அலை ஒசை - 4.20 அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி
"ஒருவேளை கல்கத்தா போன பிறகு உன்னுடைய கணவரின் மனம் மாறி உனக்குஏதாவது கடிதம் எழுதினால் உடனே எனக்குத் தெரியப்படுத்தக் கோருகிறேன். என்னுடைய டில்லி விலாசந்தான் உனக்குத் தெரியுமே? "கடைசியாக ஒரு விஷயம், நான் சொல்லப்போவதுஉனக்குப் பிடிக்காவிட்டால் மன்னித்துவிடு. பட்டாபிராமன் தேர்தல் சேற்றில் இறங்கியதும்எனக்குப் பிடிக்கவில்லை. அவனுக்காக நீ தேர்தல் வேலை செய்வதையும் நான் விரும்பவில்லை. கூடியவரையில் நீ வெளியில் கிளம்புவதை நிறுத்திக் கொள்வது நலம். உலகம் பொறாமைநிறைந்த பொல்லாத உலகம். தேவபட்டணமோ ரொம்பவும் சிற்றறிவு படைத்த மக்கள்நிறைந்தது. இதற்குமேல் நான் சொல்ல வேண்டியதில்லை." இதைப் படித்து முடித்ததும்சீதாவுக்கு வந்த துயரத்தையும் ஆத்திரத்தையும் சொல்ல முடியாது. உலகத்தின் பேரிலும் கடவுள்பேரிலும் கோபம் வந்தது. அதைக் காட்டிலும் தான் பெற்ற பெண்ணாகிய வஸந்தி கண்மணியின்பேரிலும் கோபம் வந்தது. அம்மா வேண்டியதில்லையென்று எண்ணித்தானே வஸந்தி அப்பாவுடன்கல்கத்தா போய்விட்டாள்? அவள் இனிமேல் எனக்குப் பெண் இல்லை என்று கூறும் வரைக்கும்சீதாவின் கோபம் வரம்பு மீறிப் பொங்கியது. இந்தச் சூரியா எனக்கும் அவருக்கும் நடுவில் மத்தியஸ்தம் செய்து வைக்கப் பார்த்தானாம்! இவன் யார் மத்தியஸ்தம் செய்வதற்கு? அவருக்கு மனைவி வேண்டும் என்ற எண்ணம் இல்லாவிட்டால் எனக்குப் புருஷன் வேண்டியதில்லை!அவ்வளவு அகங்காரமும் வைஷம்யமும் உள்ள புருஷனிடம் போய்ச் சேர்ந்து தான் என்ன பிரயோஜனம்? எவ்வளவு நாளைக்கு ஒத்து வாழ முடியும்? இத்தனை நாள் பிரிந்திருந்ததினால்அவருடைய உள்ளத்தில் எந்தவித மாறுதலும் ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது. நான் மட்டும்எதற்காகப் போய் அவர் காலில் விழுந்து சரணாகதி அடையவேண்டும்? வேண்டவே வேண்டாம்.
இந்தச் சூரியாவின் புத்தியைப் பார்! நான் தேர்தல் வேலையில் தலையிடுவதுஇவனுக்குப் பிடிக்கவில்லையாம்! எதற்காக இவனுக்குப் பிடிக்கவேண்டும்? அந்தத் தாரிணிஎன்ன செய்தாலும் சூரியாவுக்குப் பிடிக்கும்! அவள் ஆண் பிள்ளைகளைப் போல் வேஷ்டி கட்டிக்கொண்டு ஊரைச் சுற்றி வந்தாலும், 'அடாடா! என்ன தைரியம்!' என்பான். நான் எது செய்தாலும்அவனுக்குப் பிடிக்காது. எதற்காகப் பிடிக்க வேண்டும்? இவனுக்குப் பிடிக்கிற காரியத்தைச்செய்யத்தானா நான் பெண்ணாகப் பிறந்திருக்கிறேன்? நான் மேடையில் ஏறி நாலு வார்த்தை பேசினாலும் அதற்காகச் சந்தோஷப்பட்டு மெச்சுகிறவர்கள் இல்லாமற் போகவில்லை!அவர்களுடைய அன்பும் அபிமானமும் எனக்குப் போதும்!....இத்தகைய மனோபாவத்துடனேயேசீதா தனக்கு நேர்ந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் சகித்துக் கொண்டு மறுபடியும்வெளிப்படையாகக் குதூகலமாயிருக்கத் தொடங்கினாள். பட்டாபிராமனுடன் பார்ட்டிகளுக்கும்கூட்டங்களுக்கும் போகலானாள். சூரியாவினிடமிருந்து வந்த கடிதத்தை அவள் யாரிடமும்காட்டவில்லை. ஆயினும் சூரியா தன் குழந்தையை அழைத்து வராததின் காரணத்தை மட்டும்சொல்வது அவசியமாயிற்று. சௌந்தரராகவன் சீமையிலிருந்து திரும்பி வந்து வஸந்தியைஅழைத்துக் கொண்டு கல்கத்தா போய்விட்டதாகவும் அதனாலே தான் சூரியா குழந்தையைஅழைத்துக்கொண்டு வரவில்லையென்று லலிதாவிடம் கூறினாள். லலிதா மற்றதையெல்லாம்ஒருவாறு ஊகித்துக் கொண்டு முன்னைக் காட்டிலும் சீதாவை அதிக அபிமானத்துடன் நடத்தி வந்தாள்.
