வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 41
“சாம்பு.”
“உன் பெயர் நண்ப?”
“துருவராஸ்வ, ரோசனா... சூனு.”
“ரோசனா-சூனு! என்னுடைய தாயின் பெயரும் ரோசனா தான். அவசரமில்லையானால், இங்கே கொஞ்சம் உட்காரேன்.”
துருவன் உடனே தன்னுடைய கவசம், ஆயுதங்கள் இவைகளைப் பூமியில் வைத்துவிட்டு அவளுடைய பாதங்களின் அருகே உட்கார்ந்தான்.
“உன்னுடைய தாய் இருக்கிறாளல்லவா?”
“இல்லை, நிஷா ஜனங்களுடன் நடைபெற்ற யுத்தத்தில் அவள் கொல்லப்பட்டுவிட்டாள். அவள் என்மீது ரொம்பப் பிரியமாயிருந்தாள்.” இந்த வார்த்தைகள் அழகியினுடைய வாயிலிருந்து வரும் பொழுதே, அவளுடைய கண்களும் நீரைத் தாரை தாரையாக உகுக்க ஆரம்பித்தன. துருவனுடைய இதயமும் உருகிவிட்டது. அந்தக் கண்ணீரைத் தன் கைகளால் துடைத்துக்கொண்டே, “யுத்தம் ரொம்பக் கொடியது” என்றான்.
“ஆம். ஒரு விதத்திலா? நமது அன்புக்கு உரியவர்கள் எத்தனை பேரை இழக்க வேண்டியதிருக்கிறது!”
“இந்த யுத்தத்திற்கு முடிவே இல்லையா, இனிமேலும் தொடர்ந்து
கொண்டேதானிருக்குமா!”
துருவ! அது எப்படி நிற்கும்? ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை வேரோடு அழிக்காதவரை யுத்தம் நிற்குமா?”
“நிஷா-சமூகத்தார் திரும்பவும் எங்கள் மீது யுத்தம் ஆரம்பிக்கப் போவதாகக் கேள்விப்பட்டேன். துருவ! உன்னைப் போலொத்த வாலிபர்கள் தானே அங்குமிருப்பார்கள்?”
“உன்னைப் போலொத்த யுவதிகள் தானே குரு சமூகத்திலுமிருக்கிறார்கள்?”
“இப்படியிருந்தும் நாம் ஒருவரையொருவர் வெட்டிக் கொள்ளத் துணிகிறோம். இந்த நினைவுதான் இவர்களுக்கு எப்படி உண்டாகிறது?”
இன்னும் மூன்று நாட்களில் குரு - குலத்தின் மீது தனது நிஷா சமூகத்தார் யுத்தம் தொடுக்க நிச்சயித்திருப்பது துருவனுக்கு நினைவு வந்தது. இது ஞாபகத்திற்கு வந்தவுடன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள் அந்த யுவதி கூறினாள்;
“ஆனால் இப்போது நாங்கள் யுத்தம் செய்ய மாட்டோம்.”
“யுத்தம் செய்யமாட்டீர்களா? ஏன்? குரு சமூகத்தார் சண்டை செய்ய மாட்டார்களா?”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 41, புத்தகங்கள், யுத்தம், சமூகத்தார், பக்கம், குரு, கங்கை, வால்காவிலிருந்து, செய்ய, மீது, தானே, போலொத்த, எப்படி, அவள், ரோசனா, பெயர், சிறந்த, சூனு, அவளுடைய, “யுத்தம், நிஷா, துருவ