வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 90
“ஆம், மத்ரப் பிரதேசத்திலிருந்து வருகிறேன். நீ தெற்கிலிருந்தா வருகிறாய்? நண்ப! தெற்கே ஆரியர்களோடு அசுரர்கள் இன்னும் யுத்தம் செய்கிறார்களென்று கேள்விப்பட்டேன். உண்மைதானா?”
“சமுத்திரக் கரையில் உள்ள அவர்களது ஒரே ஒரு நகரந்தான் மிஞ்சியிருக்கிறது. மற்றவையெல்லாம் விழுந்து விட்டன நண்ப! நம்முடைய பாரத இந்திரன் எவ்வளவு பராக்கிரமசாலி! அசுரர்களுடைய நூற்றுக்கணக்கான நகரக் கோட்டைகளை நொறுக்கி விட்டான்!”
“அசுர நகரக் கோட்டைகள் செம்பினால் கட்டப்பட்டவை என்று சொல்கிறார்களே, உண்மையா?”
“அசுரர்களிடத்தில், செம்பு முதலிய உலோகங்கள் அதிகமாகவே இருக்கின்றன. ஆனால் கோட்டை கட்டுவதற்கு வேண்டிய அவ்வளவு செம்பு அவர்களிடம் இருக்க முடியாது. இந்த மாதிரிக் கதைகள் எவ்விதம் பரவுகின்றன என்பது எனக்குப் புரியவில்லை. அவர்களுடைய வீடு கட்டும் செங்கல்கள் மண்ணால் செய்து, நெருப்பிலே வேக வைக்கப்பட்டவை. அவற்றின் அகல-உயரம் சமமாகவும் நீளம் அதிகமாகவும் இருக்கும். அதே செங்கற்களைக் கொண்டே அவர்கள் நகரத்தைச் சுற்றிலும் கனத்த சுவர் எழுப்பிக் கோட்டை கட்டியிருக்கிறார்கள். அந்தச் செங்கற்களும் சிவப்பு நிறத்தவைதான். ஆயினும், தாமிரத்திற்கும் அதற்கும் நிறத்தில் அதிக வித்தியாசம் இருக்கிறது.”
“நண்ப வருண! அசுரர்களின் செம்புக் கோட்டைகளைப் பற்றி நாங்கள் நீண்ட நாட்களாகக் கேள்விப்பட்டு வருகிறோம்.”
“இருக்கலாம். அந்த நகரங்களையும், கோட்டைகளையும் இடிப்பதற்கு நம்முடைய இந்திரன் எவ்வளவு சக்தியைச் செலவிட வேண்டியிருந்தது. அதைக் கருதியே இந்த மாதிரிக் கதைகள் பரவியிருக்கலாம்.”
“ஸம்பரனுடைய பராக்கிரமத்தைப் பற்றியும் பல கதைகள் சொல்கிறார்களே! சமுத்திரத்தில் அவனுக்குக் கோட்டையிருந்ததாம். அவனுடைய ரதம் ஆகாயத்திலுங் கூடப் பறக்குமாம். இவையெல்லாம் உண்மையா?”
“ரதம் ஆகாயத்தில் பறந்ததென்பது முழுப் பொய். யுத்தக் கலையில்
அசுரர்கள் ஒரே ஓர் அம்சத்தில் மட்டுமே பலவீனர்களாயிருந்தார்கள். அதுதான் குதிரையேற்றம். இப்பொழுதுங்கூட உற்சவ காலங்களில் குதிரை ரதத்திற்குப் பதிலாக ரிஷப ரதத்தையே அவர்கள் உபயோகிப்பார்கள். நமக்குக் குதிரையேற்றம் தெரிந்திருப்பதாலேயே அவர்களை வெற்றி கொள்ள முடிந்தது. இல்லையேல் பலம் பொருந்திய கோட்டை கொத்தளங்களுடன் கூடிய அசுர நகரங்களை நாம் ஜெயித்திருக்கவே முடியாது. ஸம்பரன் இறந்து இப்பொழுது இருநூறு வருடங்கள் ஆகிவிட்டன. அவனிடத்தில் குதிரை பூட்டிய ரதங்கள்கூட இருந்திருக்க முடியாதென்றே நான் நினைக்கிறேன். ஆகாயத்தில் பறக்கும் ரதத்திற்கு அவன் எங்கே போவான்?”
“ஸம்பரன் இவ்வளவு சாதாரண எதிரியாயிருந்தால் அவனை ஜெயித்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 90, புத்தகங்கள், கோட்டை, கதைகள், கங்கை, வால்காவிலிருந்து, பக்கம், செம்பு, முடியாது, ஆகாயத்தில், குதிரை, குதிரையேற்றம், உண்மையா, மாதிரிக், எவ்வளவு, நண்ப, வருகிறாய், சிறந்த, அசுரர்கள், நம்முடைய, நகரக், இந்திரன், சொல்கிறார்களே