வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 279
“பாபா! இந்த ஐந்து வருடங்களுக்குள் எவ்வளவு பெரிய மாற்றம்? பசுமை நிலங்களிலே பால் நதி ஓடத் தொடங்கிவிட்டது.”
“சரியாகச் சொன்னீர்கள் பாபா ஞானதீன்! இப்பொழுது விவசாயிகளின் முகங்கள் பசுமையும், செழுமையும் பெற்றுத் திகழ்கின்றன.”
“ஆம், நிலங்கள் செழிக்கும் போது விவசாயிகளின் முகங்களும் செழிப்படைகின்றன.”
“நிர்வாகிகளும், கிராமத் தலைவர்களும் போய் விட்டார்கள். இந்த வியாபாரிகளும், லேவாதேவிக்காரர்களும் ஒழிந்து விட்டால் மகிழ்ச்சிச் சங்கு எங்கும் ஒலிக்கும்.”
“அதிகமாகக் கொள்ளையடிக்கிறார்கள். அந்தக் கொள்ளையிலிருந்து தான் பெரிய பெரிய கோவில்களும், சத்திரங்களும் மடங்களும் நடைபெறுகின்றன.”
“பணக்காரர்கள் இல்லாவிட்டால் தான தருமங்களும் நடை பெறாது என்று சொல்கிறார்கள். உண்மையில் பணக்காரர்கள் இருக்கும்வரை அதர்மத்தின் தட்டு நிறைந்து கொண்டே போகும்.”
“ஞானி பைகம்பர் (முஸ்லீம் கடவுள் தூதர்) மகரிஷி முனிவர்கள் இவர்களைவிடச் சிறந்த தர்மவான்கள் யார் இருக்க முடியும்? இவர்களில் யாரும் பணக்காரர்கள் இல்லையே? ஒரு துண்டு உடுத்தி மறுநாள் உணவுக்கின்றித் தானே வாழ்கிறார்கள்?”
“ஏழைகளின் வருமானத்தைச் சுரண்டி வாழும் பணக்காரர்களும், அரசர்களும் இருக்கும் வரை மனிதரிடையே சகோதரத்துவம் ஏற்பட முடியாது. மனிதனுக்கும்-மனிதனுக்கும் வேற்றுமை உண்டாக்குவது இந்த ஒன்று சேரும் பணம்தான். ஆனால் தொழிலாளர்களைச் சுரண்டாவிட்டால் அவர்களுடைய ஆடம்பரமும் சுகவாழ்வும் எப்படி நடைபெறும்?”
“இந்த விஷப் பற்களெல்லாம் பிடுங்கப்பட்டு, பூமியிலே அன்பின் ராஜ்யம் ஏற்படும் அந்த நாளைப் பற்றி நம்பிக்கை வைப்போம் நண்ப!”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 279, புத்தகங்கள், பெரிய, வால்காவிலிருந்து, பக்கம், சிறந்த, கங்கை, மனிதனுக்கும், விவசாயிகளின், பணக்காரர்கள்