ஆனால் லலிதாவின் தாயாருக்கு விஷயம் தெரிந்த போது அவளுடைய வாய் சும்மாஇருக்கவில்லை. பட்டாபிராமனும் லலிதாவும் போட்ட வாய்ப்பூட்டு உத்தரவு சரஸ்வதிஅம்மாளிடம் செல்லவில்லை. எது எப்படியிருந்தாலும் பெண்ணாய்ப் பிறந்தவர்கள் புருஷனோடுபோய் இருக்க வேண்டிய அவசியத்தைப்பற்றி ஜாடைமாடையாகப் பேசிக் கொண்டிருந்தாள்.அது சீதாவுக்குப் தெரிந்தபோது அவளுக்கு லலிதாவின் பேரில் கோபம் வந்தது. தன்னைஅவமானப்படுத்துவதற்காகவே லலிதா தன் தாயாரை அழைத்துக் கொண்டு வந்து வீட்டில்வைத்திருப்பதாக நினைத்தாள். மாமி என்ன வேண்டுமானாலும் உளறட்டும்; லலிதா என்னவேணுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். பட்டாபிராமன் தன்னை இந்த வீட்டின் ராணியாக மதித்து மரியாதை செய்து கொண்டிருக்கிறான். அப்படியிருக்கும்போது தான் யாருக்கு பயப்படவேண்டும்? இப்படிச் சீதாவின் உள்ளத்தில் சண்டமாருதம் சுழன்று சுழன்று அடித்து அவளைஅப்படியும் இப்படியும் ஆட்டி வைத்துக் கொண்டிருக்க, நாட்கள் சென்று கொண்டிருந்தன.சேர்மன் தேர்தல் தினம் நெருங்கி வந்தபோது ஒன்றன் பின் ஒன்றாகச் சீதாவுக்குப் பலஅதிர்ச்சிகள் ஏற்பட்டு அவளைக் கதிகலங்கச் செய்தன. டில்லியிலிருந்து கடிதம் வந்தது, சூரியாஎழுதியிருந்தான். "தாரிணியிடம் கலந்து ஆலோசித்தேன், உனக்கும் உன் புருஷனுக்கும்மத்தியில் மற்றவர்கள் தலையிடுவதால் தீமைதான் விளையும் என்று தாரிணிஅபிப்பிராயப்படுகிறாள். நீயே கல்கத்தாவுக்குச் சென்று அவரிடம் மனம் விட்டுப் பேசி விடுவதுதான் நல்லது என்று கருதுகிறாள். அத்தங்கா! முன்னொரு சமயம் நீ இப்படிச் செய்வதென்றுதீர்மானித்திருந்தாய். உன் கணவரிடம் போய், 'போனதெல்லாம் போகட்டும்; இனிப் புதிய வாழ்க்கை தொடங்குவோம்' என்று சொல்லிக் கொள்ள எண்ணியிருந்தாய். யாரும் எதிர்பாராதகாரணத்தினால் அது தடைபட்டு விட்டது. அந்தத் தீர்மானத்தை இப்போது ஏன் நிறைவேற்றக்கூடாது?
