வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 331
ஏற்பாடு செய்தான்.
நானாசாகிப் 1857ம் வருடம் ஜூன் மாதம் 5ம் தேதி ஆங்கிலேயருக்கு விரோதமாகக் கத்தி எடுத்தார். ஒன்றரை மாதங்கள் கழிவதற்குள், ஜூலை மாதம் பதினெட்டாம் தேதி அவர் ஆங்கிலேயரிடம் தோல்வியடைந்தார். காற்றின் போக்கை மங்களசிங் முன்கூட்டியே புரிந்துகொண்டான். என்றாலும், தான் உயிரோடிருக்கும்வரை சுதந்திரக் கொடியைக் கீழே போட அவன் விரும்பவில்லை. ஆங்கிலப் பட்டாளங்கள், அவதத்தின் கதியற்ற ஜனங்களைக் கொன்று குவிக்கத் தொடங்கினார்கள். பெண்களின் உயிரையும், மானத்தையும் பறித்தார்கள். இவைகளையெல்லாம் கேள்விப்பட்டபோது கூட, மங்களசிங் தன்னிடம் கைதியாயிருந்த ஆங்கிலேயர்களைத் துன்புறுத்தவில்லை.
மழைக்காலம் முடிவடைந்தபொழுது, அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் கலகக்காரர்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டார்கள். ஆனால், ரஹில் கண்டில் மங்களசிங் உறுதியாக நின்றான். ஆங்கிலச் சிப்பாய்களும், கூர்க்கசீக்கியச் சிப்பாய்களும் அவனை நான்கு புறமும் எதிர்த்தார்கள். சுதந்திரச்சேனையின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்தது. நிலைமையையும், எதிர் காலத்தையும் புரிந்து கொண்ட மங்களசிங் தனது சிப்பாய்களில் அநேகரை வீட்டுக்கு அனுப்பி விட்டான். ஆனால், மீரட்டிலிருந்து அவனோடு வந்த அந்த ஆயிரம் சிப்பாய்களில் ஒருவன் கூட அவனை விட்டுச் செல்ல விரும்பவில்லை. கடைசிக் காலத்தில் மீதியிருந்த அந்தச் சிறிய கோஷ்டியிலே, பிராமணன், க்ஷத்திரியன், ஜாட், ஹிந்து, முஸ்லீம் எல்லோரும்
தங்கள் வேற்றுமைகளை மறந்து ஒன்றாகச் சமைத்து ஒன்றாய்ச் சாப்பிடும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 331, மங்களசிங், புத்தகங்கள், அவன், கங்கை, பக்கம், வால்காவிலிருந்து, நான்கு, நல்ல, மாதம், விரும்பவில்லை, சிப்பாய்களில், அவனை, சிப்பாய்களும், காலத்தில், தேதி, நின்றான், என்றாலும், பெரிய, சிறந்த, அந்த, இவ்வளவு, ஆங்கில, தனது, அந்தச்