூதியில் இருந்த ஸ்திரீகள் எல்லாரையும் காப்பாற்றியதையும் பற்றித் தாரிணி கூறினாள். சௌந்தரராகவன் ஏற்கனவே அந்த விவரங்களையெல்லாம் பத்திரிகையில் படித்திருந்தான். அப்போது அந்த முஸ்லிம் மசூதியை இந்த ரஜினிபூர் மகராணி எதற்காககாப்பாற்றினாள் என்று ஆத்திரப்பட்டான். இப்போது தாரிணி கூறிய செய்தி அவனுடையஉள்ளத்தில் சொல்லமுடியாத குழப்பத்தை உண்டு பண்ணியது. கடவுளே! அந்த மசூதியில் இருந்தல்லவா தன்னுடைய குழந்தை காப்பாற்றப்பட்டிருக்கிறாள்? ரஜினிபூர் மகாராணி நல்லசமயத்தில் வந்து காப்பாற்றி யிராவிட்டால்? அரைமணி நேரம் கழித்துச் சென்றிருந்தால்?-ஒருவேளை இது கடவுளின் கருணைதானா?.... அந்தச் சமயத்தில் 'கண கண கண'வென்றுடெலிபோன் கருவியின் மணி அடித்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலை ஒசை - 4.38 மணி அடித்தது! , தாரிணி, அந்த, வேண்டும், நான், என்னை, உருவம், நீங்கள், என்ன, சௌந்தரராகவன், இந்தப், அடித்தது, கடவுள், இருந்த, ராகவனுக்கு, அல்ல, நேரம், ராகவன், சிலரும், ரஜினிபூர், பிறகு, என்றான், பர்தா, பெரிய, மசூதியில், உண்டா, செய்து, இப்போது, என்னுடைய, என்றாள், கொண்டு, உன்னை, முஸ்லிம், எவ்வளவு, அவன், நின்றான், இடத்தில், பயங்கர, வடிவம், சகோதரியின், ஸ்வரூபம், இப்போதே, சொல்ல, நாள், நம்பிக்கை, கடவுளிடம், போகிறார்கள், சக்தியைக், வளர்த்த, குழந்தை, வந்து, முடிந்தது, காப்பாற்ற, போயிற்று, வெல்லும், இந்தக், இல்லை, கூறினாள், துன்பத்தை, வாய், என்றும், அவனுடைய, தயவு, போகாதே, சொல்லுங்கள், திறந்த, இன்னும், சிறிது, யோசித்துச், பார்த்து, நீண்ட, யோசிக்க, மறந்து, விட்டுப், மூத்த, எத்தனையோ, சொல்லி, நடந்தது, இருக்கிறது, ஒன்று, கல்கியின், அமரர், மேலே, இப்படித்தான், இறந்து, கதாநாயகி, நடக்க, வேறு, பெண்கள், பயங்கரமான, போனால், என்றுசொன்னாள், குழந்தையை, சீதா, செய்த, அந்தப், சீதாவுக்கு, பாட்டு, நின்றாள், வந்தது, புது, போகட்டும், உங்கள், ஏதாவது, டில்லியில், மூடியிருந்த, தாரிணியை, அழைத்துக்கொண்டு, உலகத்தில்