நீ உடனே கல்கத்தாவுக்குப் புறப்பட்டுப் போவதுதான் நல்லது என்று எனக்கும்தோன்றுகின்றது. இங்கே புது டில்லியில் மாஜி திவானுடைய குமாரிகள் இருவர்கள் இருந்தார்களே, ஞாபகம் இருக்கிறதா? அவர்கள் கல்கத்தாவுக்குப் போயிருப்பதாகஅறிகிறேன். இதனால் என்னுடைய கவலை அதிகமாயிருக்கிறது. இந்த நிலைமையில் நீகல்கத்தாவுக்கு உடனே புறப்படுவது நல்லதல்லவா?" இதைப் படித்ததும் எரிகிற தீயில்எண்ணெய் விட்டது போலாயிற்று சீதாவுக்கு. "அப்படியா சமாசாரம்? அவர் 'வா' என்றுகூடஅழைக்காமல் நானாகப் போய் அவர் காலில் விழ வேண்டுமா? முடியவே முடியாது! அவர் எந்தப்பேய் பிசாசை வேண்டுமானாலும் கட்டிக் கொண்டு அழட்டும்! எனக்கு என்ன வந்தது? நான்மேடை மீதேறினால் கண் கொட்டாமல் என்னைப் பார்த்து நான் சொல்லும் வார்தையைப்பயபக்தியுடன் கேட்பதற்கு ஆயிரம் பதினாயிரம் பேர் காத்திருக்கிறார்கள். புது டில்லியில்ஒன்றும் அறியாத பெண்ணாயிருந்த பழைய சீதா அல்ல நான்! ஒருவர் காலிலும் போய் விழுந்துகெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை எனக்கு!"..... சேர்மன் தேர்தல் நடந்த தினத்தன்றுசீதாவுக்கு இரு கடிதங்கள் வந்தன. அவற்றில் ஒன்று கல்கத்தாவிலிருந்து வந்திருந்தது. பின்வருமாறு சித்ரா எழுதியிருந்தாள்:- "என் அருமை சிநேகிதியே! உன்னை எவ்வளவோ புத்திசாலி என்று நான் நினைத்திருந்தேனே! இது என்ன பைத்தியக்காரத்தனம்! உன் கணவர் இங்கே எங்களுக்கு எதிர் வீட்டு மச்சிலேதான் இருக்கிறார். காலையிலும் மாலையிலும் அவர் ஜன்னல் ஓரமாக வந்து உட்கார்ந்து பிரமை பிடித்தவர் போல் இருப்பதைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது. என் கணவர் அவரைச் சிரமப்பட்டுச் சிநேகம் செய்து கொண்டிருக்கிறார். இரண்டொரு நாள் நானும் இவருடன் போய் உன் குழந்தையைப் பார்த்துவிட்டு வந்தேன். என்னஅதிசயமான குழந்தையடி அது? அப்படிப்பட்ட அருமைக் குழந்தையை நீ என்னமாக விட்டுப்பிரிந்திருக்கிறாய்?
"ஒரு நாள் வஸந்தி எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். என் வாய் சும்மாஇருக்கக்கூடாதா! 'உன் அம்மா எப்போ வரப் போகிறாள்?' என்று கேட்டு விட்டேன். 'எங்கஅம்மா வரவே மாட்டாள்' என்றாள் குழந்தை. 'ஏன்?' என்றேன். 'எங்க அம்மாவுக்கு அப்பாவைக்கண்டால் பிடிக்காது' என்றாள். 'உனக்கு யாரைப் பிடிக்கும்?' என்று கேட்டேன். 'எனக்குஅப்பாவையும் பிடிக்கும்; அம்மாவையும் பிடிக்கும்' என்றாள். 'அப்படியானால் நீ அப்பாவோடேயே இருக்கிறாயே? அம்மாவைப் பார்க்க ஆசையாக இல்லையா?' என்றேன். 'ஆசையாகத்தான் இருக்கிறது; அதற்கு என்ன செய்கிறது? எங்க அப்பா தனியாக இருக்கிறாரே? அவரை விட்டு விட்டு எப்படிப் போகிறது?' என்றாள் சீதா! இந்தக் குழந்தையைப் பெற்ற தாய் நீதானே? குழந்தைக்கு இருக்கும் ஈவிரக்கத்தில் பத்தில் ஒன்றாவது உனக்கு இராமற் போய்விடுமா?"இரண்டு நாளைக்கு முன்னால் உன் கணவர் உன்னைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பதை இவர் தெரிந்து கொண்டார். சில நாளாக இரண்டு அதி நாகரிகப்பெண்மணிகள் எதிர் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். வெகு நேரம் உன் கணவரிடம்பேசிவிட்டுப் போகிறார்கள். என் கணவருக்கு இது கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. ஒரு நாள்'அந்தப் பெண்கள் யார்?' என்று கேட்டாராம். 'டில்லியில் எனக்குத் தெரிந்தவர்கள்!' என்றாராம்.'ரொம்ப நெருங்கிய சிநேகிதம் போலிருக்கிறது!' என்று இவர் கேட்டாராம். 'இன்னும் ரொம்பநெருங்கிய சிநேகமாக வேணும் என்று பார்க்கிறார்கள். என்னைக் கலியாண வலையில்சிக்கவைக்கப் பிரயத்தனப்படுகிறார்கள்!' என்றாராம். அவருடைய மனதை இன்னும் நன்றாய்அறிவதற்காக இவர், 'நீங்களும் எத்தனை காலம் தனியாக வாழ்க்கை நடத்த முடியும்? இரண்டுபேரில் ஒருவரைக் கலியாணம் செய்து கொள்வது தானே?' என்று கேட்டதற்கு உன் கணவர்என்ன பதில் சொன்னார், தெரியுமா? 'தெய்வம் இருந்த கோயிலில் பிசாசைக் குடியேற்றச்சொல்கிறீர்களா?' என்றாராம்.
