வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 97
“மத்ரர்களிடத்தில் இதுவரையில் அவ்விதம் இல்லை. மல்லர்களிடத்தும் குடி கொள்ளவில்லை; எதிர்காலத்தைப் பற்றி நிர்யணமாகச் சொல்ல முடியாது. எங்கள் பகுதியில் ஆரியரல்லாதார் பெரும்பாலும் வனங்களிலேயே வசிக்கிறார்கள்.”
இருவரும் இவ்விதமாக இருள் சூழ்ந்த பின்பும் வெகு நேரம் சம்பாஷித்துக் கொண்டிருந்தனர். அந்தக் கட்டிடத்து நிர்வாகி இவர்களிடம் போஜனத்தைப் பற்றி ஞாபகப்படுத்தவில்லையானால், இவர்களுடைய சம்பாஷணை இப்பொழுது முடிவடைந்திராது. இந்தக் கட்டிடம், யாத்ரீகர் தங்குவதற்காகக் கிராமத்தார்களால் கட்டப்பட்டது. யாத்ரீகர் என்றால் ஆரியர்கள் மட்டும் தான் என்பதை நாம் குறிப்பிட வேண்டியதில்லை. இரவு
தங்குவதற்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன; யாத்ரீகர்களில் யாரிடம் உணவுப் பொருள் இல்லையோ, அவர்களுக்கு அகதிச் சாலையிலிருந்து மாவும், பசு மாமிசச் சூப்பும் கொடுக்கப்படுகிறது. உணவுப் பொருள்கள் அல்லது பதிலுக்குச் சாமான் கொடுத்தால் யாத்ரா விடுதியின் நிர்வாகி சமைத்துக் கொடுப்பார். மது வகைக்கு இந்த யாத்ரா விடுதி மிகவும் பிரசித்தமானது. நண்பர்கள் இருவரும் நெருப்பிலே சுடப்பட்ட பசு மாமிசம், மது இவற்றைப் புசித்தும்-அருந்தியும் தங்களது நட்பைப் பலப்படுத்திக் கொண்டனர்.
2
ஞானி அங்கிரா சிந்துநதிக்குக் கிழக்குப் பிரதேசவாசிகளான காந்தார சமூகத்தில், சமூகத் தலைமைப் பதவி வரை வகித்தவர். புஷ்கலாவதி நகரம் ஆரியர்களால் வெற்றி கொள்ளப்பட்ட பிறகு அசுரர்கள் அங்கிருந்து பின் வாங்கத் தொடங்கினார்கள் என்றாலும், அடுத்த தலை முறையில் குனார் பிரதேசத்திலிருந்து வந்த ஆரியர்கள் மேற்குக் காந்தாரத்தை ஜெயித்த பிறகு தான், உயிர் தப்பிய அசுரர்கள் எல்லோரும் காந்தாரப் பிரதேசத்தை முற்றிலும் காலி செய்துவிட்டு வெளியேறினார்கள். அவர்கள் வெளியேறிய முப்பது வருடங்களுக்குப் பிறகு குனார் ஆரியர்களுக்கும், மத்ரர்களுக்கும் இடையே சிந்து நதிக்குக் கிழக்கிலுள்ள காந்தாரப் பிரதேசத்தில், ஒரு பெரும் போர் நடந்தது. முடிவில் சிந்து நதியிலிருந்து ஜீலம் நதி வரை உள்ள பிரதேசம் குனார் காந்தாரர்களுக்கும் ஜீலம் நதியிலிருந்து ராவி நதி வரையுள்ள பிரதேசம் மத்ரர்களுக்குமாகப் பிரித்துக் கொண்டார்கள். பின்னால் கிழக்குக் காந்தார மத்ர சமூகம் என்ற பெயரால், இவர்கள் பிரபலமடைந்தார்கள்.
அசுரர்களுக்கும், ஆரியர்களுக்கும் மூண்ட ஆரம்ப யுத்தத்தில், இருதரப்பாரும் மனிதத் தன்மையற்ற முறையில் குரூரமாக நடந்து கொண்டனர். இதன் விளைவாக, காந்தாரப் பிரதேசத்தில் அசுரர்களுடைய பூண்டே அற்றுப் போய்விட்டது. ஆனால் மத்ரப் பிரதேசத்தில், ஒரு சில அசுரர்கள் தப்பிப் பிழைத்திருந்தார்கள். நாட்கள் செல்லச் செல்ல இருதரப்பிலும் பழிவாங்கும் மனப்பான்மையும் குறைந்து கொண்டே வந்துவிட்டது. ஆரியர்களும் தங்கள்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 97, புத்தகங்கள், குனார், பக்கம், அசுரர்கள், பிறகு, காந்தாரப், பிரதேசத்தில், கங்கை, வால்காவிலிருந்து, பிரதேசம், முறையில், ஜீலம், சிந்து, ஆரியர்களுக்கும், நதியிலிருந்து, காந்தார, உணவுப், பற்றி, அசுரர்களுடைய, பகுதியில், சிறந்த, இருவரும், நிர்வாகி, யாத்ரா, தான், ஆரியர்கள், யாத்ரீகர், கொண்டனர்