வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 333
சபதர்
காலம் : கி.பி. 1922
ஒரு சிறிய அழகிய பங்களா, அதன் முன் வாரந்தாவிலே பூந்தொட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் ரோஜாச் செடிகள் தங்களைச் சிவந்த ரோஜா மலர்களால் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. பங்களாவின்
பக்கத்திலே ஒரு சிறிய ‘பாட்மெண்டன்’ திடல். அதைச்சுற்றி உள்ள பசும்புல் தரையில் உலாவுவதே மகிழ்ச்சி அளிக்கக்கூடியது. பங்களாவின் மற்றொரு புறத்தில் ஒரு சிறு கொடி வீடு. பின்புறம் ஒரு அழகிய மேடை. நாள்தோறும் மாலையில் பாரிஸ்டர் சபதரின் நண்பர்கள் கூட்டம் அதே மேடையிலே நடைபெறும்.
பங்களாவின் வெளிச் சுவரிலே, ஒரு புது மாதிரியான பச்சைக் கொடிகள் படர்ந்து சுவரை மூடிக்கொண்டிருக்கும். சபதர் ஆக்ஸ்போர்டில் இம்மாதிரிக்கொடி படர்ந்த வீடுகளைப் பார்த்திருக்கிறார். அதே மாதிரி செய்ய வேண்டுமென்பதற்காகவே இந்தக் கொடிகளைத் தருவித்துச் சுவர்களிலே படரச் செய்தார். பங்களாவின் முன்புறத்தில், இரண்டு மோட்டார்கள் நிற்கக்கூடிய ‘காரேஜ்’ இருக்கிறது. சபதருடைய நடை, உடை, வாழ்க்கை முறை, பங்களா அமைப்பு, அலங்காரங்கள் யாவிலும் ஆங்கில முறை நிரம்பி இருந்தது. அவருடைய அரை டஜன் வேலைக்காரர்களும் உடை, பேச்சு, வேலை பார்க்கும் முறையிலும் கூட, ஒரு ஆங்கில ஆபீசரின் வேலைக்காரர்களைப் போலத் தோற்றமளித்தார்கள். அவர்களுடைய சிவப்பு டவலிலும், தலைப்பாகையிலும், எஜமானரின் பெயர் பின்னல் எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது. சபதர் சாஹிப்பிற்குச் சீமைச் சாப்பாட்டிலே அதிகப் பிரியம். அதற்காக மூன்று சமையற்காரர்கள் எப்பொழுதும் தயாராயிருந்தார்கள்.
சபதர் ‘துரை’ யாகவே காட்சியளித்தார். ஆகவே சகீனாவையும் வேலைக்காரர்கள் ‘மேம்சாகிப்’ என்றே அழைத்தார்கள். அவள்
தன்னுடைய வில் போன்ற புருவத்தில் அதிகமாக அடர்ந்திருந்த மயிரைச் சிரைத்துவிட்டு, மெல்லிய ரேகை போலாக்கி, அதன் கருமையை அதிகப்படுத்துவதற்காக மையும் பூசியிருந்தாள். பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை, அவளுடைய கை தானே உதடுகளில் ‘லிப்ஸ்டிக்’ கைத் தடவும். ஆனால் சகீனா, ஆங்கிலப் பெண்களைப் போலக் கவுன் உடுத்திக் கொள்வதை எப்பொழுதும் விரும்பியதில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 333, புத்தகங்கள், சபதர், பங்களாவின், பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, முறை, ஆங்கில, எப்பொழுதும், சிறிய, சிறந்த, அழகிய, பங்களா