"என் அருமை சிநேகிதியே! உன்னை உன் கணவர் 'தெய்வம்' என்று வாய் திறந்துசொல்லியிருக்கிறார். நீ எங்கேயோ போய் உட்கார்ந்திருக்கிறாய். இந்த வெட்கக்கேட்டைநான் என்னவென்று சொல்வது? "அதெல்லாம் போகட்டும் நேற்று முதல் வஸந்திக்குச் சுரம்அடிக்கிறதாம். குழந்தை தூக்கத்தில் 'அம்மா வரமாட்டாள்' என்று பிதற்றுகிறாளாம். உன் மனதில்கொஞ்சமாவது ஈரம் என்பது இருந்தால் உடனே புறப்பட்டு வந்து சேரு!" இந்தக் கடிதம்சீதாவைக் கலங்க வைத்து விட்டதில் ஆச்சரியம் இல்லையல்லவா? சித்ராஎழுதியிருப்பதெல்லாம் உண்மையாயிருக்குமா? அல்லது என்னை வரவழைப்பதற்காகக் கற்பனைசெய்து எழுதியிருக்கிறாளா? அவர் தன்னைத் 'தெய்வம்' என்று குறிப்பிட்டது நிஜமா?அப்படியானால் 'உடனே புறப்பட்டு வா!' என்று ஒரு வரி ஏன் எழுதிப் போடக் கூடாது? குழந்தைக்குச் சுரம் என்பதும் பொய்தானோ, என்னமோ? ஒருவேளை உண்மையாக இருந்து விட்டால்?.... கடவுளே! என் குழந்தையைக் காப்பாற்று! நான் செய்திருக்கும் பாவங்களுக் காகஎனக்கு என்ன தண்டனை விதித்தாலும் ஏற்றுக் கொள்கிறேன். என் குழந்தைக்கு ஒன்றும்நேராமல் இருக்கட்டும். சித்ரா எழுதியிருப்பது உண்மையானாலும் கற்பனையானாலும் உடனே புறப்பட்டுப் போக வேண்டியது தான். இனிமேல் தாமதிக்கக் கூடாது, இன்றிரவே லலிதாவிடமும் பட்டாபிராமனிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட வேண்டியதுதான். இவ்விதம்எண்ணிக்கொண்டே சீதா தன் பெயருக்கு வந்திருந்த இன்னொரு உறையைப் பிரித்தாள்.அதற்குள்ளே அச்சடித்த பத்திரிகைத் துண்டு ஒன்று இருந்தது. இரண்டு நாளைக்கு முன்பு லலிதாவுக்கு வந்த அதே பத்திரிகைத் துணுக்குத் தான். லலிதா மட்டும் அதைப் பார்த்து சீதா பாராமல் இருந்துவிடப் போகிறாளே என்ற கவலையினால் யாரோ ஒரு புண்ணியவான் கர்மசிரத்தையாக அதைச் சீதாவுக்கும் அனுப்பி வைத்திருந்தான்! அந்தப் பத்திரிகைத் துணுக்கைப்படித்த போது சீதாவுக்கு கண்கள் இரண்டும் பற்றி எரிவது போலத் தோன்றியது. அவமானம்பொறுக்க முடியவில்லை. பூமி பிளந்து அதற்குள்ளே தான் போய்விடக் கூடாதா? அந்த மாதிரி பாக்கியம் ஜனக மகாராஜனுடைய புத்திரியாகிய சீதா தேவிக்குக் கிடைத்தது. மகாபாவியாகியதனக்கு அந்தப் பாக்கியம் எங்கே கிடைக்கப் போகிறது?
