அலை ஒசை - 4.33 ராகவன் கோபம்
"சூரியா! அவர் எங்கே? அந்தப் பிராமணர் துரைசாமி ஐயர் எங்கே? சீதாவின்கலியாணத்துக்குப் பிறகு அவர் ஏன் திடீரென்று மறைந்து போனார்? அவரை எங்கே பார்த்தாய்?"என்று கேட்டான். "ராகவன்! அதையெல்லாம் ஏன் கேட்கிறீர்கள்? தெரிந்து கொண்டால்உங்கள் மனம் கஷ்டப்படும்!" "எதற்காக என் மனம் கஷ்டப்படவேண்டும்? நீ பேசுவதெல்லாம்மர்மமாகவே பேசுகிறாயே?" "நீங்கள் வைதிக சிரேஷ்டர், உங்கள் மாமனார் ஒரு மௌல்விசாகிப் என்று தெரிந்தால் உங்களுக்குக் கஷ்டமாயிராதா? உங்கள் தகப்பனார் பத்மலோசனசாஸ்திரிகளின் இருதயமே நின்றுவிடுமே?" "என் தந்தையை எதற்காக இதில் சம்பந்தப்படுத்துகிறாய்? என் அழகான மாமனார் உனக்கும் தாய் மாமன்தானே? அவர் எதற்காக மௌல்வி சாகிபுஆகவேண்டும்? ஹிந்து மதத்தைவிட முஸ்லிம் மதம் சீக்கிரத்தில் மோட்சம் அளித்துவிடும் என்கிறநம்பிக்கையினாலா?" "அவ்வளவு தூரம் எனக்கு அவருடைய மதக் கொள்கையைப் பற்றித்தெரியாது. என்னுடைய அபிப்பிராயம், அவர் ஊரை ஏமாற்றுவதற்கே அப்படி வேஷம் போட்டுக்கொண்டு திரிந்தார் என்பதுதான். ஆனால் அந்த வேஷம் அவர் எதிர்பாராத முறையில்அவருக்குத் திடீர் என்று மோட்சத்தை அளித்து விட்டது!" ராகவனுடைய இருதயத்தில் இனந்தெரியாத ஏதோ ஒருவித பயம் ஏற்பட்டது. பயங்கரமான பாவம் ஒன்று கரிய முகமூடிபோட்டுக்கொண்டு தன் முன்னால் வந்து நிற்பதாகத் தோன்றியது. அந்த முகமூடியைக் கிழித்துஅந்த உருவத்தைப் பார்க்கும் தைரியம் அவனுக்கு ஏற்படவில்லை. ஆகையால் உடனே அவன்பேச்சை மாற்றிவிட விரும்பினான். "கிரகசாரந்தான்! துரைசாமி ஐயர் மௌல்வி சாகிபுஆவதாவது? அதைப்பற்றி நினைக்கவே எனக்கு அருவருப்பாயிருக்கிறது வேறு ஏதாவது விஷயமிருந்தால் பேசு!"
"வேறு ஒன்றும் இல்லை" என்று கூறிவிட்டுச் சூரியா மறுபடியும் புறப்பட்டான்."ஒருவேளை நீ தப்பித் தவறிச் சீதாவை எங்கேயாவது பார்க்கும்படி நேர்ந்தால்...." "சீதாவின்ஆவியைப் பார்த்தால் என்று சொல்லுங்கள்." "நீ பேசுவதைக் கேட்டால் சீதா இறந்துவிட்டாள்என்று உறுதியாக நம்புகிறாய் போலிருக்கிறது!" "கண்ணால் கண்டதை நம்பாமல் என்னசெய்கிறது?" "என்னத்தை நீ கண்ணால் பார்த்தாய்!" என்று ராகவன் குரல் நடுக்கத்துடன் வினவினான். "நதியின் பிரவாகத்தில் சீதா முழுகுகிறதைக் கண்ணால் பார்த்தேன்" என்றான் சூரியா. "ஐயோ!" என்றான் ராகவன். "அந்தப் படகிலே நானும் இருந்தேன். நாங்கள் மூன்றுபேருந்தான் இருந்தோம். கரையிலிருந்து படகைப் பார்த்துச் சுட்டது யார் என்பது பற்றிஎனக்குச் சந்தேகம் உதித்திருந்தது; அது உண்மை என்று இன்றைக்குத் தெரிந்தது!" "என்னசொல்கிறாய், சூரியா? என் மூளை குழம்புகிறது! படகில் நீங்கள் மூன்று பேரும் இருந்தீர்கள்என்றால்? யார் யார் இருந்தீர்கள்?" "நானும் சீதாவும், சீதாவின் தகப்பனாருந்தான் இருந்தோம். பஞ்சாப் நகரத்திலிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தோம். சீதாவின் தகப்பனார் என்னநினைத்தார் என்றால், தம்முடைய மௌல்வி சாகிபு வேஷம் சீதாவுக்கு ஒரு பாதுகாப்பு என்றுநினைத்தார். அவர் ஒன்று நினைக்க, அவருடைய மாப்பிள்ளை வேறொன்று நினைத்து விட்டார்!""ஐயையோ! அப்படியென்றால் அந்த படகில் நான் குறிபார்த்துச் சுட்ட முஸ்லிம்..." "ஆமாம்;உங்களுடைய மாமனாரை நோக்கித்தான் சுட்டீர்கள். குறியும் தப்பவில்லை, ராகவன்! இந்த துரதிர்ஷ்ட சம்பவத்தை அறிந்திருப்பவன் நான் ஒருவன்தான்; இப்போது உங்களுக்கும் தெரியும்.நான் இதை வேறு யாரிடமும் சொல்லப் போவதில்லை. நீங்களும் சொல்ல மாட்டீர்கள் என்றுநினைக்கிறேன்."
