வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 320
“எத்தனை கொடுமை, எத்தனை அநியாயம்!”
“ஆனால் என் குருநாதர், ‘அந்நிய நாட்டாரின் இந்தக் கொடுமைக்காக என்மனம் கதறுகிறது. ஆனால், இந்தப் பழம் பசலிப்போக்கின் அழிவைக் கண்டு என் அறிவு சந்தோஷப்படுகிறது’ என்று சொல்கிறார்.”
“அப்படியானால், இரண்டிற்கும் இரண்டு பாதைகள் உண்டா?”
“ஆம்; இரண்டிற்கும் இரண்டுபாதைகள் தான் உண்டு, ஆனி! ஒரு தாய் பிரசவிக்கும்போது எவ்வளவு வேதனையை அனுபவிக்கிறாள்! அதே சமயத்தில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறாளல்லவா?
அழிவின்றிச் சிருஷ்டி நடக்காது. இந்தச் சிறிய சிறிய குடியரசுகளை உடைத்தெறியாமல் ஒரு பெரிய சக்தி வாய்ந்த குடியரசிற்கு அஸ்திவாரம் போட முடியாது. இந்தியர்களின் பக்தி, தங்கள் கிராமக் குடியரசோடு எல்லையிட்டிருக்கும்வரை, தேசபக்தியை--அகில இந்தியாவிற்காகவும் போராட வேண்டுமென்ற மனப்பான்மையைத் தோற்றுவிக்க முடியாது. இப்பொழுது ஆங்கிலேயர்கள் கப்பல், ரயில், தந்தி முதலிய இயந்திரங்களைத் தங்கள் வியாபார சௌகரியத்திற்காகவே இந்தியாவில் பரப்புகிறார்கள். ஆனால், ரயில் வண்டிகளைச் செய்வதற்கும், அவற்றை மராமத்துச் செய்வதற்காகவும், இந்தியாவின் இரும்பையும், நிலக்கரியையும் ஆங்கிலேய முதலாளிகள் உபயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்பொழுது, அங்ககேயே பொருள்கள் தயாரிக்கப்படுவதையும் எத்தனை நாளைக்குத் தடுத்து வைக்கமுடியும்? தங்கள் கண் முன்னால் விஞ்ஞானத்தின் வெற்றிகளைப் பார்த்த பிறகும், இந்திய மூளை எவ்வளவு நாளைக்குத் தூங்கிக் கொண்டிருக்கும் என்று மார்க்ஸ் கேட்பது சரியான நியாயந்தான்.”
“அதாவது இந்தியாவிலே தொழிற் பெருக்கத்தையும் முதலாளித்துவத்தையும் பரப்புவது சுலபம் என்று கருதுகிறாயா?”
“ஆம்; இங்கிலாந்திலே பிரபுத்துவ-ஜமீன்தார்களின் செல்வாக்கு அதிகமில்லையா?”
“ஆம்.”
“1832-ம் வருடத்துச் சீர்திருத்தச் சட்டம், இங்கிலாந்தின் ஆட்சிக்
கடிவாளத்தை முதலாளிகள் கையில் கொடுத்துவிட்டதா?”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 320, புத்தகங்கள், தங்கள், பக்கம், எவ்வளவு, வால்காவிலிருந்து, கங்கை, “ஆம், துணி, சிறிய, ரயில், நாளைக்குத், முதலாளிகள், இரண்டிற்கும், முடியாது, க்கும், எடுத்துக்கொள்வோம், சிறந்த, இந்தியாவிலிருந்து, தான்கள், வந்தன, எத்தனை