சொல்ல முடியாத, சகிக்க முடியாத அவமானத்தினால் சிறிது நேரம் பிரமை பிடித்திருந்த பிறகு கொஞ்சங் கொஞ்சமாகச் சீதாவுக்குச் சுய உணர்வு வந்து சிந்தனா சக்திஏற்பட்டது. இரண்டு நாளாக லலிதாவின் நடத்தையில் ஏற்பட்டிருந்த மாறுதலுக்கு இதுதான்காரணமோ? இந்த மாதிரி ஒரு விஷயம் வந்திருப்பதைப் படித்த பிறகும் லலிதா தன்னை இந்த வீட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தாளா? அப்படியானால் அவள்தான் சீதை, சாவித்திரி,தமயந்தி எல்லாரும்! அவளுடைய முகத்தில் தான் இனி விழிக்க முடியாது. பட்டாபிராமனையும்ஏறெடுத்துப் பார்க்க முடியாது. அவர்களிடம் சொல்லிக் கொள்ளாமலே கிளம்பிட வேண்டியதுதான்; இரவில் எல்லாரும் படுத்துத் தூங்கியான பிறகு! தான் செய்ய வேண்டியதைப் பற்றிச்சீதாவுக்குச் ஏதாவது கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும், அன்றிரவு பத்து மணிக்கு மேல்கீழ்க்கட்டில் நடந்த ரகளையினால் அது தீர்ந்து போய்விட்டது. அது சின்ன வீடு, லலிதாவுக்கும்பட்டாபிராமனுக்கும் படுக்கையறையில் நடந்த சம்பாஷணையோ உரத்த சத்தத்தில்நடைபெற்றது. அதில் பாதிக்குமேல் சீதாவின் காதில் விழுந்து அவளை இந்த உலகத்திலேயேநரக வேதனைக்கு உள்ளாக்கியது. புருஷனும் மனைவியும் எப்போது தூங்கப் போகிறார்கள்என்று சீதா காத்திருந்தாள். பேச்சுக் குரல் அடங்கி ஒரு மணி நேரத்துக்குப் புறப்படஎண்ணினாள். அதுவரையில் படுக்கையிலே குப்புறப் படுத்துக்கொண்டு தான் பெண்ணாய் பிறந்தது முதல் நாளது வரையில் அநுபவித்த துன்பங்களையெல்லாம் ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்த்துக் கொண்டாள். உலகத்தில் எத்தனையோ பெண்கள் பிறந்து வாழ்கிறார்களே?அவர்களில் யாராவது தன்னைப் போலக் கஷ்டப்பட்டதுண்டா? தன்னை மட்டும் கடவுள் ஏன் இப்படிச் சோதனை செய்கிறார்? ஏதோ ஒரு தமிழ் சினிமாவில் கதாநாயகி 'பேதையாய்ப் பிறந்தநாளாய்' என்று பாடியிருப்பது சீதாவுக்கு நினைவு வந்தது. அந்தச் சோகக் கட்டத்துப் பாட்டுஅவள் துயரத்தை அதிகமாக்கிற்று. அவளை அறியாமல் விம்மல் வந்தது. கீழே இருப்பவர்களுக்குக் கேட்காமலிருக்க வேண்டுமே என்ற நினைவினால் விம்மலை அடக்கப் பார்த்தாள். எவ்வளவு முயன்றாலும் அடக்க முடியவில்லை. குப்புறப் படுத்துக் கொண்டிருந்தால் இப்படித்தான் விம்மல் வந்து கொண்டிருக்கும் என்று எழுந்து பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட யத்தனித்தாள்.