ராகவன் திடீரென்று குதித்து எழுந்தான். கோபத்தினால் முகத்தில் நரம்புகள் புடைக்க, சூரியாவை நோக்கிக் கைகளை ஆட்டிக்கொண்டு, "அடமடையா! நீயும் ஒரு ஆண்பிள்ளையா?ஒரு பெண் ஆற்றுவெள்ளத்தில் விழுந்து முழுகி இறந்ததை நீ பார்த்துக் கொண்டிருந்தாயா?அவளைக் காப்பாற்ற முயலாமல் பெரிய வீரன் சூரன் தியாகி என்றெல்லாம் உன்னை நீயே புகழ்ந்து கொள்வாயே? மணலைக் கயிறாய்த் திரித்தேன், வானத்தை வில்லாய் வளைத்தேன்என்றெல்லாம் பீற்றிக் கொள்வாயே? வெள்ளத்தில் முழுகிப் போகாமல் ஒரு பெண்ணைக் கரைசேர்க்கக் கையினால் ஆகவில்லையா?" என்று நெருப்பை கக்கினான். சூரியா சாந்தமான குரலில், "ராகவன்! நான் அப்போது சீதாவைக் காப்பாற்றியிருப்பேன்? காப்பாற்றிக் கரைசேர்த்திருக்க முடியும் ஆனால் அவ்விதம் செய்யவில்லை. முழுகிச் சாகட்டும் என்று பார்த்துக்கொண்டிருந்து விட்டேன்! ஏன் தெரியுமா! பிழைத்து வந்தால் உம்மைப்போன்ற அயோக்கியசிகாமணியோடு அவள் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதி னால்தான்! முன்னொரு சமயம் நீர்என்னை மாடியிலிருந்து பிடித்துத் தள்ளியபோது பழிக்குபழி வாங்குவதாகச் சபதம் செய்தேன். பழி வாங்கியாகிவிட்டது! போய் வருகிறேன்," என்று சொல்லி விட்டு நடந்தான். ராகவன்திகைத்து உட்கார்ந்து விட்டான். சூரியாவின் கடைசி வார்த்தைகள் அவனுடைய உள்ளத்தில்கூரிய அம்புகளைப் போலத் தைத்தன. சூரியா கூறிய செய்திகளின் பலா பலன்களைப் பற்றியோசிக்கும் சக்தியே அவனுக்கு இல்லை. இந்த விஷயம் ஒன்றும் தாரிணிக்குத்தெரியக்கூடாதே என்ற கவலை மட்டும் அவனுடைய மனதில் தோன்றியது. சூரியா வீட்டு வாசலை அடைந்ததும் விடுவிடு என்று நடக்கத் தொடங்கினான். அவனுடைய நடையின் வேகம்அவனுடைய உள்ளப் பரபரப்புக்கும் அறிகுறியாக இருந்தது. "நான் சொன்னதில் அவ்வளவாகப்பொய் அதிகம் இல்லைதானே? சீதாவின் ஆவியைத்தான் இப்போது நான் பார்க்கப்போகிறேன். சௌந்தரராகவனைப் பொறுத்தவரையில் சீதா இறந்தவள் மாதிரிதானே?" என்றுஎண்ணமிட்டுக் கொண்டே நடந்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலை ஒசை - 4.33 ராகவன் கோபம் , சூரியா, ராகவன், நான், அவர், கோபம், என்றான், சீதாவின், இல்லை, யார், வேறு, துரைசாமி, என்ன, எங்கே, இப்போது, திடீரென்று, ராகவனுடைய, அவருடைய, எதற்காக, மௌல்வி, சீதா, கண்ணால், அவனுடைய, அந்த, நீங்கள், ஐயர், அந்தப், நானும், படகில், ஏற்பட்டது, நடந்தான், பார்த்தாய், இருந்தோம், மனம், ஒன்று, வேஷம், தகப்பனார், எனக்கு, தோன்றியது, மாமனார், முஸ்லிம், அவனுக்கு, உங்கள், ஒன்றும், புறப்பட்டான், உன்னுடைய, எழுந்து, இன்னும், போலிருக்கிறது, அவுட், கெட், குதித்து, உடனே, கல்கியின், அமரர், திடீர், சந்தேகம், மனதில், கொண்டே, எழுந்தான், போய், மூளை, வருகிறேன், பெரிய, தெரிந்து, கேட்டான், வேண்டும், என்பதுதான், சீதாவுக்கு, அப்படி, அவ்வளவு, காரணம், சீதாவும், பிறகு