இந்தச் சமயத்தில் மச்சுப்படியில் யாரோ ஏறிவரும் காலடிச் சத்தம் கேட்டது. ஏதோஒரு விபரீதம் மாடி ஏறி வருகிறது என்று அவள் உள் உணர்வுக்குத் தோன்றி நெஞ்சு பதைபதைத்தது. அறையின் கதவு திறந்தது, வந்தவன் பட்டாபிராமன்தான் என்று மனதுக்குத்தெரிந்துவிட்டது. ஐயோ! இவன் எதற்காக இங்கே, இந்த வேளையில் தனியாக வருகிறான்!தன்னைக் கொலை செய்வதற்கு வருகிறானா? இல்லையென்றால் தன்னுடைய ஆத்மாவைக்கொலை செய்வதற்கு வருகிறானா? இவனை எப்படித் திரும்பிப் போகச் செய்வது? குப்புறப்படுத்தவண்ணம் தூங்குவதுபோல் அசையாம லிருக்கலாம். தூங்குவதாக எண்ணிக்கொண்டுஒருவேளை திரும்பிப் போய்விடமாட்டானா? சீதாவின் ஆசை நிராசையாயிற்று. அவள் தூங்குகிறாள் என்று நினைத்துக் கொண்டு பட்டாபிராமன் திரும்பிப் போகவில்லை; உள்ளே வந்தான். அவள் அருகிலும் வந்தான், வந்து அவள் தோள்களைத் தொட்டு மெதுவான குரலில்,"சீதா" என்றான். சீதா தள்ளி எழுந்து அவன் கைகளை உதறித் தள்ளிவிட்டு உட்கார்ந்தாள்."பயப்படாதே, சீதா! நான்தான்!" என்றான் பட்டாபிராமன். பிறகு அவன் ஏதேதோ சொன்னான்.சீதா கேட்டுக் கொண்டேயிருந்தாள். முதலில் அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. கொஞ்சம்கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது. ஆகா! அந்தப் பத்திரிகையிலே யாரோ எழுதியிருந்ததுசரியாய்ப் போய் விட்டது! இவன் தன்னிடம் காதலை வெளியிடுகிறான். தனக்காக, என்னதியாகம் வேண்டுமானாலும் செய்கிறேன் என்கிறான். தனக்காக வீடு வாசலையும் சேர்மன்வேலையையும் விட்டுவிட்டு இலங்கைக்கோ ஆப்பிரிக்காவுக்கோ அந்தமான் தீவுக்கோ வரத்தயாராயிருக்கிறானாம்! தன்னுடைய விம்மல் சத்தம் இவனுடைய இதயத்தைப் பிளந்து விட்டதாம். இவனுடைய மனைவியும் மாமியாரும் செய்த அநீதிகளுக்கெல்லாம் பரிகாரம் செய்து விடுவானாம்! வாயைத் திறந்து 'சரி' என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதுமாம்!கடவுளே! இவனுடைய மூளை இப்படியா பிசகிப் போக வேண்டும்; புருஷர்கள் எல்லோருமே இப்படித்தான் இருப்பார்களோ? இவனை எப்படி இங்கிருந்து அனுப்புவது? என்ன வார்த்தைசொன்னால் போவான்? இவனுடைய பேச்சுக் குரலை கேட்டு லலிதா எழுந்து வராமலிருக்கவேண்டுமே? வந்தால் எவ்வளவு அவமானமாயும் விபரீதமாயும் முடியும்? ஐயோ! இவன் எதற்காகத்தன் முகவாய்க் கட்டையைத் தொடுகிறான்? தொட்டுக் கொண்டு என்னமோ உளறுகிறானே?...
அறைக் கதவு மறுபடி திறந்தது. லலிதா வந்து வாசற்படியில் ரௌத்ராகாரமாக நின்றாள்.சீதாவுக்குச் சப்த நாடியும் விட்டது. கொஞ்ச நஞ்சமிருந்த சிந்தனா சக்தியும் போய்விட்டது. மனது ஒன்றையும் நினைக்க முடியவில்லை. உடம்பையும் அவளால் அசைக்க முடியவில்லை.ஆனால் காது தீக்ஷண்யமாயிருந்தது. நெருப்பைக் கக்கிக்கொண்டு வரும் அக்கினிஅஸ்திரங்களைப் போல் லலிதா கூறிய கொடிய மொழிகள் காதில் விழுந்தன. "அடிபாவி!சண்டாளி! இப்படியா எனக்குத் துரோகம் செய்வாய்? 'பாம்பை வீட்டிலே வைத்துப் பால் வார்க்கிறாயே?' என்று அம்மா சொன்னாளே? அவள் வாக்கு உண்மையாகி விட்டதே! உன்னை இதற்காகவா இங்கே அழைத்து வந்தேன்? என் குடியைக் கெடுத்து விட்டாயே? அடி, குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! அன்றைக்கு என்னைப் பெண் பார்க்க வந்தவனைக் குறுக்கே நின்று மறித்துக் கலியாணம் செய்து கொண்டாய், அதற்காக நான்சந்தோஷப்பட்டேன். அவனோடு வாழத் தெரியாமல் ஓடிவந்தாய், அப்படியும் எனக்குப் புத்தி வரவில்லை. உன்னை மறுபடியும் என் வீட்டுக்கு அழைத்து வந்து சீராட்டித் தாலாட்டினேன். என்கழுத்துக்கே கத்தி வைத்துவிட்டாய்! நீ நன்றாயிருப்பாயா? ஆனால் உன்னைச் சொல்லி என்ன பிரயோஜனம்? இந்தப் பாவி இப்படிப்பட்ட கள்ளத்தனம் செய்யும் கிராதகனாக இருக்கும்போது நீ என்ன செய்வாய்? உன்னைச் சொல்லி உபயோகமில்லை. இந்தச் சண்டாளனைத்தேடிப் பிடித்து என்னைக் கொண்டு வந்து தள்ளினார்களே, அவர்களைச் சொல்ல வேண்டும்....!"இத்தனை நேரமும் பேச முடியாமல் திகைத்திருந்த பட்டாபிராமன் இப்போது துள்ளிப் பாய்ந்து,"லலிதா! வாயை மூடு ஜாக்கிரதை!" என்றான். "என்னங்காணும் அதட்டுகிறீர்! செய்கிறதையும்செய்து விட்டு இது வேறேயா?
எத்தனை நாளாக உம்முடைய லீலைகளை நடத்தி வருகிறீர்! அந்தப் பத்திரிகையில்எழுதியிருந்ததற்கு மட்டும் பொத்துக்கொண்டு வந்துவிட்டதே! நான் அந்தப் பத்திரிகையைத்தொட்டதற்காக ஆத்திரம் பொங்கி வந்ததே! அதில் எழுதியிருந்ததெல்லாம் உண்மைதானே!என் கைப்பட நானே அந்தப் பத்திரிகைக்குக் கடிதம் எழுதுகிறேன். இதோ தெரு வாசலுக்குச்சென்று கூச்சலிட்டு ஊரைக் கூட்டுகிறேன்.பட்டாபிராமனுக்கு ஒரு நொடியில்என்னவெல்லாமோ பயங்கரமான எண்ணங்கள் உதித்து மறைந்தன. "லலிதா! வாயைமூடுகிறாயா, இல்லையா? மூடாவிட்டால் இதோ உன்னைக் கொன்றுவிடுவேன்!" என்றுசொல்லிக் கொண்டே அருகில் இரண்டடி எடுத்து வைத்தான். "கொன்று விடுங்கள்! பேஷாகக்கொன்று விடுங்கள்! உம்! ஏன் கொல்லாமல் சும்மா நிற்கிறேள்?" என்று லலிதா கூச்சலிட, பட்டாபிராமன் விகாரமான முகத் தோற்றத்துடன் கையைப் பயங்கரமாக ஆட்டிக் கொண்டு வந்து லலிதாவை நெருங்கி அவளுடைய கழுத்தில் கையை வைத்தான். கழுத்தில் அவன் கை பட்டதோ இல்லையோ, லலிதா, "ஐயோ! அம்மா! என்னைக் கொல்லுகிறார்களே! உன் மாப்பிள்ளையும் சீதாவும் சேர்ந்து மென்னியைப் பிடித்துக் கொல்லுகிறார்களே!" என்று பயங்கரமாய்க் கூவிக் கொண்டே கீழே தடால் என்று விழுந்தாள். அவளுடைய உதடுகளும் கைகால்களும் பயங்கரமாகவும் கோணல் மாணலாகவும் இழுத்தன. கண்கள் செருகிக் கறுப்பு விழி மறைந்து வெள்ளை விழி மட்டும் தெரிந்தது, வாயிலிருந்து நுரை வந்தது. தொண்டையிலிருந்துகளகளவென்று ஒரு சத்தம் உண்டாகிப் பயங்கரத்தை அதிகப்படுத்தியது. பட்டாபிராமன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து தன் இரண்டு கைகளாலும் லலிதாவைத் தூக்கி எடுத்துக் கொண்டான்.அச்சமயம் அவனுடைய மாமியார் குறுக்கே வந்து, "என் பெண்ணை ஒருவரும் தொட வேண்டாம்அவளைக் கீழே விடும்!" என்றாள். "ஏ மூதேவி! விலகிப் போ!" என்று சொல்லிக் கொண்டே மாமியாரை ஒரு இடி இடித்து அப்பாற்படுத்திவிட்டுப் பட்டாபிராமன் கீழே சென்றான். கட்டிலில்கொண்டு போய் லலிதாவைக் கிடத்தி அவள் முகத்தில் தண்ணீரை விசிறித் தெளித்துச் சிகிச்சைசெய்யத் தொடங்கினான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலை ஒசை - 4.20 அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி , நான், வந்து, கொண்டு, என்ன, சீதா, லலிதா, தான், அவள், வந்தது, பட்டாபிராமன், போய், வேண்டும், செய்து, அந்தப், உடனே, அதிர்ச்சி, சூரியா, அவர், அம்மா, கணவர், இரண்டு, வந்த, தேர்தல், என்றாள், எனக்குப், இவன், சொல்ல, முடியவில்லை, பிறகு, கோபம், இந்தச், மட்டும், நாள், கீழே, பிடிக்கும், முடியாது, எனக்குத், இங்கே, விட்டது, உன்னை, திரும்பி, சீதாவுக்கு, சொல்லிக், இவனுடைய, போல், விட்டு, யாரோ, தன்னை, இவர், வீட்டுக்கு, வேண்டுமானாலும், முடியும், அப்படியானால், பார்க்க, தனியாக, நாளாக, நடந்த, தெய்வம், எவ்வளவு, அதிர்ச்சிக்குமேல், சீதாவின், லலிதாவின், அழைத்து, அவளுடைய, என்றாராம், வாய், என்னைக், பத்திரிகைத், இப்படிச், நாளைக்கு, இல்லை, என்னுடைய, கடிதம், விஷயம், எழுந்து, சத்தம், என்றான், அவன், மனம், பற்றி, படித்ததும், கொண்டே, சொல்லி, தன்னுடைய, விம்மல், இனிமேல், வஸந்தி, செய்வதற்கு, பெண்கள், குறுக்கே, உன்னைச், நேரம், பாய்ந்து, கேட்டாராம், இன்னும், கலியாணம், எத்தனை, இப்படியா, மனைவியும், செய்வாய், அவளை, காதில், அதில், இல்லையா, கொல்லுகிறார்களே, விழி, கழுத்தில், விடுங்கள், வைத்தான், தனக்காக, குழந்தைக்கு, இந்தக், போகிறது, வீடு, முகத்தில், பேச்சுக், கண்கள், சீதாவுக்குச், திறந்தது, வருகிறானா, கதவு, குப்புறப், முடியாத, மாதிரி, பிளந்து, இப்படித்தான், எடுத்துக், இவனை, திரும்பிப், என்னமோ, எல்லாரும், கூடாது, புறப்பட்டு, பாக்கியம், கடவுளே, புறப்பட, சிந்தனா, அதற்குள்ளே, வந்தான், உனக்கு, வேண்டியதுதான், போய்விட்டது, சேர்மன், இதைப், காட்டிலும், பெற்ற, வேண்டியதில்லை, உலகம், கல்கத்தா, பிடிக்கவில்லை, கொள்வது, பெண், மத்தியஸ்தம், காலில், விழுந்து, எதற்காக, உள்ளத்தில், இத்தனை, யார், சேர்ந்து, பிரயோஜனம், ஒருவேளை, எழுதுகிறேன், அந்த, தீர்ந்து, தோன்றியது, எழுதியிருந்ததைப், போய்ச், அமரர், கல்கியின், ஏற்பட்டது, தனக்கு, நேர்ந்த, எவ்வளவோ, சிநேகம், இங்கிருந்து, வைக்க, அவரிடம், பின்வருமாறு, அத்தங்கா, இவனுக்குப், அந்தத், பார்த்து, ஒன்று, சித்ரா, என்னைப், எனக்கு, புறப்பட்டுப், புது, டில்லியில், அருமை, சிநேகிதியே, கேட்டு, குழந்தை, என்றேன், வந்தேன், குழந்தையைப், எதிர், பிரமை, கல்கத்தாவுக்குப், இப்போது, போது, வேண்டிய, சீதாவுக்குப், நடத்தி, குழந்தையை, பிடிக்காது, வார்த்தை, போகவில்லை, அவளுக்கு, நினைத்துக், நல்லது, போகட்டும், வாழ்க்கை, நெருங்கி, சென்று, சுழன்று, வைத்துக், எங்க